கந்தபுராணம் : 11

கந்தபுராணம் : பகுதி 7 Aகந்தபுராணம் : பகுதி 7 B
கந்தபுராணம் : பகுதி 8 Aகந்தபுராணம் : பகுதி 8 B
கந்தபுராணம் : பகுதி 9கந்தபுராணம் : பகுதி 10

சிங்கமுகன் சமாதானத்தை அறிவுறுத்துதல்

பிரம்மா திருசெந்தூரில் முருகன் அருகிலேயே அமர்ந்ததை கேள்விப்பட்ட சூரபத்மன் வீரபாகுவால் சிதைக்கப்பட்ட வீரமகேந்திரபுரியை நகரத்தை மற்றொரு அண்டத்தின் பிரம்மாவின் உதவியோடு மீண்டும் கட்டினான். இதன் பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற ஆலோசனை நடந்தது. சூரனின் புதல்வர்களான இரண்யன், பானுகோபன் போருக்கு ஆர்வமாக முன்வந்தார்கள். அப்போது சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் அண்ணனை எச்சரித்தான்.

சிங்கமுகன் அண்ணன் சூரபத்மனிடம் மிகுந்த பாசம் கொண்டவன். முன்னொரு சமயம், சூரபத்மன் சிவ பெருமான் அருளைக் கோரி செய்த கடும் தவம் பயனின்றி போனதால் யாகத் தீயில் விழுந்து உயிர் விட்ட பொழுது, கதறிக் கொண்டே தன் உயிரையும் தீயில் விழுந்து விட துணிந்தவன். இந்த சகோதர பாசத்தை கண்ட ஈஸ்வரன் முதியவர் வடிவில் வந்து சிங்கமுகனை தடுத்தது மட்டும் இல்லாமல் சூரபத்மனையும் உயிர்ப்பித்து அவர்கள் கேட்ட வரத்தையும் அளித்தார்.

அதே சகோதரன் - சூரபத்மன் முறைதவறிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, அவனை இடித்து எச்சரிக்கவும் தவறவில்லை. அவன் தேவர்களுக்கு இழைத்த கொடுமைகளையும், சிவனார் அளித்த நூற்றெட்டு யுக ஆட்சியின் முடிவு காலம் வந்து விட்டதையும் நினைவுறுத்தி, தேவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வேண்டினான். இதை கேட்ட சூரன் தம்பியை ஏளனமாக பேசி நகையாடினான்.

இதனால் கலங்காத சிங்கமுகன் அண்ணனுக்கு மேலும் அறிவுரை கூறினான். முருகனுடைய அளப்பரிய ஆற்றலை விளக்கினான். "அவர் பரஞ்சோதியாகிய சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவர். அந்த முருகப்பெருமான் அருவம் (உருவமில்லா நிலை) ஆவார்; உருவமும் ஆவார்; அருவமும் உருவமும் இல்லாத நிலையும் ஆவார். ஞானமே வடிவான முருகப்பெருமானின் இயல்பை மவுனத்தில் கரைகண்ட முனிவர்களால் கூட காண முடியவில்லை. ஒரு தூதுவன் வஜ்ரபாகுவைக் கொன்றிருக்கிறான் என்றால் அவனது தலைவனான முருகனின் ஆற்றலைக் இலகுவாக மதிக்கக்கூடாது, தேவர்களை விடுதலை செய்து விட்டு முருகனிடம் சரணடைந்து விடுவதே சிறந்தது என்றான். இந்த ஆலோசனை கேட்ட சூரபத்மன் கோபத்துடன் சீறினான். அண்ணனின் மூர்க்கத்தனத்தை மாற்ற முடியாது என்று புரிந்துக்கொண்ட சிங்கமுகன் சமாதானமாக பேசி போருக்கு தயார் என்று சொல்லவும் சூரபத்மனுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது. கோபம் அடங்கிற்று. அசுரகுலத்தின் அழிவு உறுதி என எண்ணி வருந்தியபடியே சிங்கமுகன் அங்கிருந்து போய்விட்டான்.

வீரபாகு பானுகோபன் யுத்தம்

இதனிடையே முருகப்பெருமான் படைகளுடன் வீரமகேந்திரபட்டணத்திற்கு கிளம்பினார். கடல் கடப்பதற்காக முருகன் தண்ணீரில் கால் வைத்தவுடன் தண்ணீர் அங்கே வற்றிப் போய்விட்டது. அதன் வழியே படைகள் வீரமகேந்திரபட்டணத்தை ஒட்டிய இடத்துக்கு சென்று விட்டன. விஸ்வகர்மா அங்கே முருகனும் அவனது படைகளும் தங்குவதற்கு ஒரு பட்டணத்தை அமைத்து விட்டார்.

முருகப்பெருமான் கடல்கடந்து தன் பட்டணத்தருகே முகாமிட்டிருப்பதை தூதுவர்கள் மூலம் அறிந்த சூரபத்மன் போருக்கான ஆயத்தத்தில் இறங்கினான். மகன் பானுகோபனை அழைத்து, அந்த முருகனை கட்டி இழுத்து வர பணித்தான். பானுகோபன் பலலட்சம் படை வீரர்களை திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான். முருகப்பெருமான் வீரபாகுவை பானுகோபனைக் தாக்கிக் கொல்ல உத்தரவிட்டார்.

கந்த புராணம் : பகுதி 12

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே