53. வரியார்
ராகம் : காம்போதி/சஹானா தாளம் : சதுச்ர ஜம்பை வரியார் கருங்கண் மடமாதர் மகவா சைதொந்த மதுவாகி இருபோ துநைந்து மெலியாதே இருதா ளினன்பு தருவாயே பரிபா லனஞ்செய் தருள்வோனே பரமே சுரன்ற னருள்பாலா அரிகே சவன்றன் மருகோனே அலைவா யமர்ந்த பெருமாளே.