உனைத் தினம் : J R விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song unai thinam ( உனைத் தினம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "உனைத் தினம்" என்று தொடங்கும் திருப்பரங்குன்றம் திருத்தலப் பாடல். மீண்டும், மீண்டும் அருணகிரிநாதர் மனித மனத்தில் பதிக்க நினைப்பது என்ன? எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்கிறோம் என்ற துல்லியமாக எடை போட்டு ,நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல். அவர் வாழ்க்கையையே படம் பிடித்துப் பாடம் நடத்தும் பாடல்கள். இந்தப் பாடலிலும் கடந்த காலக் கரடு முரடான வாழ்வைச் சொல்கிறார். பக்திப் பாதையில் நடந்ததில்லை. சக்தி பாலனை நெஞ்சில் வைத்து துதித்ததில்லை. சத்சங்கம் எதிலும் சேர்ந்ததில்லை. இடிபாடுகளுக்கிடையில், தரு ஒன்று துளிர்த்தது போல், முருக பக்தி உதிக்கிறது. ஆனால் அதற்குள் மரண பயம் எதிர்கொள்கிறது. முருகனை முழுவதுமாகச் சரண் அடைகிறார்.