1. சீர்பாத வகுப்பு (Seerpada Vaguppu)
Learn the Song
In Ragam Kavadi Sindhu
In Ragam Sindhu Bhairavi
In Ragam Bhoopalam
Paraphrase
The Vaguppu form of poetry has a theme/subject at its core, and all of its stanzas describe the traits, attributes, and essential qualities of that subject. Only the last stanza of the poetry announces the subject about which the descriptions have so far been given. In seerpada vaguppu, Arunagirinathar describes the splendour of Lord's twin feet, its grandeur, magnanimity and power. Seer stands for prosperity, wealth, beauty, gracefulness and excellence. Seer padam means illustrious feet. The poem describes various accomplishments, feats and triumphs and finally attributes them To His feet. The feet here are the symbolic/metaphoric descrption of the Brahman. முருகனின் பாதங்களின் பெருமையை பற்றி விவரிக்கும் பாடல் இது.
When the deluge occurs at the end of the yuga, all lives and all smaller universes or 'andams' in the 'pErandam' collapse, dissolve, and merge into Prakriti and emerge from it when cosmic creation starts again. Lord's feet are the bright light that dispel the darkness of the entire universe when the infinite cyclic creation phase begins at the start of the new yuga. யுக முடிவில் சம்ஹாரத்திற்கு பிறகு சிருஷ்டி தொடங்கும் காலத்தில், பிரணவத்தின் நாதம் ஒலிக்கும் நீர் சூழ்ந்த கடலின் நடுவில் கோடிக் கணக்கான சூரியர்கள் ஒரே சமயத்தில் உதயமாவது போல, சுத்த மாயையாகிய மயிலின் மேல் அமர்ந்திருக்கும் பரிபூரண ஞானமாகிய முருகனின் திருவடி அகண்ட இருளை ஒழித்து பேரொளியைப் பரப்புகிறது.
உததி இடை கடவும் மரகத அருண குல துரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயம் என (udhadhi idai kadavum maragatha varuNa kula thuraga upalaLitha kanaka ratha sathakOti sooriyargaL udhayam ena )
(O Muruga! Your Feet) Which rise from the emerald green ocean like the dazzling light from thousand millions of suns sitting on a golden chariot driven by seven fast, multi-hued and pedigreed horses; மரகத (maragatha) : emerald; அருண (aruNa ) : red; உததி (uthadhi ) : ocean; கனக ரத (kanaga ratha ) : golden chariot; பொன் மயமான தேரில்; குல துரக (kula turaga ) : horses of good breed; உயர்ந்த ஜாதியைச் சார்ந்த குதிரைகள் பூட்டப்பட்ட; உப லளித – வனப்பு வாய்ந்த, ,
The seven horses can be conceived as the seven colors comprising the white light of the sun; or they may be thought of as the Sapta Swaras originating from the “Dumru” of Lord Shiva. In fact the first musical note Shadja ('sa') generates the other six notes.
அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும் ( adhikavidha kalaba gaga mayilin misai uga mudivin iruL agala orujOthi veesuvadhum ) : emitting a bright light and dissipating the darkness at the end of the yuga when You come riding on top of a multi-hued peacock; அதிக வித கலப கக மயிலின் மிசை ( athiga vitha kalabha gaga mayilin misai) : on a peacock that has indescribably beautiful and multiple-hued plumes; கலப – தோகை; கக(ம்) – பறவை;
Lord's feet are what the Yogis who surrender themselves and get absorbed in the blissful trance of Shiva Anubhuti seek and look into their hearts with their spiritual eyes;
உடலும் உடல் உயிரும் நிலைபெறுதல் பொருள் என உலகம் ஒருவி வரும் மநுபவன சிவ யோக சாதனையில் ஒழுகும் அவர் (udalum udal uyirum nilai peRudhal poruL ena ulagam oruvi varum manubavana sivayOga saadhanaiyil ozhugum avar )
Believing that the ultimate objective should be to attain redemption while there is life permeating the body – Sadeha-mukti, which is mukti along with the body (i.e., there is realization at the time of departure from the body), the yogis practice Shiva Yoga, which is the repository of sadakshara mantra;
Ultimate purpose of any spiritual discipline is to attain immortality and realize his own eternal existence by freeing the imperishable soul imprisoned in the body by the three gunas, the five senses of perception and the mind. ("I am not the mind, chitta, ahamkara, buddhi or the organs of perception - ears, skin, nose or eyes, the 5 sheaths of consciousness, but the satchidananda form of Siva, which is pure consciousness and bliss" - "chidananda rupah shivo'ham shivo'ham" - nirvana shataka)
We believe the mind the to be 'I' and lose ourselves in the mire of experiences of the mind. But the yogis remain awake in the in the timeless space ('Chitaskasha') where there is no day or night; only the primordial sound of 'om', which is the progenitor of all mantras. That is the siva yoga.
உலகம் ஒருவி ( ulagam oruvi ) : after ridding the attachment to the world; மநு பவன (manu bavana) : மந்திரங்களுக்கு இருப்பிடமான, சிவ யோக சாதனையில் (sivayoga sAthanaiyil) : சிவ யோக பயிற்சியில்; உயிர் நிலை பெறுதல் (uyir nilai peRuthal) : Yogis who reach highest levels of consciousness can attain 'mukti' or liberation with their physical bodies. அழிவு பெறாது நிலைத்திருத்தல்;
யோகிகள் இந்த பூத உடம்புடன் முக்தி அடைவார்கள் என்பதை இந்தச் சடமுடன் உயிர் நிலை பெற ('எந்தத் திகையினும்' என்ற பாடலில்) என்ற அடிகள் மூலம் அருணகிரியார் ஆமோதிக்கிறார்.
பிறிது பரவசம் அழிய விழி செருகி உணர்வு விழி கொடு நியதி தமது ஊடு நாடுவதும் ( piRidhu paravasam azhiya vizhi serugi uNarvu vizhi kodu niyadhi thamadhoodu naaduvadhum)
learning to abide in the Self, with their attention drawn away from worldly pleasures and focussed between the eyes, and the thoughts centered on the heart (seat of emotions), as prescribed by rules, and seek (Your feet); பரவசம் = பேரின்பம்
மெய்மறந்த நிலை; பரவசம் பிறிது அழிய = கருவி கரணங்கள் வசம் வெளிபட்டுக் கொண்டிருக்கும் நிலமை கெட; being in ecstasy and shunning sensory enjoyment; உணர்வு விழி refers to the inner eye/vision that can experience spiritual perceptions; scientifically, third eye refers to partially dormant pineal gland, which resides between the two hemispheres of the brain. விழி செருகி (vizhi serugi) : eyes rolled and tucked up;
உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும் உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற ( uru enavum aru enavum uLadhenavum iladhenavum uzhaluvana parasamaya kalai aaravaaram aRa)
They go beyond the theologists of various religions, who argue : 'it is there, it is not there, it is with form, it is not with form'. They are beyond the reach of the warring religious demagogues.
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும் ( urai avizha uNarvavizha uLam avizha uyir avizha uLapadiyai uNarum avar anuboothi aanadhuvum )
and they (Thy feet) stay in the Hearts of Jnanis who are totally absorbed in the boundless super consciousness called Shiva and become speechless, expand their limited minds and bodies, and become one with the Universal Consciouness; they experience the boundless joy of Thy feet; உளபடியை = எப்போதும் சாஸ்வதமாய் திகழும் மெய்ப் பொருளை, அநுபூதி ஆனது = அனுபவ ஞானமாய் விளங்கி நிற்பது;
Lord Murugan's feet are akin to the boat that transport souls from the ocean of birth; they are indestructible and are my goal and destination.
உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம் உருவுடைய மலினம் பவம் சல ராசி ஏற விடும் உறுபுணையும் ( uRavumuRai manaivi magavu enum alaiyil enadhidhaya uruvudaiya malina bava jalaraasi ERavidum uRupuNaiyum)
(Your twin feet)are the strong raft in the sea of Samsara of forms and sins; I can get into this raft and escape the waves of attachment to wife, family and children; பவ சல ராசி (bava jala raasi) : the ocean of birth, the ocean of samsara; மலினம் (malinam) : sins; உறு புணை (uRu puNai ) : strong raft; பவம் ( bavam) : state of being, existence, birth; பவ சல ராசி ஏறவிடும் – பிறவிக் கடலில் இருந்து ஏறச் செய்யும்;
அறிமுகமும் உயர் அமரர் மணி முடியில் உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும் (aRimugamum uyar amarar maNimudiyil uRaivadhuvum ulaiviladhum adiyEn manOrathamum) : They are the gateway to the world of knowledge; they reside in the crowns of the righteous celestials; they are indestructible and are my goal; உலைவிலதும் (ulaiviladhum ) : indestructible; அறிமுகமும் = ஞான உலகத்திற்கு வாயில் போன்றதும், மணி முடியில் = மகுடம் தரித்த தலைகளில்;
Lord's feet dance on the chest of Shiva, which Uma Devi hugs, and gladdens His heart;
இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகண் அரவு இம கிரண தருண உடுபதி சேர் சடா மவுலி இறை மகிழ (idhazhi vegu muga gagana nadhi aRugu thaRukaN aravu imakiraNa tharuNa udu pathi sEr jadaamavuli iRai magizha)
Gladdening the heart of Shiva who wears the laburnum flower, the river Ganges with many disributaries, the grass (arugam pul), the snake vasuki and the cool moon on His head; வெகு முக ககன நதி (vegu muga gagana nadhi ) : the river in the sky with several branches distributaries; உடுபதி (udupathi) : the moon, the leader of all the stars; இமகிரண தருண உடுபதி (imakiraNa tharuNa udu pathi ) : the youthful moon with cool rays; தருண (taruNa) : young; தறுகண் அரவு (thaRukaN aravu ) : fearless and brave snake (Vasuki);
உடை மணியோடு அணி சகல மணி கலென இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும் (udaimaNiyodu aNi sakalamaNi galena imaiyamayil thazhuvum oru thirumaarbil aaduvadhum )
(Lord's feet) dance with tinkling sounds on the chest of Shiva wearing Indian labubnum, Ganga, crescent moon in His matted locks, and on whose chest the peahen of Himalaya, the consort of Shiva, clings; இமைய மயில் (imaiya mayil ) : the peacock of the Himalayas, Parvati; உடை மணியோடு அணி சகல மணி = அரைமணியுடன் அணிந்துள்ள தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை ஆகிய எல்லா ஆபரணங்களும்,
இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு எரி புகுத உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும் எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடு இடிய இளைய தளர் விளையாடல் கூருவதும் (imaiyavargaL nagaril iRai kudipugudha nirudhar vayiRu eri pugudha uragarpathi abishEkam aayiramum ezhupilamum neRu neRena muRiya vadakuvadu idiya iLaiya thaLar nadai pazhagi viLaiyaadal kooruvadhum)
As thy young feet toddles, Indra, the celestial chief regains entry to his home land, the asuras' stomachs experience burning, the thousand hoods of Adisesha and the seven patalas crush and the Meru mountain gets shattered;
இமையவர்கள் நகரில் இறை குடி புகுத (imaiyavargaL nagaril iRai kudipugudha ) : For Indra to live in Indraloka; இமையவர்கள் ( imaiyavargaL ) : those who do not blink, Devas; உரகர்பதி (uragarpathi) : king of serpents, Adisesha; வடகுவடு (vadakuvadu ) : the mountain in the North; the Meru mountain; பிலம் (bilam) : abyss, பாதாளம்; அபிஷேகம் (abishekam) : crown, கிரீடம்;
Murugan's feet are what competed with Ganesa when the Lord flew on the back of the peacock in a second to win the pomegranate fruit from Siva! The peacock's rapid pace distresses oceans and mountains on the earth.
இனிய கனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும் இலகு வெகு கட விகட தட பார மேருவுடன் இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும் (iniya kani kadalai payaRu odiyal pori amudhu seyum ilagu vegu kata vikata thada baara mEruvudan igali mudhu thigiri giri neriya vaLai kadal kadhaRa ezhu buviyai oru nodiyil valamaaga Oduvadhum) :
Competing with meru-like Ganesha who is uniquely beautiful with masth water flowing down the cheeks and who consumes sweet fruits, pulses like kadalai and payaru, split tender palmyra roots and puffed rice, thy feet go round the seven worlds in a trice such that the old chakravala mountain gets strangulated and the sea that circles round the earth wails; 'kadam' means secretion trickling from an agressive musth elephant; ஒடியல் = பனங்கிழங்கின் பிளவு; வெகு கட விகட தட பார மேருவுடன் = அதிகமாக பாயும் மத நீரையும், விசித்திரமான அழகும் உள்ள, பரவிய மகிமை உள்ள மேரு மலை போன்ற கணபதியுடன்,
Lord's feet walk on the millet fields populated by wild animals in the dense forests of Vallimalai, where your consort Valli is guarding the millets from the parrots;
எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை இரலை மரை இரவு பகல் இரை தேர் கடாடவியில் எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய இனிது பயில் சிறுமி வளர் புனம் மீது உலாவுவதும் (eRuzhi puli karadi ari kari kadamai varudai uzhai iralai marai iravu pagal irai thEr kadaataviyil eyinar idum idhaN adhanil iLagu thinai kiLi kadiya inidhu payil siRumi vaLar punameedhu ulaavuvadhum)
Thy feet walk on the thinai field where wild animals like boars, tigers, bears, lions and elephants roam, to meet the young, hunter girl Valli, who would sit on the high platform (இதண் ) and guard the millet crops by chasing away parrots from eating the lush thinai, by singing alolam melodiously; எறுழி (eRuzhi ) : wild boar; அரி (ari ) lion; கடமை (kadamai ) : wild cow; வருடை (varudai) : mountain goats; உழை (uzhai ) : deer; இரலை, மரை (iralai, marai ) : kinds of deer; எயினர் ( eyinar) : tribe of hunters living in forests; இனிது பயில் ( inidhu payil ) : singing sweetly (alolam); புனம் (punam ) : thinai (a kind of millet) field;
Lord's feet are my protector when the god of death Yama comes with his whip riding on an ox; கடாடவி (கடம் + அடவி) (kadaatavi = thick forest; (கடம் = முறைமை, அறத்தொடு நிற்றல்; பக்திப் பயிரை வளர்க்க, காமம் குரோதம் போன்ற பறவைகளை வைராக்கியம் என்னும் கவணில் முருகக் கடவுளின் திரு நாமாக்கள் என்னும் கற்களை வைத்து பறவைகளை துரத்துகிறாள் வள்ளிப் பிராட்டி. முறைமை தவறாமல் பக்தி செய்பவரை முருகன் வலிய ஆட்கொள்வார். கடம் also means righteous conduct. Protecting the millet field means shielding the mind against lust, greed and other such vices and letting the crop of devotion grow luxuriantly;
முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு முதுவடவை விழி சுழல வரு கால தூதர் கெட முடுகுவதும் ( mudhala vinai mudivil irupiRai eyiRu kayiRu kodu mudhu vadavai vizhi suzhala varu kaala dhootharkeda muduguvadhum
Thy feet chase away Yama's messengers, who arrive with their teeth curved like the crescent moon and with their eyes spinning like the vadavamukhagni fire. They fling the noose (pasa kayiru to carry away the life which ends when the effects of Karma that is the cause of birth ends; முதலவினை முடிவில் (mudhala vinai mudivil) : at the end of life when the prarabdha karma, which causes birth, ends; முதலவினை என்பது பிராரப்த கர்மா. இது ஓர் ஆன்மா பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மொத்த வினைகளான சஞ்சித கர்மாவின் ஒரு சிறு பகுதியாகும். பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் தற்போதைய பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய கர்மாவே பிராரப்த கர்மாவாகும்.
இரு பிறை எயிறு (irupiRai eyiRu) : teeth curved like the crescent moon; முது வடவை விழி சுழல (mudhu vadavai vizhi suzhala) : eyes twirling like the old vadavamukhagni (fire under the water at the end of the yuga); கால தூதர் கெட (kaala dhoothar keda ) : driving away the messengers of Yama;
அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை முடிய வருவதும் அடியர் பகைகோடி சாடுவதும் (aruL neRiyil udhavuvadhum ninaiyum avai mudiya varuvadhum adiyar pagai kOti saaduvadhum
thy feet help people to lead divine lives, make the thoughts translate to action and bear fruition, and destroy the enemies (both internal enemies like greed, etc., and external enemies);
மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது குறு முறியும் மலர் வகுள தள முழு நீல தீவரமும் முருகு கமழ்வதும் ( mogumogena madhubam mural kuravu viLavinadhu kuRu muRiyum malar vakuLa dhaLa muzhuneela theevaramum murugu kamazhvadhum ) :
அகில முதன்மை தருவதும் விரத முநிவர் கருத அரிய தவம் முயல்வார் தபோ பலமும் (akila mudhanmai tharuvadhum viratha munivar karudha ariya thava muyalvaar thapO balamum ) :
முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக குமர சரணம் என அருள் பாடி ஆடி மிக மொழி குழற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் வருக என அறை கூவி ஆளுவதும் (muruga saravaNa magaLir aRuvar mulai nugarum aRumuga kumara saraNam ena aruLpaadi aadi miga mozhi kuzhaRa amudhu thozhudhu urugumavar vizhi aruvi muzhuguvadhum varugavena aRaikoovi aaLuvadhum) In the following line, saint-poet Arunagirinathar asserts his prerogative as Murugan's hereditary slave, who carried this unique position of a slave in all his past births, a fact which Murugan made known to the world by wearing as garland his nectar-like poems, which were sung in a state of divine ecstasy.
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும் உலகறிய ( mudiya vazhi vazhi adimai enum urimai adimai muzhudhum ulagaRiya) மழலை மொழி கொடு பாடும் ஆசு கவி முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இத மவுன முகுள பரிமள நிகில கவி மாலை சூடுவதும் ( mazhalai mozhi kodu paadum aasu kavi mudhala mozhivana nipuNa madhupa mugar idha mavuna muguLa parimaLa nikila kavimaalai sooduvadhum) In the following lines, Arunagirinathar describes Muruga as the nephew of Lord Vishnu and the son of Goddess Parvati, and concludes that the subject of all the actions described earlier is the holy twin feet of Lord Muruga.
மதசிகரி கதறி முது முதலை கவர் தர நெடிய மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதி மூலமே என வரு கருணை வரதன் ( madha sikari kadhaRi mudhu mudhalai kavar thara nediya madu naduvil veruvi oru visai aadhimoolam ena varu karuNai varadhan) இகல் இரணியனை நுதி உகிரின் வகிரும் அடல் அரி (igal iraNiyanai nudhi ugirin vagirum adal ari vadivu kuRaL vadivaagi maa baliyai valiya siRai ida ) குறள் வடிவாகி மாபலியை வலிய சிறை இட வெளியின் முகடு கிழி பட முடிய வளரு முகில் ( kuRaL vadivaagi maa baliyai valiya siRai ida veLiyin mugadu kizhi pada mudiya vaLaru mugil) நிருதன் இருபது வாகு பூதரமும் மகுடம் ஒரு பதும் முறிய அடு பகழி விடு குரிசில் மருக (nirudhan irubadhu vaagu boodharamum makudam orupadhum muRiya adu pagazhi vidu kurisil maruga)
நிசிசரர் தளமும் வரு தாரகாசுரனும் மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன் நீலகிரி மருவு குருபதி ( nisicharar dhaLamum varu thaarakaa suranum madiya malai piLavu pada makara jalanidhi kuRugi maRugi muRaiyida muniyum vadivElan neelagiri maruvu gurupathi )
யுவதி பவதி பகவதி மதுர வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை வநிதை அபினவை அநகை அபிராம நாயகி தன் மதலை ( yuvathi bavathi bagavathi madhura vachani bayiravi gavuri umaiyaaL thrisoola dhari vanajai madhupathi amalai vijayai thiripurai punidhai vanithai abinavai anagai abiraama naayaki than madhalai )
மலைகிழவன் அநுபவன் அபயன் உபய சதுர் மறையின் முதல் நடு முடிவின் மணநாறு சீறடியே ( malai kizhavan anubavan abayan ubaya chathur maRaiyin mudhal nadu mudivin maNanaaRu seeRadiyE)
Thy feet is the place over which the siddhas buzz like bees; thy feet is perfumed with the fragrance from kura flower, the young leaves of viLa tree (wood apple), young shoots and flowers of vakuLa tree (English: Bullet wood), karungkuvalai and sengkuvalai flowers; விளவினது குறு முறியும் (viLavinadhu kuRu muRiyum) : young shoots of viLa tree, முழு நீலம், தீவரமும் (muzhuneela theevaramum ) : karungkuvalai and sengkuvalai flowers; முருகு (murugu) : fragrance; மணம், இளமை, அழகு; முரல் (mural) : sound, ஒலி, இசை
Thy feet confer exalted status in worldy matters as well as the coveted liberation (mukti), which is out of reach of even those sages who perform penances and meditation;
They call out 'welcome', assuring protection to devotees who cry out 'Muruga, Saravana, Arumuga who suckles the breasts of the six Krittika maidens, Kumara, give me your refuge' with quivering voices and worship you;
I have been Your slave, engaged in divine service for several generations in all my births; You have made it known to the world
by adorning Thy feet with the fragrant garland of poems sung spontaneously by me in sweet words as 'aasu kavi' in a state of divinely sweet silence; these poems are eagerly sought by hordes of poets, just like the bees that crowd around the nectar-containing flowers; பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே(அநுபூதி) நிபுண மதுபம் (nipuNa madhubam ) : expert bees; here, the knowdedgeable poets; மவுன முகுள பரிமள (mavuna mukuLa parimaLa) : மவுனம் அரும்பிய நிலையிலிருந்து கூறும் மணம் வீசுகின்ற,
The kind Lord (Vishnu) who rushes to save the scared mountain-like elephant who cries aloud "Adimoola" when seized by a huge crocodile in the middle of a lake, மத சிகரி (madha sikari) inebriated/intoxicated (elephant) and appearing like a mountain;
the Lord Narasimha in the form of a lion who, with the sharp tips of the claws, tears apart the hostile Hiranyakashipu,
the Lord (Vishnu) who appears as a dwarf appearance (vamana avatara), assumes a gigantic cloud-hued form that breaks the roof of the universe or 'andam', and puts Mahabali in a strong prison; குள்ள வடிவங் கொண்ட வாமனா மூர்த்தியாக, மகா பலி சக்ரவர்த்தியை கடினமான சிறையில் வைக்க, அண்டத்தின் உச்சி பிளவுபட, முழுமையாக வளர்ந்த மேகம் போன்ற நிறமும் கொடைத் திறமும் கொண்டவனும், முகில் (mugil) : cloud;
the renowned Lord who wielded powerful arrows that pierced through and felled the ten crowned heads of the demon Ravana - Lord Vishnu - You are his nephew! நிருதன் ( niruthan) : demon; குரிசில் ( kurisil) : person of dignity, illustrious person; philanthropist, benefactor, lord;
The perceptor (guru) who angrily slayed the army of the demons and Tarakasura, demolished the Krauncha mountain and dried up the sea, populated by the Makara fish, causing it to wail. He is Lord Muruga who carries the spear and who resides at Thirutthani on the Neelagiri hills;
He is the child of the ever young Abhirami, the Creator; Bhagavati, Possessor of melodious voice and speech; Bhairavi, representing Time; Gowri, bearer of Trishula; one who sits on lotus, Kali, Blemishless, Durga, Chief of Tripura, Pure, Beautiful and Sinless;
He is the Chief of Kurinji land, the Witness of all life, The Refuge and the fragrance permeating the beginning, the end and the middle of the four vedas. It is His illustrious and glorious twin feet that have been thus applauded above.
Sangam poems describe five different landscapes, called thinais, like kurinji (mountainous regions), mullai(forests), marutham (agriculture), neithal (seashore), and palai (desert).
Comments
Post a Comment