65. கதியை விலக்கு

ராகம்: தேஷ் அங்க தாளம் 2+1½ +2 (5½)
கதியைவி லக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகுமயலான
கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய
கனதன மொத்த மேனியுமுகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவபி டித்த தோகையுமுலகேழும்
அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமுமறவேனே
இரவிகு லத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரியகுணமான
இளையவ னுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற
இதமொட ளித்த ராகவன்மருகோனே
பதினொரு ருத்தி ராதிகள் தபனம்வி ளக்கு மாளிகை
பரிவொடு நிற்கு மீசுரசுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநிம லைக்குள் மேவியபெருமாளே.

gathiyai vilakku maadhargaL pudhiya irathna bhoshaNa
ganathana veRpu mEl migu mayalaana
kavalai manaththan aagilum unadhu prasidhdha maagiya
ganadhanam oththa mEniyu mugam aaRum
adhibala vajra vaaguvum ayilnunai vetri vEladhum
aravu pidiththa thOgaiyum ulagEzhum
adhira aratru kOzhiyum adiyar vazhuththi vaazhvuRum
abinava padhma paadhamum maRavEnE
iravi kulaththi raajadha maruvi edhirththu veezhkadu
raNa muka sudhdha veeriya guNamaana
iLaiyavanukku neeNmudi arasadhu petru vaazhvuRa
idhamo daLiththa raagavan marugOnE
padhinoru rudhdhiraadhigaL thapanam viLakku maaLigai
parivodu niRkum eesura suralOka
parimaLa kaRpakaadavi ariyaLi sutru poovudhir
pazhani malaikkuL mEviya perumaaLE.

Learn the Song



Raga Desh (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான கவலை மனத்தன் ஆகிலும் (kathiyai vilakku mAthargaL puthiya irathna bhUshaNa ganathana veRpu mEl migu mayalAna kavalai manaththan ) : Though I am distracted from the path to eternal salvation and aroused by the harlots who adorn their young, heavy rock-like breasts with precious gems; கதியை விலக்கு = நற்கதியை அடையாவண்ணம் தடுக்கும்; கன தன = பருத்த கொங்கை

உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும் ( Agilum unathu prasiththam Agiya gana thanam oththa mEniyum mugam ARum) : (I will not forget) your famous golden complexion, six faces, கன தனம் = தங்க நிதி; கன தனம் ஒத்த மேனி = தங்க நிறமான உருவம்;

அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் (athibala vajra vAguvum ayil nunai vetRi vElathum) : Your strong hard-as-diamond shoulders, sharp and victorious spear

அரவு பிடித்த தோகையும் உலகேழும் அதிர அரற்று கோழியும் (aravu pidiththa thOgaiyum ulagEzhum athira varatRu kOzhiyum) : Your Peacock holding a snake in its legs and the rooster whose loud caws reverberates in all the seven worlds;

அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே (adiyar vazhuththi vAzhvuRum abhinava padma pAthamum maRavEnE) : Your newly bloomed lotus feet that offers refuge to Your devotees and are highly praised by them - I will never forget these.

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் (iravi kulaththi rAsatha maruvi yethirththu veezh) : He, the descendent from the lineage of the sun, filled with the rajo guna, fought and lost; இரவி குலத்து-சூரியன் மகனாய், இராஜத மருவி-ரசோகுணம் உடையவனாய், எதிர்த்து வீழ்-வாலியை எதிர்த்துத் தோல்வியுற்ற (சுக்ரீவன்), இரவி குலம் (iravi kulam) : சூரிய வம்சம்; இங்கு சுக்ரீவன்;

கடு ரணமுக சுத்த வீரிய குணமான இளையவனுக்கு (kadu raNamukha suththa veeriya kuNamAna iLaiyavanukku ) : to this the pure and brave youngr brother (sugriva), in the fierce battle, கடுமையான போர்க்களத்தில் தூய வீரம் வாய்ந்த குணம் படைத்தவனான சுக்ரீவனுக்கு,

நீள் முடி அரசு அது பெற்று வாழ்வு உற இதமொடு அளித்த ராகவன் மருகோனே ( neeNmudi arasathu petRu vAzhvuRa ithamodu aLiththa rAgavan marugOnE) : Sri Ragava graciously offered him the Crown and the Kingdom; and You are His nephew!

பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை (pathinoru ruththi rAthigaL thabanam viLakku mALigai) : Your Temple is illuminated so brightly as if the Eleven RudrAs have come together; ஏகாதச உருத்திராதிகளின் ஒளி திகழும் திருக்கோயிலில் எழுந்து அருளியிருப்பவரே! தபனம் (thabanam ) : sun; தபனம் விளக்கு மாளிகை(thabanam viLakku mALigai) : ஒளி திகழும் திருக்கோயில்;

பரிவொடு நிற்கும் ஈசுர (parivodu niRku meesura ) : You are standing affectionately in that Temple, Oh Lord!

சுர லோக பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் (suralOka parimaLa kaRpa kAdavi ariyaLi sutRu pUvuthir) : In the land of the celestials, there is a forest of fragrant KaRpaga trees whose flowers are thronged by humming beetles that make them fall on தேவருலகில் இருக்கின்ற வாசனை வீசுகின்ற கற்பகக் காட்டில் வரிகளுடன் கூடிய வண்டுகள் சூழ்ந்து மொய்ப்பதனால் மலர்கள் உதிர்கின்ற,`

பழநி மலைக்குள் மேவிய பெருமாளே. (pazhani malaikkuL mEviya perumALE) : Mount Pazhani, which is Your abode, Oh Great One! பழநிமலை மீது வீற்றிருக்கின்ற பெருமையின் மிகுந்தவரே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே