கந்த புராணம் : பகுதி 17
கந்தபுராணம் : பகுதி 12 கந்தபுராணம் : பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14 கநத புராணம் : பகுதி 15 கந்த புராணம் : பகுதி 16 இரணியன் புலம்பல் சூரன் இரு கூறாகி வீழ்ந்ததும், சேவலும் மயிலும் ஆகிச் செவ்வேளிடம் சென்றதும் கேட்டு கலங்கினான், கடலில் மீன் உருவத்தில் பதுங்கி இருந்த அவன் மைந்தனாகிய இரணியன். "ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்ட நீ ஒரு சேவலாகவும் மயிலாகவும் மாறிப் போனாயே! ஒரு நல்ல மகனாய் உனக்கு உதவாமல் போய் விட்டேனே" என்று கதறினான். துன்புற்ற மனத்தோடு குல குருவாகிய சுக்கிரனிடம் சென்றான்; அவரது அறிவுரைப்படி இறந்த தந்தையர்க்கும், தாயர்க்கும், உடன் பிறந்தார்க்கும், மற்றைய சுற்றத்தார்க்கும் முறைப்படி எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன் கழித்தான். திருச்செந்தூரில் நாழிக்கிணறு ஆறுமுகன் சூரனை வதம் செய்தது கதிர்காமம்! போர் வெற்றியை கொண்டாடும் தலம் திருச்செந்தூர். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான இந்த...