நாத விந்து கலாதீ நமோநம
"நாத விந்து கலாதீ நமோநம". திருப்புகழின் இவ்வரிகளில் படைப்பின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது எப்படி என்று விரிவாக காணலாம். நவீன அறிவியல் “Matter – Energy – Space – Time” ஆகிய நான்கு கூறுகளே பிரபஞ்சத்தின் அடிப்படை (fundamental) அம்சங்கள் எனக் கூறுகிறது. அதேபோல், சைவ – சாக்த மரபின் ஆன்மிகக் கோட்பாட்டில் நாதம் (Nāda), பிந்து/விந்து (Bindu), மற்றும் கலா (Kalā) ஆகிய மூன்றும் படைப்பின் முதன்மை அடித்தளங்களாகக் கருதப்படுகின்றன. நாதம்: மூல ஒலி அதிர்வு நாதம் என்பது சப்த தத்துவம். நிலைத்த மௌனத்தின் முதல் அசைவு நாதம். அனாஹத நாதம் எனப்படும் இந்த நாதம் முதன்மையான ஒலியின் அதிர்வு (primordial sound vibration). அனாஹத நாதம் என்பது தட்டாமலோ, அடிக்காமலோ இயற்கையாக ஏற்படும் ஒலியைக் குறிக்கிறது. அனாஹதம் என்பது உணர்வு (Consciousness) என்பதின் இயக்கம் (dynamic aspect); மற்றும் அறிவையும் உணர்வையும் இணைக்கும் மையம் ஆகும். எளிதாகச் சொன்னால், நாதம் என்பது அசைவற்ற சைவத்தின் (stillness of Śiva) உட்பகுதியில் தோன்றும் அசைவு; மௌனத்திலிருந்து எழும் உயிரின் முதல் மூச்சு போன்றது. நாதம் தான் பி...