Posts

கந்த புராணம் : பகுதி 17

கந்தபுராணம் : பகுதி 12 கந்தபுராணம் : பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14 கநத புராணம் : பகுதி 15 கந்த புராணம் : பகுதி 16 இரணியன் புலம்பல் சூரன் இரு கூறாகி வீழ்ந்ததும், சேவலும் மயிலும் ஆகிச் செவ்வேளிடம் சென்றதும் கேட்டு கலங்கினான், கடலில் மீன் உருவத்தில் பதுங்கி இருந்த அவன் மைந்தனாகிய இரணியன். "ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆண்ட நீ ஒரு சேவலாகவும் மயிலாகவும் மாறிப் போனாயே! ஒரு நல்ல மகனாய் உனக்கு உதவாமல் போய் விட்டேனே" என்று கதறினான். துன்புற்ற மனத்தோடு குல குருவாகிய சுக்கிரனிடம் சென்றான்; அவரது அறிவுரைப்படி இறந்த தந்தையர்க்கும், தாயர்க்கும், உடன் பிறந்தார்க்கும், மற்றைய சுற்றத்தார்க்கும் முறைப்படி எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன் கழித்தான். திருச்செந்தூரில் நாழிக்கிணறு ஆறுமுகன் சூரனை வதம் செய்தது கதிர்காமம்! போர் வெற்றியை கொண்டாடும் தலம் திருச்செந்தூர். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான இந்த...

கந்தபுராணம் : பகுதி 16

கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12 கந்தபுராணம் : பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14 கநத புராணம் : பகுதி 15 சூரபத்மனுடன் போர் இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். மூன்று நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற “இந்திரஞாலம்” என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் தூக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து இந்திரஞாலத்தை தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுத்தி தன் உடைமையாக்கிக் கொண்டார். அடுத்ததாக சிவனால் தனக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனை அழிக்கும்படி ஏவினான். சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. இதே போல் சூரனது அம்புப் படையையும் வேல் பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தே...

கந்த புராணம் : பகுதி 15

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12 கந்த புராணம்: பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14 நாராயண அஸ்திரம் பலனின்மை : அதிர்ச்சியில் சிங்கமுகன் ஏழு கடலும் திரண்டு வந்தது போன்ற ஆரவாரத்துடன் போர்களத்துக்கு வந்தான் சிங்கமுகன். தன் மகன் அதிசூரனையும், அண்ணன் தாராசுரனையும், பானுகோபன் உள்பட சூரனின் எல்லா மகன்களையும் கொன்றது வீரபாகு என கடும் கோபத்தில் அவனோடு மோதினான். கடும் மோதலுக்கு பிறகு சிங்கமுகன் நாராயண அஸ்திரத்தை எடுத்து வீசினான். அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நாராயண அஸ்திரம் ஆயுதங்கள் ஏந்திய வீரபாகுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வீழ்ந்தது. சாதாரணமாக அதை ஏவினால் களத்தில் ஆயுதத்தோடு நிற்பவர்களை அழித்து, ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு பரம்பொருளை தியானிப்பவர்களை அப்படியே விட்டு சென்று விடும். சிவனுக்கும் முருகனுக்கும் முன்னால் எந்த அஸ்திரமும் வேலை செய்யாது என சிங்கமுகனுக்கு தெரிவித்தார் பிரம்மன். கடைசியாக, வீரபாகுவை தன் அண்ணனிடம் சேர்க்கும் எண்ணத்துடன் தன் மாய அஸ்திரத்தை வீசினான், ஆம் பானுகோபன் தொடுத்த அ...

கந்தபுராணம் : பகுதி 14

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12 கந்த புராணம்: பகுதி 13 வீரபாகு பானுகோபன் யுத்தம் எல்லாம் அறிந்த முருகப்பெருமான் வீரபாகுவிடம் பானுகோபன் அவனை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் மூலம் தாக்க வருவதாக கூறினார். இருப்பினும் தன்னிடம் அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் எனக்கூறி வாழ்த்தி வழியனுப்பினார். சேனைகள் அணிவகுத்துச் சென்றன. பானுகோபனும், வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான். அதற்கு எதிராக வீரபாகு எய்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட வெப்பத்தின் உக்கிரத்தில் கடல் வற்றியது; சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால் எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன், வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை ...

கந்த புராணம் : பகுதி 13

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்தபுராணம் : பகுதி 11 கந்த புராணம் : பகுதி 12 போர்க்களத்தில் சூரபத்மன் வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவனது வரவால் புது உற்சாகத்துடன் அசுரர்கள் முருகனின் படையினர் மீது பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கி அவர்களை மயக்கமடைய செய்தன. நவவீரர்களான வீரமார்த்தாண்டன், வீரராட்சஷன், வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். கலங்காத உள்ளம் படைத்த வீரபாகு சூரபத்மன் முன்னால் வந்து நின்றான். பத்மாசுரன் வீரபாகுவை எள்ளி நகையாடி, முருகனை தன்னிடம் சரணடைய கூறச் சொன்னான். வீரபாகு 'முடிந்தால் தோற்கடித்துப் பார்,' என்று சூரனுக்கு சவால் விட்டு யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்ற பல சக்தி மிக்க அஸ்திரங்களை எய்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

கந்த புராணம் : பகுதி 12

கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 கந்த புராணம் : பகுதி 11 பானுகோபன் யுத்தத்திலிருந்து பின்வாங்கலும் சபதமும் பானுகோபன் மாயயால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். வீரபாகுவும் அவனுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. இருவரும் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். கருணைக்கடலான முருகப்பெருமான் தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்து பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பான...

கந்தபுராணம் : 11

கந்தபுராணம் : பகுதி 7 A கந்தபுராணம் : பகுதி 7 B கந்தபுராணம் : பகுதி 8 A கந்தபுராணம் : பகுதி 8 B கந்தபுராணம் : பகுதி 9 கந்தபுராணம் : பகுதி 10 சிங்கமுகன் சமாதானத்தை அறிவுறுத்துதல் பிரம்மா திருசெந்தூரில் முருகன் அருகிலேயே அமர்ந்ததை கேள்விப்பட்ட சூரபத்மன் வீரபாகுவால் சிதைக்கப்பட்ட வீரமகேந்திரபுரியை நகரத்தை மற்றொரு அண்டத்தின் பிரம்மாவின் உதவியோடு மீண்டும் கட்டினான். இதன் பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற ஆலோசனை நடந்தது. சூரனின் புதல்வர்களான இரண்யன், பானுகோபன் போருக்கு ஆர்வமாக முன்வந்தார்கள். அப்போது சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் அண்ணனை எச்சரித்தான். சிங்கமுகன் அண்ணன் சூரபத்மனிடம் மிகுந்த பாசம் கொண்டவன். முன்னொரு சமயம், சூரபத்மன் சிவ பெருமான் அருளைக் கோரி செய்த கடும் தவம் பயனின்றி போனதால் யாகத் தீயில் விழுந்து உயிர் விட்ட பொழுது, கதறிக் கொண்டே தன் உயிரையும் தீயில் விழுந்து விட துணிந்தவன். இந்த சகோதர பாசத்தை கண்ட ஈஸ்வரன் முதியவர் வடிவில் வந்து சிங்கமுகனை தடுத்தது மட்டும் இல்லாமல் சூரபத்மனையும் உயிர்ப்பித்து அவர்கள் கேட்ட வரத்தையும் அளித்தார். அதே சகோதரன் - சூரபத்மன் முற...