66. கரிய பெரிய

ராகம்: மோஹனம் தாளம்: ஆதி திச்ர நடை (12)
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடியதிரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகியெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவியணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள்தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளுமுருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழனி யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரியை கிரியையெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடையபெருமாளே

Learn The Song


kariya periya erumai kadavu kadiya kodiya thirisoolan
kaRuvi iRugu kayiRo duyirgaL kazhiya mudugi ezhukaalan
thiriyu nariyum eriyum urimai theriya viravi aNugaadhE
seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL tharavENum
pariya varaiyin arivai maruvu paramar aruLu murugOnE
pazhana muzhavar kozhuvil ezhudhu pazhaiya pazhani amarvOnE
ariyum ayanum veruva uruva ariya giriyai eRivOnE
ayilu mayilum aRamu niRamum azhagum udaiya perumaaLE.

Paraphrase

கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரி சூலன்(kariya periya erumai kadavu kadiya kodiya thirisUlan) : Riding a huge black buffalo and holding a stern and tyrannical trishul

கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம்(kaRuvi iRugu kayiRodu uyirgaL kazhiya mudugi ezhukAlan): when Yama approaches fast, angrily tightening the noose and taking away lives – at that time

திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே (thiriyu nariyum eriyum urimai theriya viravi aNugAdhE ): to prevent roaming foxes and fire approaching me speedily and fighting over their right to consume my body

செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும்(seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL tharavENum ): Kindly grant me Your sacred consummate, omniscient and kinsman feet

பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே(pariya varaiyin arivai maruvu paramar aruLu murugOnE): Lord SivA, who married PArvathi, the daughter of Himagiri, the loftiest mountain, blessed us with You, Oh Muruga! பரிய(pariya): big, tall; வரை(varai): Mountain; வரையின் அரிவை(varaiyin arivai): mountain's daughter, Parvati

பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே(pazhanam muzhavar kozhuvil ezhudhu pazhaiya pazhani amarvOnE): You are seated in good old Pazhani where farmers plough the fields with yoked oxen; பழனம் (pazhanam): field; கொழுவில் = ஏர்கால் கொண்டு; எழுது = அழுந்திப் பதிய உழுகின்ற

அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே(ariyum ayanum veruva uruva ariya giriyai eRivOnE ): Vishnu and BrahmA were scared when You pierced the rare Mount Krouncha with Your spear!

அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே(ayilu mayilum aRamu niRamum azhagum udaiya perumALE.): You possess the Spear, the Peacock, the Valour, the Brightness and the Beauty, Oh Great One!

.

No comments:

Post a Comment

எழுபிறவி — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song muttup pattu ( எழுபிறவி ) in English, click the underlined hyperlink. முன...

Popular Posts