31. தந்த பசி


ராகம்: ஆரபி தாளம்: ஆதி
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதடவியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயிரெனவேசார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு
மந்த வரிசைமொழிபகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிடமிசையேறி
அந்த கனுமெனை யடர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலியமயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மணிதனம
தன்ப னெனமொழியவருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலுமயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி னகரிலுறைபெருமாளே.


Learn the Song



Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

தந்த பசி தனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் (thandha pasi dhanai aRindhu mulai amudhu thandhu mudhugu thadaviya thAyAr ) : Mother, who instinctively understands the hunger pangs of the baby, and feeds her ambrosia-like breast milk and strokes the back of the child;

தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் (thambi paNividai sey thoNdar piriyamuLa thangai marugar ) : younger brother, obedient servants, dear younger sister, nephews,

உயிர் எனவே சார் மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் (uyir enavEsAr maindhar manaiviyar kadumbu kadan udhavum andha varisai mozhi pagar ) : my sons who love me as if I am their life, my wives and other relatives – all of them address me according to their relationship; கடனுதவும் அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து = தத்தம் கடமைக்குரிய அந்தந்த உறவுமுறைகளைச் சொன்னபடி, கடும்பு = சுற்றம்; கடனுதவும்: கடமைக்குரிய;

கேடா வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க (kEdA vandhu thalai navir avizhndhu tharai puga mayanga ) : they come distressed, their hair unknotted and disarrayed, and roll on the ground கேடா வந்து = குறையோடு வந்து, நவிர் = மயிர்;

ஒரு மகிடம் மிசை ஏறி அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ (oru magida misai yERi anthaganum enai adarndhu varugaiyinil anjal ena valiya mayilmEl nee ) : when the blind God of Death, Yama closes in on me, then, riding on the strong peacock you come assuring me freedom from fear; அந்தகன் (anthagan) : Yama, the blind god of death;

அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே (antha maRaliyodu ugandha manidhan namadhu anban ena mozhiya varuvAyE ) : and declare to Yama that I am your favourite and your devotee;

சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா (chindhai magizha malai mangai nagil iNaigaL sindhu bayam ayilum ayil veerA ) : PArvathi, daughter of HimavAn, feels delighted as you feed on milk springing from the twin breasts, Oh Warrior-God with the Spear! பயம் = பால்; அயிலும் = பருகும்;

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே. (thingaL aravu nadhi thundRu sadilar aruL sendhil nagaril uRai perumALE.) : You are the son of Shiva who wears the crescent moon, the serpent and the river Ganga on His tresses; oh god who resides in the town of Tiruchendur! துன்று = நெருங்கிய; சடிலர் = சடாமுடியை உடையவர்; சடிலம் = சடை;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே