கந்த புராணம் : பகுதி 15

கந்தபுராணம் : பகுதி 9கந்தபுராணம் : பகுதி 10
கந்தபுராணம் : பகுதி 11 கந்தபுராணம் : பகுதி 12
கந்த புராணம்: பகுதி 13 கந்த புராணம் : பகுதி 14

நாராயண அஸ்திரம் பலனின்மை : அதிர்ச்சியில் சிங்கமுகன்

ஏழு கடலும் திரண்டு வந்தது போன்ற ஆரவாரத்துடன் போர்களத்துக்கு வந்தான் சிங்கமுகன். தன் மகன் அதிசூரனையும், அண்ணன் தாராசுரனையும், பானுகோபன் உள்பட சூரனின் எல்லா மகன்களையும் கொன்றது வீரபாகு என கடும் கோபத்தில் அவனோடு மோதினான்.

கடும் மோதலுக்கு பிறகு சிங்கமுகன் நாராயண அஸ்திரத்தை எடுத்து வீசினான். அவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நாராயண அஸ்திரம் ஆயுதங்கள் ஏந்திய வீரபாகுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வீழ்ந்தது. சாதாரணமாக அதை ஏவினால் களத்தில் ஆயுதத்தோடு நிற்பவர்களை அழித்து, ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு பரம்பொருளை தியானிப்பவர்களை அப்படியே விட்டு சென்று விடும். சிவனுக்கும் முருகனுக்கும் முன்னால் எந்த அஸ்திரமும் வேலை செய்யாது என சிங்கமுகனுக்கு தெரிவித்தார் பிரம்மன்.

கடைசியாக, வீரபாகுவை தன் அண்ணனிடம் சேர்க்கும் எண்ணத்துடன் தன் மாய அஸ்திரத்தை வீசினான், ஆம் பானுகோபன் தொடுத்த அதே அஸ்திரம். அதன் முன் நிற்கமுடியாத வீரபாகு மூர்ச்சையனார் அவரோடு அவரின் பெரும் படையே மூர்ச்சையானது. அவர்களை அப்படியே கட்டி உதயகிரி எனும் மலையில் வைத்துவிட்டு யுத்தம் தொடர்ந்தான் சிங்கமுகன். வீரபாகு வீழ்ந்ததும் தேவர்களின் படைகள் சோர்ந்தன.

சிங்கமுகன் வதம்

முருகனை தொலைப்பேன் என மார்தட்டி நின்று தன் தண்டாயுதம் சூலம் எனும் பயங்கர ஆயுதத்தால் முருகனை நோக்கி சென்றான் சிங்கமுகன். அவரின் பாலக தோற்றம் அவனுக்கு ஒரு இரக்கத்தை கொடுத்தது அவன் முருகனிடம் யுத்தம் தொடுக்கும் முன் சமரசமே பேசினான் “சண்டை எங்களுக்கும் தேவர்களுக்குமானது. இதில் தலையிடாமல் திரும்பி சென்றுவிடுங்கள்” என்றான். “எளியவரை வலியவர் வாட்டினால், நாம் எப்படி விட முடியும்?” என்று புன்னகைத்து கொண்டே முருகன் சிங்கமுகனை போருக்கு அழைத்தான்.

முருகன் ஒரு பாணத்தை உதயகிரி நோக்கி எறிந்தார். அது வீரபாகுவையும் அவன் சேனையினையும் எழுப்பி அனைவரையும் திரும்பவும் களத்துக்கு அழைத்து வந்தது. அதிர்ந்த சிங்கமுகன் முருகன் பாலன் வடிவில் வந்த தெய்வம் என்பது அவனுக்கு நன்றாக உறைத்தது. இருப்பினும், தன் தாக்குதலை விடாமல் தீவிரப்படுத்தினான். சீக்கிரத்தில் முருகன் சிங்கமுகனுடைய சேனை முழுக்க அழித்து விட்டார்; அவனது கரங்களையும் தலையினையும் தரித்து போட்டு கொண்டே இருக்க, அவன் பெற்ற வரத்தின்படி அவை முளைத்து கொண்டே இருந்தன.

முருகன் வஜ்ஜிராயுதம் எனும் ஒரு ஆயுதத்தை வீச, அது அசுரனின் மார்பை துளைத்தது. ஆம் வெட்டவெட்ட அவன் தலைதான் முளைக்கும், இதயத்தை அடித்துவிட்டால் அவன் பிழைக்கமாட்டான்। வஜ்ஜிராயுதம் மார்பில் தாக்கியதும் வீழ்ந்தான் சிங்கமுகன். தேவர் பக்கம் பெரும் ஆரவாரம் உண்டாயிற்று.

சிங்கமுகனின் கதை மனதும் அறிவும் இணைந்து மாயையில் சிக்கி ஆன்மாவுடன் நடத்தும் போராட்டத்தின் காட்சி. ஆன்மா இறைவனை அடைய விடாமல் லௌகீக வாழ்வின் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் வளர்கின்றன; மீட்க வந்த ஞானம் அந்த ஆசைகளை வெட்ட வெட்ட அவை முளைத்து கொண்டே இருக்கின்றன‌.

ஆசை முளைக்காது மாறாக ஞானம் பெருகும் ஞானம் பெறுதலோ இறைவனடியில் மனதை செலுத்துவதோ சாதாரண விஷயம் அல்ல, மிகபெரும் போர் அது பாசம், பந்தம், உறவு, உலகம் , குடும்பம், பணம், பதவி, நலம் என எவ்வளவோ விஷயங்களுடன் போராட வேண்டிய விஷயம் அது. இவற்றில் இருந்து இறைவன் ஒருவனே மீட்டுவர வேண்டும். மேலும், தர்மத்தை மீறி அதர்மம் ஒரு காலமும் வெல்லாது என்பதும் சிங்கமுகன் சொல்லும் தத்துவம். “வலியோர் எளியோரை வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும்”. ஆம், தர்மம் எங்கெல்லாம் அழுகின்றதோ அங்கெல்லாம் இறைசக்தி இறங்கி வந்து காக்கும்.

கந்த புராணம் : பகுதி 16

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே