38. நிலையாப் பொருளை

ராகம்: பாகேஶ்ரீதாளம்: மிஸ்ர சாபு (2 + 1½)
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுதுமவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள்தடுமாறி
மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரியநெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமலமருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவறமுதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதி வேற் படையைவிடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநிதவடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க்கெளியபெருமாளே.


Learn the Song


Raga Bageshri (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 P G2 M1 R2 S


Paraphrase

நிலையா பொருளை உடலா கருதி நெடு நாள் பொழுதும் அவமே போய் (nilaiyA poruLai udalAk karudhi nedunAL pozhudhum avamE pOy ) : Deluded into regarding the transient body as precious, I wasted many days;

நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி (niRai pOy sevidu kurudAyp piNigaL niRaivAy poRigaL thadumARi) : Emaciated and bereft of strength, I become deaf and blind, as the senses falter;

மல(ம்) நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக (mala neer sayana misaiyAp perugi madivERku uriya neRiyAga) : Stools and urine leak into the bed as death approaches; to tread the right path at this juncture; மிசை - raised land, bed; மடிவேற்கு உரிய நெறியாக (madivERku uriya neRiyAga) : இறந்து போகிற எனக்கு சரியான பாதையாக;

மறை போற்ற அரிய ஒளியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே (maRai pOtRa ariya oLiyAy paravu malar thAL kamalam aruLvAyE) : give me your lotus feet that scriptures extol and from which indescribably bright light emanates; வேதங்களால் போற்றுதற்கு அரிதான, ஞான ஒளிவீசி விரிந்துள்ள தாமரைத் திருவடியை எனக்கு அருள்வாயாக.]

கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற ( kolai kAttu avuNar keda mA chaladhi kuLamAy chuvaRa) : The murderous demons (asuras) were destroyed and the big ocean dried up into a little pond; and

முது சூதம் குறி போய் பிளவுபட மேல் கதுவு(ம்) கொதி வேல் படையை விடுவோனே (mudhu sUdham kuRi pOy piLavu pada mEl kadhuvu kodhi vEl padaiyai viduvOnE) : Surapadman in the guise of an old mango tree was hit and split into two when You threw the fiery Spear at it; முதிர்ந்த மாமரமானது குறியின்படி பட்டு பிளந்து அழியுமாறு மேலே பற்றும்படியாக எரிவீசும் வேலாயுதத்தை விடுத்தவரே! கதுவுதல் = பற்றுதல்;

அலையாய் கரையின் மகிழ் சீர் குமர (alaivAy karaiyin maghizh seer kumara) : You happily reside on the shore of ThiruchchendhUr, Oh KumarA,

அழியா புநித வடிவாகும் அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே. (azhiyA punidha vadivAgum araNArkku adhidha poruL kAttu adhiba adiyArkku eLiya perumALE.) : You taught Lord SivA, with an eternal form, the meaning of OM, which surpasses everything; You are easily accessible for Your devotees, Oh Great One! அழியாத பரிசுத்த வடிவுடைய சிவபெருமானுக்கு எல்லாங் கடந்த பொருளை விளக்கிக் காட்டி உபதேசித்த தலைவரே! அடியவர்க்கு எளியராய் இருந்து அருள்புரியும் பெருமையின் மிகுந்தவரே!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே