3. உம்பர் தரு

ராகம்: ஹம்ஸத்வனி/ஆநந்தபைரவிஅங்க தாளம் (8)
2½ + 2½ + 3
உம்பர்தரு தேனுமணிக்கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி
இன்பரசத்தே பருகிபலகாலும்
என்றனுயிர்க் காதரவுற்றருள்வாயே
தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தா லருள்கைகனியோனே
அன்பர் தமக்கான நிலைப்பொருளோனே
ஐந்து கரத் தானை முகப்பெருமாளே.

umbartharu dhEnumaNi kasivaagi
oNkadaliR thEnamudhathu uNarvooRi
inbarasaththE parugip palakaalum
endhanuyirkku aadharavutru aruLvaayE

thambithanak kaagavanathth aNaivOnE
thandhaivalath thaal aruLkai kaniyOnE
anbarthamak kaananilai poruLOnE
aindhukaraththu aanaimuga perumaaLE.



Learn the song in Hamsadhwani Raga



Know The Raga Hamsadhwani (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P N3 S    Avarohanam: S N3 P G3 R2 S

Learn the song in Ananda Bhairavi Raga



Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

To realize God, our minds should be receptive. A mind that is tender and supple with love for all can attain the highest form of consciousness, where God can be realized. The poet-saint prays for a mind that is compassionate, having soaked in the love of His thoughts, an embodiment of benevolence.

விண்ணுலகிலுள்ள கற்பக மரம் போலவும், காமதேனுவைப் போலவும், சிந்தாமணியைப் போலவும், நம் மனம் கசிந்து அன்பு உடையதாகியும், வெண்மையான ஒளி வீசிக்கொண்டு விளங்கும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற இனிய மெய்ஞ்ஞான உணர்ச்சி ஊற்றெடுக்க அத் தேன் போன்ற இன்ப ரசத்தைப் பலகாலும் பருகி சிவமயமாக விளங்க வேண்டும். இதே போல் 'தசையாகிய' என்ற திருப்புகழில் முருகனை அகங்குழைந்து வேண்டுமவர் இதயத்தில் தோன்றும் இனிய உணர்வு என்பதை 'கசிவார் இதயத்து அமிர்தே' என்று அருணகிரிநாதர் வர்ணிக்கிறார்.

உம்பர் தரு தேநு மணி கசிவாகி (umbartharu dhEnu maNi kasivaagi ) : Becoming benevolent and compassionate like the wish-fulfilling karpagam tree, the divine Kamadhenu cow and the chintamani jewel; உம்பர் தரு (umbar tharu) : the tree of the devas – the 'karpagam' tree; தேநு (dhEnu) : wish-fulfilling Kamadhenu cow; மணி (maNi) : wish-fulfilling chintamani, கசிவாகி (kasivaagi) : becoming molten and oozing (with love);

ஒண் கடலில் தேன் அமுதத்து உணர்வூறி (oN kadalil thEn amudhathu uNarvooRi ) : with a heart soaking in the sparkling nectarine ocean of Bliss; ஒண் (oN ) : brilliant, bright; பாற்கடலில் அமுதம் தோன்றுவது போல் உள்ளம் அன்பினால் கனிந்து,

இன்பரசத்தே பருகி பலகாலும் (inbarasaththE parugi palakaalum ) : drinking the ecstatic nectar of love, compassion and bliss for a long time,

என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே (endhanuyirkku aadharavutru aruLvaayE ) : You should protect my life and bless me so that my life remains immersed in the nectar of love.

தம்பி தனக்காக வனத்து அணைவோனே (thambi thanakkaaga vanaththu aNaivOnE) : You reached the forest for the sake of your brother;

தந்தை வலத்தால் அருள்கை கனியோனே (thandhai valaththaal aruLkai kaniyOnE ) : You received the fruit by circumambulating your father;
விநாயகர் எல்லா உலகங்களும் சிவத்துக்குள் அடக்கம் என்று கருதி தந்தையை வலம் வந்தார். எல்லாவற்றுக்குள்ளும் சிவத்தை முருகவேள் பார்த்து அண்ட சராசரங்களை வலம் வந்து அருளினார்.

அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே (anbar thamakkaana nilai poruLOnE ) : You are the Eternal Substance for your devotees;

ஐந்து கரத்து ஆனை முகப் பெருமாளே (aindhukaraththu aanaimuga perumaaLE) : You, the god par excellence, with five arms and an elephant face!
கணபதி, ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களால் புரிகின்றார். அவரது திருக்கரங்களில் ஏந்திய எழுத்தாணி படைத்தலையும், மோதகம் காத்தலையும், அங்குசம் அழித்தலையும், தும்பிக்கை - அருளலையும் குறிக்கின்றன. ஆனைமுகம் ஒங்கார வடிவை உணர்த்துகின்றது.

விளக்கவுரை (திருமதி ஷ்யாமளா ராமமூர்த்தி, புனே)

கேட்ட வரம் அனைத்தையும் தருபவர் பிள்ளையார். அவர்தான் — 1) கற்பக மரம். தேவலோகத்தில் பாரிஜாதம், அரிசந்தனம், மந்தாரம், கற்பகம், சந்தானம் என ஐந்து மரங்கள் உண்டு. அவற்றில் கேட்பதை குறிப்பறிந்து கொடுப்பது கற்பகம். பிள்ளையாரும் கற்பக விநாயகர். நாமும் நம்மால் முடிந்ததை அடுத்தவருக்கு தந்து உதவ வேண்டும். 2) காமதேனு பசு. பாற்கடலிலிருந்து தோன்றியது. வசிஷ்டரிடம் இருந்தது. கேட்டதை கொடுக்கும் இயல்பு. பிள்ளையார் காமதேனு. நாமும் அப்படி இருக்க வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். 3) சிந்தாமணி. சிந்தித்ததை தரும் மணி இது. ஒரு பிள்ளையார் பெயர் சிந்தாமணி கணபதி. நாமும் வறியவர்களுக்கு உதவ வேண்டும்.

மேலும் இப்பாடல் உணர்த்துவது அமுதம் போன்ற மெய்ஞானம். நாமும் இந்த மெய்ஞானத்தை பருகி சிவமயமாக வேண்டும்.

முருகப்பெருமான் வள்ளி மலை சென்றார். ஜீவாத்மாவான வள்ளிக்கு பரமனை உணர்த்த, அவளுக்கு பக்குவம் வர வேடனாகவும், வேங்கை மரமாகவும், வேந்தன் மகனாகவும், கிழவனாகவும் வந்து காட்சி தந்தார். ஆனால் பயனில்லை. அவள் புரிந்து கொள்ளவில்லை. அது தான் மாயை. தமயனின் உதவியை நாடினார். வினாயகர் யானை உருவில் வந்து வள்ளியை துரத்த, அவள் பயந்து முருகனை அணைத்துக் கொண்டாள். ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் நிகழ்ந்தது.

நாரதர் மாதுளம் கனியை சிவபெருமானிடம் தந்தார். சிவனோ முதலில் உலகை சுற்றுவோருக்கு கனி கிடைக்கும் என்றார். அனைத்தும் சிவனுக்குள் அடக்கம் என கருதி பிள்ளையார் சிவனை சுற்றி வந்து அந்த ஞானக் கனியை பெற்றார். எனவே அவர் ஞானம். எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பது முருகனின் கோட்பாடு. எனவே அவர் உலகை வலம் வந்தார். அவர் ஞானப்பழம். இரண்டு தாத்பரியங்களும் ஒன்று தான்.

வினாயகர் ஐந்து கரத்தான். படைத்தல் காத்தல் அழித்தல், மறைத்தல் அருளால் என ஐந்தொழில் செய்பவர். எழுத்தாணி ஏந்திய கை — படைத்தல், மோதகம் ஏந்திய கை —காத்தல், அங்குசம் — அழித்தல், பாசக்கயிறு — மறைத்தல், தும்பிக்கை — அருளல். இவரை தொழுவோருக்கு ஒரு குறையும் இல்லை.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே