Posts

Showing posts with the label பகர்தற்கரிதான செந்தமிழ்

81. பகர்தற்கரிதான செந்தமிழ்

ராகம் : வசந்தா தாளம் : 3 + 1½ +2 பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயில்பல காவி யங்களை யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி விரகாலே சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே