24. கமல மாதுடன்


ராகம்: ஆனந்த பைரவிஅங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில்இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில்மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின்அருள்தானே
அறியு மாறுபெ ரும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கியஅடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலிஎமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கரகணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள்இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறைபெருமாளே.

Learn the Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

கமல மாதுடன் இந்திரையும் சரி சொ(ல்)ல ஒணாத மடந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் (kamala mAthudan inthiraiyum sari sola voNAtha madanthaiyar santhana kaLaba seethaLa kongaiyil angaiyil ) : The call women, incomparable even to Saraswati and Lakshmi, with their breasts and hands smeared with sandalwood paste and other fragrant and cool lotions; கமல மாது(kamala madhu) : the lady on the lotus or Saraswati; இந்திரை (Inthirai) : Lakshmi;

இரு போது ஏய் களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு கரிய ஓதியில் இந்து முகம் தனில் மருளாதே (irupOthEy kaLavu nUl theri vanjanai anjana vizhiyin mOgitha kantha sugam tharu kariya Othiyil inthu mugam thanil maruLAthE) : I spend my day and night with these women; their kohl-lined eyes have perfected the art of stealth and deception, but instead of being seduced by their enticingly fragrant and dark hair and their moon-like faces,

அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் (amalam Agiya sinthai adainthu agal tholaivu ilAtha aRam poruL inbamum adaiya Othi uNarnthu thaNanthapin ) : I want to acquire blemishless thoughts, learn wide and endless range of epics elucidating the fundamentals of DharmA, Arththa and KAma, and after snuffing out desires; மாசு அற்ற மனதை அடைந்து பரந்துள்ள முடிவில்லாத அறம், பொருள், இன்ப நூல்களை முழுவதும் நன்கு கற்று உணர்ந்து (ஆசைகள்) அடங்கிய பின்னர், அகல் = அகன்ற, விரிந்த; தொலைவிலாத = அழிவு/முடிவு இல்லாத;

அருள் தானே அறியுமாறு பெறும் படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய் (aruL thAnE aRiyumARu peRumpadi anbinin iniya nAtha silambu pulambidum aruNa Adaga kiNkiNi thangiya adithArAy ) : realize the Truth with the grace of your holy feet adorned with anklets making melodious sound of love with the reddish-golden beads in them!

குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி (kumari kALi bayangari sangari gavuri neeli parambarai ambigai kudilai yOgini saNdini kuNdali emathu Ayi) : She is Kumari, the perennially youthful virgin; she is the dark complexioned KALi; She is 'bhayam hari' or bhayankari, the destroyer of all fears; She is 'Shankari', who gives happiness to all souls; She is golden-hued and blue complexioned; She is the cosmic energy supreme to all energies or all the matter in the Universe; She is 'Ambigai', the Mother of the Universe; She is 'kudilai' - which represents maya or illusion in the purest form; She is Yogini; She is 'chandini', the fierce goddess; She is the Kundalini power; she is our mother; குடிலை = சுத்த மாயை;

குறைவிலாள் உமை மந்தரி அந்தரி (kuRaivilAL umai manthari anthari ) : She has no wants; she is Uma, She grants heaven or 'moksha'; she is eternal ('anthari'); மந்தரி(manthari) : சொர்க்கத்தை அருள்பவள்; மந்த்ரம் = சொர்க்கம்;

வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள் குமர (vegu vitha Agama sunthari thanthu aruL kumara ) : She is the beautiful One worshipped by all the SivA AgamAs (foremost scriptures). She is PArvathi who delivered You, Oh KumarA!

மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் ( mUshikam unthiya aingara gaNarAyan) : The five-armed, Chief of ganas carried by the big rat (MUshikam); கணராயன் = கணங்களுக்கெல்லாம் தலைவன்;

மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே (mama vinAyagan nanjumizh kanjugi aNi gajAnana vimban or ambuli mavuliyAn uRu sinthai uganthu aruL iLaiyOnE) : our beloved VinAyaka who wears the poisonous cobra as a belt around His waist; the elephant-faced ('gajanana') wearer of crescent moon on the crown of the head; the beloved, cherished younger brother of Vinayaka; விம்பன் = ஒளியை உடையவர்; ஒரு அம்புலி மவுலியான் = ஒப்பற்ற பிறைச் சந்திரனைச் சடைமுடியில் தரித்துக் கொண்டுள்ளவருமான விநாயமூர்த்தி; மவுலி = சடைமுடி;

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய (vaLarum vAzhaiyum manjaLum injiyum idai vidAthu nerungiya ) : Tall plantain trees, turmeric plants and ginger plants grow densely,

மங்கல மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே. (mangala magimai mAnagar senthilil vanthuRai perumALE.) : and make this great city of ThiruchchendhUr auspicious and majestic, a place that is Your favourite abode, Oh Great One!




Comments

  1. Excellent work done in transferring the nectar to the web !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே