64. கடலை பொரி
ராகம் : தன்யாசி தாளம் : ஆதி கடலை பொரியவரை பலகனி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித மணவாளா