70. குருதி மலசலம்

ராகம்: கேதாரகௌளைமிச்ர சாபு (3½) 2+1½
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளியுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதையடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில்மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபதமருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவியகதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரிமயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவியபெருமாளே.

kurudhi mala jalam ozhugu nara kudal
ariya puzhuvadhu neLiyum udal madha
kurupi niNa sadhai viLaiyu muLai saLi udaloodE
kudigaL ena pala kudigai vali kodu
kumara vali thalai vayiRu valiyena
kodumai ena piNi kalagamidum idhai adalpENi
maruvi madhananuL kariya puLakidha
maNi achala pala kavadi malar punai
madhana kalai kodu kuvadu malaidhanil mayalaagaa
manadhu thuyaraRa vinaigaL sidhaRida
madhana piNiyodu kalaigaL sidhaRida
manadhu padhamuRa enadhu thalai padham aruLvaayE
nirudhar podipada amarar padhi peRa
nisidha aravaLai mudigaL sidhaRida
neRiya giri kadal eriya uruviya kadhir vElaa
niRaiya malar pozhi amarar munivarum
niruba gurupara kumara saraNena
nediya mugiludal kizhiya varupari mayilOnE
parudhi madhi kanal vizhiya sivanida
maruvum oru malai araiyar thirumagaL
padiva mugilena ariyin iLaiyavaL aruL baalaa
parama gaNapathi ayalin madhakari
vadivu kodu vara viRavu kuRamagaL
abayam ena aNai pazhani maruviya perumaaLE.

Learn the Song



Raga Kedara Gowlai (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழுவது நெளியும் உடல் ( kurudhi mala jalam ozhugu nara kudal ariya puzhuvadhu neLiyum udal ) : This Human body with intestines leaking blood, excreta and water and worms squirming in them

மத குருபி நிணசதை விளையும் உளைசளி உடலூடே குடிகளென பல குடிகை (matha kurupi niNasathai viLaiyum uLai saLi yudalUdE kudikaLenapala kudikai) : filled with arrogance and looking ugly, it is leased by fat, flesh, and slimy phlegm, குடிகளென பல குடிகை ( kudikaL ena pala kudigai) : வீட்டில் குடி இருப்போர் போல் நீண்ட நாள் உடலில் குடி கொள்ள

வலி கொடு குமர வலி தலை வயிறு வலியென கொடுமை என பிணி கலகம் இடுமிதை (vali kodukumara valithalai vayiRu valiyena kodumai yenapiNi kalagam idumithai) :and is subject to painful conditions such as epilepsy, head ache and stomach ache ; குமர வலி (kumara vali) : a condition called "Kumara kantam" characterized by epileptic fits and convulsions;

அடல் பேணி மருவி மதனன் உள் கரிய (adalpENi maruvi mathananuL kariya) : I nourish this body strongly and cohabit with women that makes even the God of Love, Manmathan, burn with jealousy. மருவி = (மாதரைத்) தழுவி; மதனன் உள் கரிய = (பொறாமையால்) மன்மதனுடைய உள்ளமும் கரிந்து போக;

புளகித மணி அசல பல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா ( puLagitha maNi asala pala kavadi malar punai mathana kalaikodu kuvadu malaithanil mayalAgA) : In order that I am not enamored by mountain-like breasts of women who, described in kama shastras, embellish their breasts with gems, jewels and flowers, மதன கலை கொடு = மன்மதனுடைய நூலிற் கூறியபடி;

மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட (manathu thuyaraRa vinaigaL sithaRida mathana piNiyodu kalaigaL sithaRida) : and (In order that) my mind is rid of sorrow, my karmas get blasted, my love-and-passion fever and skills in love making are blown away, மதன பிணிகொடு = காம நோயுடன்; கலைகள் சிதறிட = காமநூல்கள் விலகி நீங்கவும்;

மனது பதமுற எனது தலைபதம் அருள்வாயே (manathu pathamuRa enathu thalai patham aruLvAyE ) : and my mind settles and matures, kindly place thy feet on my head.

நிருதர் பொடிபட அமரர் பதிபெற (niruthar podipada amarar pathipeRa) : (You wielded the spear such that) demons are decimated and celestials get their land and are reinstated

நிசித அளை அரவு முடிகள் சிதறிட (nisitha aravaLai mudigaL sithaRida) : the heads of weapons like nAgAsthra (the serpent-powered weapon) and chakrAyutha (the disc) are scattered, நிசித அளை அரவு (nisitha aLai aravu ) : சீறி எழுந்து வரும் புற்றில் பதுங்கும் பாம்புகள்; (எதிர்த்து வந்த) கூரிய நாகாத்திரம்; அளை = வளை, புற்று; வளை= சக்கராயுதம் என்ற கணைகளின் உச்சிகள் சிதறிட;

நெறிய கிரிகடல் எரிய உருவிய கதிர்வேலா (neRiya giri kadal eriya vuruviya kathirvElA ) : Mount (Krouncha) gets shattered and sea is burned as You wielded Your luminous spear!

நிறைய மலர்பொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரணென (niRaiya malar pozhi amarar munivarum nirupa gurupara kumara saraNena) : The celestials and sages worship You with plenty of flowers, saying "Oh Your Majesty, Supreme Master and KumarA, we surrender to You"

நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே (nediya mugil udal kizhiya varu pari mayilOnE ) : You are the rider of the horse-like peacock which gallops forward piercing the body of large cloud.

பருதி மதிகனல் விழிய சிவனிடம் மருவும் ஒருமலை அரையர் திருமகள் (paruthi mathikanal vizhiya sivanidam maruvum orumalai araiyar thirumakaL) : (You are the son of Parvati who is) seated on the left side of Lord Shiva who has the sun, moon and the fire for His three eyes and is the daughter of the unique Himalayas (Parvati) பருதி (paruthi) : sun; மதி (mathi) : moon; கனல்(kanal) : fire; அரையர் (araiyar) : king; ஒருமலை அரையர் திருமகள்() : daughter of the unique Himalayas, Parvati

படிவ முகிலென அரியின் இளையவள் அருள்பாலா (padiva mugilena ariyin iLaiyavaL aruLbAlA ) : You are the son of Parvati who (has been described in the above lines) is also the sister of Lord Vishnu whose complexion is like the blue sky.

பரம கணபதி அயலின் மதகரி வடிவு கொடுவர (parama gaNapathi ayalin mathakari vadivu koduvara) : When Lord Ganesha took the form of an intoxicated elephant and came closer,

விரவு குறமகள் அபயம் என அணை(viravu kuRamagaL abhayam ena aNai) : You offered refuge to the gypsy girl Valli who was close by (the charging elephant)

பழநி மருவிய பெருமாளே.(pazhani maruviya perumALE) : You are the great Lord who has taken your abode at Pazhani.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே