66. கரிய பெரிய
ராகம் : மோஹனம் ஆதி திச்ர நடை (12) கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் தரவேணும்