Posts

Showing posts with the label கமல மாதுடன்

24. கமல மாதுடன்

ராகம் : ஆனந்த பைரவி அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2 கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே அறியு மாறுபெ ரும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்