10. தடக்கைப் பங்கயம்


ராகம்: ஆநந்த பைரவிதாளம்: 1 + 1 + 1½ + 1
தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென்றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந்தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந்த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண்டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன்பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந்தனிவேலா
குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன்சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும்பெருமாளே.

Learn the Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

தடக்கை பங்கயம் கொடைக்கு கொண்டல் (thadakkai pangayam kodaikku kondal ) : (For monetary benefits we shower false praises such as) 'Your hands(palms) are like the lotus; and in munificence, you are like the cloud ('kondal') that showers rain'. pangayam means lotus. Poets eulogize philanthropists as those with 'lotus hands'. Kubera, the god of wealth, can bestow 'nava nidhi' (or nine wealths) on devotees, one of which is 'padma nidhi'. In temples you can see Kubera at the entrance to the shrine holding in his hands shankha (conch) known as shanka nidhi, or lotus, known as Padma nidhi.
"விசாலமான கரம் பத்மநிதிக்குச் சமானமாகவும், மேகத்திற்கு நிகரானவரான கொடையாளியே; குபேரனிடம் பதுமநிதி, சங்கநிதி என்று இரு நிதிகள் உண்டு. அவைகள் பத்மம் போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும், சங்கு போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும் எடுக்க எடுக்கச் சுரந்து கொண்டே இருக்கும் அரிய பொருள்கள்.

தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை தவித்து சென்று இரந்து (thaN thamizhkku thanjamendru ulagOrai thaviththu chendru iranthu) : 'You are the refuge for the Tamil scholars,' saying thus I go behind people begging for favors, தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம்!" என்று கூறி

உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம் தனை (uLaththil puNpadum thalarcchi pambambaram dhanai) : my mind is tormented and I stagger like a top at the end of its spinning cycle. (இப்படி வஞ்சக புகழ்ச்சி செய்தும் சிறிது காசும் பெற முடியாமல்) புண்பட்ட மனத்துடன், ஆடிஓய்ந்த பம்பரம் போல் நிலைகுலைந்து,

ஊசல் கடத்தை (Usal kadaththai) - (the body) unstable and perishable like the mud pot on a swing ஊஞ்சலின் மீது வைத்த பானை போல் அழியும் இயல்புடைய இவ்வுடம்பு, ஊசல் = ஊஞ்சல்;

துன்பம் அண் சடத்தை (thunbam aN chadaththai) : misery filled body; அண்ணுதல் = பொருந்துதல்; துன்பம் பொருந்திய அறியாமையுடன் கூடியவன்.

துஞ்சிடும் கலத்தை (thunjidum kalaththai) : (useless) like the broken pot; உடைந்த பானை போன்றவனும், கலம் = பானை; உடைந்த பானை போல், இவ்வுடம்பும் உயிர்போனால் ஒன்றுக்கும் உதவாது.

பஞ்ச இந்த்ரிய வாழ்வை (pancha indhriya vAzhvai) : I experience life in a limited way through the 'pancha indriyas' - the five sense organs, namely, the eyes, the nose, the tongue, the ears and the skin. The sense organs can lead one astray from the path of righteous living. மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடியவனும் ஆகிய அடியேனை,

கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே (kaNaththil chendru idam thiruththi thaNdai am kazhaRkku thoNdu koNdaruLvAyE) : Come immediately and correct me so that I can serve your beautiful anklet-adorned feet. அடியேனை ஒரு நொடியில் தூய்மையாக்கி, உமது தண்டையணிந்த தாமரைத் திருவடிகளில் தொண்டு செய்யுமாறு ஆட்கொண்டருள்வீர்.

படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக பணித்து (padaikka pangayan thudaikka sankaran purakka kanjaiman paNiyAga paNiththu) : Ishwara employs the services of the tri-murtis to carry on various occupations like creation, sustenance and destruction. படைக்க பங்கயன் - the lotus-god Brahma for creation; துடைக்க சங்கரன் – Shankara for wiping out/destruction; புரக்க – to protect, கஞ்சை — தாமரை; மன் — மனம்; கஞ்சை மன் — தாமரையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மியை மார்பில் வைத்துள்ள திருமால், Laksmi's husband, Vishnu; பணித்து= நியமித்து, employ;

தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா (thambayam thaNiththu santhatham paraththai koNdidun thanivElA): (You) remove their (the tri-murtis) fears and preside over at all times the Cosmic Sky, which is a manifestation of Eternal Knowledge, Oh, god with the unique javelin('vel'); அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் (ஞானாகாசத்தில்) மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே,

குடக்கு தென்பரம் பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே (kudakku thenparam poruppil thangum am kulaththil gangaithan chiRiyOnE) : You reside at the beautiful mountain in ThirupparangkundRam, West of Madurai! You are the son of Ganga, who comes from a pride-worthy ancestral lineage amongst rivers! குட திசை means western direction.பொருப்பு means mountain. குடக்கு = மேற்கே (மதுரைக்கு மேற்கே); தென்பரம் பொருப்பு = தென் திருப்பரங்குன்ற மலை; மதுரைக்கு மேல் (மேற்கு) திசையில் உள்ள இனிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்றவரே! உயர்குல நதியாம் கங்கையின் இளங்குமாரரே!

குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே (kuRa ppon kombai mun punaththil senkaram kuviththu kumbidum perumALE.) : Once in the millet field, you put together your hands in salutation before Valli. தினைப்புனத்தில் முன்னாளில் சென்று குறமங்கையான அழகிய பொற்கொம்பு போன்ற வள்ளிநாயகியை, சிவந்த கர மலரைக் கூப்பிக் கும்பிட்ட பெருமிதம் உடையவரே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே