பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள்
சைவத் திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.