Posts

சரக்கேறி — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link sarakkeri சரக்கு ஏறி 96 மூலப்பொருள்கள், 36 கட்டு/மூட்டைகளாகக் கட்டி வைக்கப்படட்டுள்ள இத்தப்பதி வாழ் இந்த (பதி என்பது ஆன்மாவின் ஆன்மா) உயிர் குடி கொண்டுள்ள தொந்த குளிர்-வெப்பம், இன்பம்_-துன்பம்,மானம்-அவமானம் முதலிய இருமைகளுக்கு பரிவோடு ஐந்து அன்புற்றவர் போலத் தோன்றுகின்ற ஐந்து புலன்களாகிற சதிகாரர் புக்கு ஆன்மாவை முக்தி நெறியில் செல்லவிடாது தடுக்கும் வஞ்சனையாளர் புகுந்து கொண்டு உலைமேவு நெருப்பின் மீது இருப்பது போன்ற அழிவுக்கு வழியான இந்தச்செயல் மேவி புலன் இன்ப நுகர்ச்சிகளில்/உலகவியலில் ஈடுபட்டு சலித்தே மெத்த அங்குமிங்கும் ஓடி (சலித்தல் = அசைதல்) சமுசாரம்,பொன் உலக இன்பங்களையும், பொன் பொருளையும் சுகித்தே நன்றாக அனுபவித்து சுற்றத்தவரோடு மனைவி மக்கள் மற்றும் உறவினரோடு இன்பத்தழைத்தே நாளும் பெருகும் சந்தோஷத்தோடு

உடுக்கத் துகில் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link udukka thugil உடுக்க உடலை மூடவும், குளிர் வெம்மையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் துகில் வேணும் ஆடைகள் வேண்டும் நீள் பசி தொடர்ந்து துன்புறுத்தும் பசி நோயை அவிக்கைக்கு நீக்குவதற்கு அ(ன்)ன அன்னமும் பானம் வேணும் நீர், திரவ பதார்த்தங்களும் வேண்டும் நல் ஒளிக்கு நன்கு ப்ரகாசிப்பதற்கு/அழகாகத் தோன்றுவதற்கு புன (பின்) நல்லாடை வேணும் மீண்டும்(பின்னும்) நல்ல (பட்டு முதலிய) ஆடைகள்/ (ஏற்கெனவே ஆடை தேவை என்பது சொல்லியாயிற்று எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமல்ல, கொஞ்சம் பகட்டுக்கு “பின்னும்” பட்டு ஆடை வேண்டும் என்பதே புனலாடை, (வடமொழியில் புன: பின்னும்) வேண்டும் மெய் உறு நோயை உடம்புக்கு ஏற்படும் பல பிணிகளை ஒழிக்க இல்லாமல் செய்ய பரிகாரம் வேணும் மாற்று/ மருந்துகள் வேண்டும் உள் இருக்க அகத்தில் /வீட்டில் குடும்பத்தைப்பராமரிக்க சிறு நாரி வேணும் ஒரு இளம் பெண் தேவை ஒர் படுக்க தனி வீடு வேணும் அப்படி இல்லறத்தனாக வாழ தனிமை தேவை. எனவே ஒரு எனக்கென்று தனியான, தொந்தர...

விடுங்கை பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link vidungai விடும் கைக்கு ஒத்த உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன) கடா உடையோனிடம் அடங்கி  எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு, கைச்சிறையான அநேகமும்     கை வசப்பட்ட பலவித செல்வங்களும்  விழுங்கப்பட்டு அறவே முற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு அறல் ஓதியர் விழியாலே ஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு) விரும்பத்தக்கன போகமும் மோகமும் விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும்    விளம்பத்தக்கன பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஞானமும் மானமும் கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்

பிறவியலை — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link piraviyalai பிறவி பிறவிகள் நடைபெறுகின்ற அலை அலைகள் நிரம்பிய, அலை எப்படி மேலும் கீழுமாக அசைகிறதோ அதுபோல் இன்பம் துன்பம் மாறி மாறி ஏற்படுகின்ற ஆற்றினில் (நதிநீர் கடலில் கலந்தாலும் அதே நீர் ஆவியாகி மேகமாய் மழையாய்ப்பொழிந்து ஓய்வில்லாது ஓடிக்கொண்டே இருப்பது போல் திரும்பத் திரும்ப அதே சுழற்சியில் மறுபடி சேருகின்ற) நதியாகிய உலகத்தில் புகுதாதே மறுபடியும் வந்து சேராத வண்ணம் பிரகிருதி ஆசைகளைத் துறந்து, நிவ்ருத்தி மார்கம் எனப்படும் ஞானமார்கத்தைக் கடைப்பிடிக்காமல்,  ஆசைவாய்ப்பட்டு மீண்டும் மீண்டும் பல செயல்கள் புரிந்து மேலும் கர்மாவைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பதை விட்டு, மாந்தர் இயற்கையான ப்ரவ்ருத்தி மார்கம் உற்று எனும் உலகாயத வழியைப் பின்பற்றி அழியாதே முக்திக்கு எதிரான திசையில் சென்று மனிதப்பிறவி வீணாகி விடாமல் உறுதி குரு வாக்கிய நிச்சயமான (முக்தி தரவல்ல) (நல்ல) குருவின் உபதேச வாக்கின் (மந்திரம் என்றும் கொள்ளலாம்)

பருத்த பல் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link paruththa pal பருத்த பெரிய (சிரத்தில் மூளை இருப்பதால் பெருமைக்குரிய - எண் சாண் உடம்புக்கு பிரதானம் என்று கூறப்படும்- என்றும் கொள்ளலாம். ) பல் பல் (முதலிய அவயங்கள் கொண்ட) சிரத்தினை தலையையும் குரு கனத்த, பெரிய திறல் கரத்தினை வலிமை உடைய கைகளையும் பரித்த அப் பதத்தினை இவற்றோடு கூடிய உடலைத் தாங்குகின்ற அந்தக் கால்களையும் பரிவோடே படைத்த பொய்க்குடத்தினை அன்போடு பெற்றிருக்கின்ற ஓட்டைக்குடம் போன்ற (கணத்துக்குக்கணம் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்) பழிப்பு அவத்து இடத்தினை பழிக்கும் (இகழ்ச்சிக்கும்) பாபங்களுக்கும் உறைவிடமான பசிக்குடல் கடத்தினை பசி நோய்க்குக்காரணமான குடலும் உணவை விழுங்கிச் சேர்க்கும் பானையுமான பய(ம்) மேவும் எப்போது மரணம் நேருமோ அல்லது வேறு துன்பம் தாக்குமோ என்ற அச்சத்திற்கு இடமானதும் பெருத்த பித்து உரு(த்) தனை கவலையால் பித்தம் அதிகம் சுரக்கின்ற இந்த உடலை

புவிக்கு உன் பாதம்— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link buvikkun patham புவிக்கு இந்த பூமிக்கு உள்ளே இருந்தாலும் (மானுடராக) உன் பாதம் அதை நினைபவர்க்கும் உன் திருப்பாதங்களை இடையறாது தியானம் செய்பவர்களுக்கும் கூட (தேவர்களை, ரிஷிகளைப்போல) கால தரிசனை இறந்த நிகழ் வரும் என மூன்று கால நிகழ்வுகளும் புலக்கண்கூடும் கண்கூடாகப் புலப்படும் ( தெரியும்) அது தனை அறியாதே என்பது தெரியாமல் (அவர்கள் காட்டிய நல் வழிகளை விட்டு விட்டு) புரட்டும் பாத சமயிகள் பொய்யை மெய் போல நாவன்மையால் காட்டும் பாவத்தில் சேர்க்கும் மார்கங்களைக் கடைப்பிடிப்பவர் நெறிக்கண் பூது படிறரை கூறும் வழிகளில் சேரும் வஞ்சகர்களை புழுக்கண் பாவம் புழுக்கள் நிறைந்த நரகம் சேர்வதற்கான பாபம் அது கொளல் பிழையாதே வந்து சேர்வது தவிர்க்க முடியாதது

நரையொடு— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune For a translation of this song in English, click the link naraiyodu நரையொடு பல் கழன்று வயோதிகத்தால் முடிகள் வெளுத்தும், பற்களும் விழுந்து, தோல் வற்றி தோலும் எண்ணெயின்றி வற்றிச் சுருக்கம் எடுத்து நடை அற மெத்த நொந்து கால் எய்த்து நடக்கமுடியாது முடங்கிப் போய் கால்கள் வலி மிகுந்துக களைத்து விட நயனம் இருட்டி நின்று கண்கள் ஒள் இழந்து பார்வை போய் கோல் உற்று நடை தோயா கையில் கம்பு ஒன்று துணையாகி, (பழைய கம்பீர) நடை தொய்ந்து/ தளர்ந்து போய்விட நழுவும் விடக்கை நாள் தோறும் நம் கைப்பிடியில் இருந்து தப்பி ஓடும் (நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்) இந்த மாமிச உடலை ஒன்று போல் வைத்து அப்படி நேராமல் ஒரேபோல் (இளமையாக) வைக்க முயன்று நமது என மெத்த வாழ்வு உற்று என்னுடையது என்று அபிமானித்த தேகமும் சேர்த்த செல்வங்களுமாக வாழ்ந்து,