68. கருவினுருவாகி வந்து

ராகம்: விஜயநாகரி தாளம்: அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி)
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்துமதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்துமிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அனுதினமும் நாண மின்றிஅழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்தமருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்றுவருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்தகுமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.

Learn the Song


karuvin uruvaagi vandhu vayadhaLavi lEva Larndhu
kalaigaLpala vEthe rindhum adhanaalE
kariyakuzhal maadhar thangaL adisuvadu maarbu dhaindhu
kavalaiperi dhaagi nondhu migavaadi
araharasi vaaya vendru dhinamumninai yaamal nindru
aRusamaya needhi ondrum aRiyaamal
achanamidu vaargaL thangaL manaigaLthalai vaasal nindru
anudhinamu naaNam indri azhivEnO
uragapada mEl vaLarndha periyaperu maaL arangar
ulagaLavu maal magizhndha marugOnE
ubayakula dheepa thunga virudhukavi raaja singa
uRaipugali yoori landru varuvOnE
paravai manai meedhi landru orupozhudhu dhoodhu sendra
paramanaru Laalva Larndha kumarEsaa
pagai asurar sEnai kondru amararsiRai meeLa vendru
pazhanimalai meedhil nindra perumaaLE.

Paraphrase

கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே (karuvin uruvAgi vandhu vayadhaLavilE vaLarndhu kalaigaL palavE therindhu madhanAlE): Taking a form in the womb, growing with age and learning several art forms and afflicted by the god of love, Manmatha, மதனாலே (mathanAlE): caused by the action of Manmatha;.

கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிகவாடி (kariya kuzhal mAdhar thangaL adi suvadu mAr pudhaindhu kavalai peridhAgi nondhu migavAdi ): getting into the company of women with black hair and letting them trample my chest with their feet and getting distraught and drained of all energy

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல் (arahara sivAya endRu dhinamum ninaiyAmal nindRu aRu samaya needhi ondRum aRiyAmal ): without meditating everyday on 'arahara sivaya' mantra and without being conversant with the morals taught in the six branches of Hinduism centering on six chief gods (namely Sauram, GANApathyam, KaumAram, Saivam, Vaishnavam and ShAktham)

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலை வாசல் நின்று அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ (achanam iduvArgaL thangaL manaigaL thalai vAsal nindRu anudhinamu nANam indRi azhivEnO ): Do I live a debased life, standing shamelessly in front of houses waiting for food?

உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே (uragapada mEl vaLarndha periya perumAL arangar ulagaLavu mAl magizhndha marugOnE ): You are the favorite nephew of Ranganatha or Vishnu who reclines on the great serpent Adisesha and who measured the entire earth with one step (on being gifted 3 steps of land by Mahabali);

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே (ubayakula dheepa thunga virudhukavi rAja singa uRai pugaliyUril andRu varuvOnE): Your parents have illustrious lineage, you are the royal poet with the insignia of a lion-amongst-poets, and you were born once at Seerkazhi (as Thirugnana Sambandha); உபய குல (ubayakula): தாய் தந்தை இரண்டு வழியிலும்;

பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா (paravai manai meedhil andRu orupozhudhu dhUdhu sendRa paraman aruLAl vaLarndha kumarEsA): You were lovingly brought up by Shiva who once went as a messenger to Paravai Nachchiyar's house;

பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே. (pagai asurar sEnai kondRu amarar siRai meeLa vendRu pazhanimalai meedhil nindRa perumALE.): You decimated the armies of your demon enemies, released the devas from the prison and stood at Pazhani montain!

No comments:

Post a Comment

நாலிரண்டு இதழாலே — J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song naalirandu ithazhaale in English, click the underlined hyperlink. உமையாள் சு...

Popular Posts