377. தவநெறி தவறிய


ராகம் : ஆபோகி தாளம்: சதுச்ர துருவம் (14)
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடுசருவாநின்
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுதுவெனுமாறற்
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபடவுரகேசன்
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத்
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.

Learn The Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

தவநெறி தவறிய குருடுகள் ( thavaneRi thavaRiya kurudukaL) : The blind people who strayed away from the righteous path (the apostates); தவவழியை விட்டு விலகின குருடர்கள்,

தலைபறி கதறிய பர பாதத் தருமிகள் (thalaipaRi kathaRiya parapAthath tharumikaL) : the demagogues of other religions (like the ChamaNas) who boisterously thrust their tenets by plucking the hair of others; தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், பர பாதம் (para pAtham) : பிற மார்க்கத்து;

கருமிகள் வெகுவித சமயிகள் (karumigaL veguvitha samayigaL) : the evil-doers and various religious zealots - தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள்,

அவரொடு சருவா நின்று (avarodu saruvA ninRu) : Standing my ground fighting with all these people, ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்று. சருவு (saruvu) : to struggle, to fight;

அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனுமாறு அற்று (avan ivanuvan udan avaL ivaL uvaL athu ithu uthu enumARaRRu) : (I should realize that) It is something that cannot be denoted by any masculine, feminine or neutral pronouns, nor can it be described as someone or something far away, near or anywhere; அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும்
அவன், அவள் அது என்று சுட்டி காட்டப்பட்டு கருவி கரணங்களால் அளந்தறியப்படும் பொருள்கள் எல்லாம் தோன்றி அழியக் கூடியன என்பது குறிப்பு.
,

அரு உரு ஒழிதரு உருவுடை (aru uru ozhitharu uruvudai) : It is neither formless nor of any specific form; உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய

அதுபதி தமியனும் உணர்வேனோ (athupathi thamiyanum uNarvEnO) : It is what is called God; will I ever realise this truth? பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ?

குவலய முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட (kuvalaya muzhuvathum athirpada vadakuvadu idipada) : The entire earth was shaking and the Mount MEru in the North was shattered; உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட,

உரகேசன் கொடுமுடி பல நெரிதர (uragEsan kodumudi pala nerithara) : many of the thousand curved hoods of AdhisEshan, the great serpent, were crushed; சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, உரகேசன் (uragEsan) : king of serpents Adisesha;

நெடு முது குரை கடல் புனல் வறிதாக (nedu muthukurai kadalpunal vaRithAga) : water in the long, old roaring oceans dried up; முது (muthu) : old; நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக,

துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட (thuval kodu muRaiyidu surarpathi thuyarathu keda) : the miseries of IndrA, the Leader of the Celestials, who worshipped You ardently by offering flowers, were removed; அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, துவல் (thuval) : அர்ச்சனை பூக்கள்;

நிசி சரர் சேனை துகளெழ (nisi sararsEnai thugaL ezha) : and dust arose from the destroyed armies of the demons; அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ,

நட நவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.(nada navil maragatha thuragatham varavala perumALE.) : when You mounted the dancing, horse-like peacock of emerald-green hue and came (to the battlefield), Oh Great One! நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே. துரகதம் (thuragatham) : horse;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே