நாத விந்து கலாதீ நமோநம

"நாத விந்து கலாதீ நமோநம". திருப்புகழின் இவ்வரிகளில் படைப்பின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது எப்படி என்று விரிவாக காணலாம்.

நவீன அறிவியல்  “Matter – Energy – Space – Time” ஆகிய நான்கு கூறுகளே பிரபஞ்சத்தின் அடிப்படை (fundamental) அம்சங்கள் எனக் கூறுகிறது.

அதேபோல், சைவ – சாக்த மரபின் ஆன்மிகக் கோட்பாட்டில் நாதம் (Nāda), பிந்து/விந்து (Bindu), மற்றும் கலா (Kalā) ஆகிய மூன்றும் படைப்பின் முதன்மை அடித்தளங்களாகக் கருதப்படுகின்றன.

நாதம்: மூல ஒலி அதிர்வு 

நாதம் என்பது சப்த தத்துவம். நிலைத்த மௌனத்தின்  முதல் அசைவு நாதம். அனாஹத நாதம் எனப்படும் இந்த நாதம் முதன்மையான ஒலியின் அதிர்வு (primordial sound vibration). அனாஹத நாதம் என்பது தட்டாமலோ, அடிக்காமலோ இயற்கையாக ஏற்படும் ஒலியைக் குறிக்கிறது.  அனாஹதம் என்பது உணர்வு (Consciousness) என்பதின் இயக்கம் (dynamic aspect); மற்றும் அறிவையும் உணர்வையும் இணைக்கும் மையம் ஆகும்.

எளிதாகச் சொன்னால்,

நாதம் என்பது அசைவற்ற சைவத்தின் (stillness of Śiva) உட்பகுதியில் தோன்றும் அசைவு; மௌனத்திலிருந்து எழும் உயிரின் முதல் மூச்சு போன்றது.  நாதம் தான் பிரபஞ்சத்தின் முதலாவது வெளிப்பாடு — அதிலிருந்து மற்ற அனைத்தும் உருவாகின்றன.  ஒலி அதிர்வு ஆகாசம் (space) எனும் தளத்தில் மட்டுமே இயங்க முடியும். அதாவது, ஆகாசத்தில் நிகழும் இயக்கமே நாதம் எனலாம்.

விந்து: வெளிப்பாட்டின் விதைப்புள்ளி (The source of Manifestation)

விந்து (Bindu) என்றால் “புள்ளி (point)” அல்லது “துளி (drop)” என்று பொருள். இது படைப்பின் மூலக் கரு (seed of manifestation) ஆகும்.

விந்து என்பது உணர்வின் (Consciousness) மிகச் சுருக்கமான, செறிந்த வடிவம் (compact and concentrated form). படைப்பின் மையப் புள்ளி எனப்படும் விந்து சிவனின் வித்து (Śiva’s seed) எனக் கருதப்படுகிறது.

விந்துவிலே தான் அனைத்து சாத்தியங்கள் (all potentialities) உறங்கிக் கிடக்கின்றன. அது இன்னும் வெளிப்படாத நிலையில் இருக்கும் “மூல நுணுக்கம்” — ஒரு விதைக்குள் ஒரு முழு மரம் இருப்பது போல.

கலா/கலை

கலா (Kalā) என்றால் “கதிர்கள் (rays)” அல்லது “பகுதிகள் (parts)” என்று பொருள். வளர்பிறை என்பது அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சந்திரன் படிப்படியாக ஒளியுடன் தோன்றி பெரிதாகும் பருவம். தேய்பிறை என்பது பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரை சந்திரன் படிப்படியாக ஒளியிழந்து சிறிதாகும் காலத்தையும குறிக்கிறது.  புதிய நிலவில் எந்த கலையும் தென்படாது — அது மூல விதை நிலை (seed state, unconsciousness). முழு நிலவில் (Full Moon), 16 கலைகளும் பிரகாசிக்கும் — அது பூரண வெளிப்பாடு (full manifestation) அல்லது அறிவின் முழு வெளிச்சம் (complete awareness). கலை அனந்தம் (the Infinite) தன்னைப் பலவாக வெளிப்படுத்தும் வழி. உணர்வு பொருளில் (Matter) படிப்படியாக வெளிப்படுவதற்கு குறியீடு. சந்திரனின் ஒளி வடிவங்களான 16 சந்திர கலைகள் தெய்வீக உணர்வு (Divine Consciousness) பொருள்மயமான உலகில் (material world) வெளிப்படுவதை குறிக்கிறது. 

கலை என்ற மூலக்கூற்றில் சந்திரனுடன் ஒப்புமை ஏன்?

சந்திரன் (Moon) என்பது உணர்வு பொருளில் பிரதிபலிக்கும் (consciousness reflected in matter) கருத்துக்கு சிறந்த குறியீடு. சந்திரன் தன் ஒளியால் பிரகாசிப்பதில்லை; அது சூரியனிடமிருந்து ஒளியை (light from the Sun) பெற்றுத் தான் பிரகாசிக்கிறது.

அதேபோல், மனம் (Mind) அல்லது பொருள் (Matter) என்பனவும் தன்னிச்சையாக ஒளி வீசுவதில்லை; அவை உணர்வின் ஒளியை (Light of Consciousness) பிரதிபலிக்கின்றன.

அதனால் சூரியன் = பரிசுத்த சித்தம் (Pure Consciousness / Śiva). மற்றும் சந்திரன் = மனம் / பொருள் (Mind / Matter)

சூரியன் தன் ஒளியால் தானே ஒளிர்கிறது — அது சுய ஒளியுடையது (self-luminous). சந்திரன் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது — அதுபோல் மனமும் உணர்வை பிரதிபலிக்கிறது.

வேதாந்தம் இதை “Chidābhāsa” என அழைக்கிறது — அதாவது உணர்வின் பிரதிபலிப்பு (reflection of consciousness). 

கலா என்பது பிரபஞ்சத்தை வேறுபடுத்தும் கதிர் (differentiating ray).

அது ஒன்றான சித்தத்தை (Undivided Consciousness) “இதுவும் – அதுவும் (this and that)”, “முன் – பின் (before and after)”, “ஒன்று – பல (one and many)” என பிரித்துக் காட்டும் அறிவின் கதிர் (ray of differentiation).

புலன்களால் அறியக்கூடிய பிரபஞ்சம் தோன்றுவது மாயையின் செயல். 

சிவ-சக்தியான சுத்தத் தத்துவத்திலிருந்து அடுத்த கட்டமான சுத்த-அசுத்த தத்துவங்களுக்கு படைப்பு நகரும் பொழுது புருஷன் எனப்படும் ஆன்மா மாயையின் ஆவரண சக்தியால் காலம், நியதி, வித்யா, ராகம், கலா என்ற தத்துவங்களை நீங்காமல் எப்பொழுதும் ஒட்டியே கிடக்கும் சட்டைபோல் அணிந்து கொண்டு தனித்தன்மையை உணரத் தொடங்குகிறது; இதனால்தான் ஒரே பிரம்மம் பலவாகத் தோன்றுகிறது. இது தான் அசுத்த-சுத்த தத்துவம் — மாயை இன்னும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தவில்லை, ஆனாலும் வேறுபாடு தோன்ற தொடங்கியுள்ளது.

கலா (Kalā) என்பது ஆகாசத்தின் வழியாக (through space) செயல்படுகிறது. அது தான் வேறுபடுத்தும் கதிர் (the differentiating ray). அது ஒன்றான ஒளியை (undivided light) பல கதிர்களாகப் பிரிக்கிறது.

இதைக் குறிக்க ஒரு எளிய எடுத்துக்காட்டு: சூரிய ஒளி ஒரு பிரிசம் (prism) வழியாகச் செல்லும் போது, அது பல நிறங்களாகப் பிரிகிறது — சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை முதலியன. பிரிசம் தானாக நிறங்களை உருவாக்கவில்லை; அது ஒளிக்குள் இருந்த மறைந்த நிறங்களை (hidden potentials) வெளிக்கொணர்கிறது. அதுபோல் கலா என்பது அனந்த உணர்வில் (Infinite Consciousness) உள்ள பல்வேறு வெளிப்பாடுகளை வெளிக்கொணரும் கதிர். அதனால் தான் இதை “Differentiating Ray” என அழைக்கப்படுகிறது அது ஒன்றிலிருந்து பல வெளிப்பாடுகளை உருவாக்கும் முதல் சக்தி.

ஆவரண சக்தியின் இன்னொரு பரிமாணம் தான் காலம் (நேரம்) — ஆனால் தத்துவத்தில் அது சாதாரண “நேரம்” அல்ல. இது அளவிடும் சக்தி (Principle of measurement), வரிசை (sequence), மற்றும் மாற்றம் (change) ஆகியவற்றை குறிக்கிறது. காலம் இல்லையென்றால் “முன் – பின்" என்ற பாகுபாடு கிடையாது. பிறப்பு – மரணம், வளர்ச்சி – சிதைவு என்பவை எல்லாம் ஏற்படாது. எனவே காலம் (Kāla) என்பது மாயா சக்தியின் (Māyā-Śakti) ஒரு வடிவம். அது அனந்தத்தை (Infinite) “வரம்புள்ளதாக (finite)” தோற்றமளிக்கச் செய்கிறது.

எல்லா உயிர்களும், எல்லா உருவங்களும் நாதம் (Nāda), பிந்து (Bindu), மற்றும் காலம் (Kāla) ஆகிய மூன்று சக்திகளின் இணைவு (interplay) மூலம் தோன்றுகின்றன.

பிந்து என்பது விதை (Seed) — அனைத்தும் அதிலே சுருக்கமாய் இருக்கின்றன.

நாதம் என்பது அதிர்வு (Vibration) — விதையில் உயிரைத் தட்டிச் செயலில் ஈடுபடுத்தும் ஆற்றல்.

காலம்  என்பது நேர ஆற்றல் (Time–Energy) — அந்த விதை மெதுவாக வெளிப்பட்டு, வளர்ந்து, உயிராக உருவாகும் நிலையை அளிக்கும் சக்தி.

இம்மூன்றும் சேர்ந்து தான் உயிர்ப்பின் மூவுருவ அடித்தளம் ஆகின்றன. ஆனால் முருகன் (Murugan) — திருப்புகழில் “நாதம் கடந்தவர், பிந்து கடந்தவர், கலா கடந்தவர் எனக் போற்றப்படுகிறார். அதாவது, இம்மூன்று படைப்பின் கூற்றுக்களுக்கும் ஆதாரம் (Source beyond creation) தான் முருகன் —அவன் தான் ஆதி (Ādi), ஆரம்பமற்ற ஆரம்பம் (beginningless beginning).


Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

ஏறுமயில்