35. தோலொடு மூடிய
Learn the Song
Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)
Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 SDr. Charulata Mani's Isai PayaNam
Paraphrase
தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி ( thOlodu mUdiya kUraiyai nambi pAvaiyar thOdhaka leelai nirambi chUzh poruL thEdida Odi varundhi ) : Capitalizing this body, which is like a hut with the roof made of skin, the harlots employ deceitful games of passion, and to earn money(to pay for their services) I run around distressed; கூரை வீட்டை ஓலையால் மூடியுள்ளதைப் போல் தோலால் மூடியுள்ள உடம்பை நிலைத்திருக்கும் என நம்பி, பெண்களது வஞ்சனையோடு கூடிய காமலீலையில் மிகவும் ஈடுபட்டு, நிலையின்றிச் சுற்றுகின்ற பொருளைத் தேடும் பொருட்டு பல திசைகளிலும் ஓடி மிகவும் வருத்தமுற்று, தோதகம் (thOdhakam ) : வஞ்சம்; .
புதிதான தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி ( pudhidhAna thUdhodu nAnmaNi mAlai prabandha kOvai yulA madal kURi azhundhi ) : (I) get totally engrossed in composing newer forms of Thoothu, Nanmani malai, Prabandham, Kovai, UlA and Madal (various form of literature in Tamil), நூதனமான, தூது, நாண்மணிமாலை, கோவை, உலா, மடல் முதலிய பிரபந்தங்களை அந்நரர்கள்மீது பாடி, அந்நரத்துதியிலேயே அழுந்திய மனத்தையுடையனாகி,
தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும் காலனை வீணனை (thOmuRu kALaiyar vAsal thoRumpukku alamArum kAlanai veeNanai) : I am a prodigal who takes them (the literary creations) from one dishonest patron to another and suffer anguish; குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற கால்களைக் கொண்டவனை, வீணனை; தோம் உறு = குற்றம் உள்ள; காளையர் வாசல் தோறும் = மக்களுடைய வாசல் தோறும்; புக்கு = புகுந்து; அலமாரும் = வருந்துகின்ற;
நீதி கெடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச காதக(ன்) லோப(ன்) வ்ருதாவனை நிந்தை புலையேனை (needhi kedum poy kOLanai mAnamilA vazhi nenja kAdhaga lOba vrudhAvanai nindhai pulaiyEnai) : (In order that) I, an immoral liar, shameless person, treacherous, greedy, incompetent, and a despicable, lowly person;
காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எ(ல்)லாம் அற (kAraNa kAriya lOka prapancha sOgam elAm aRa) : avoid the miseries in this world of cause and effect, காரண காரியங்களால் வந்த உலக வாழ்க்கையின் துன்பங்கள் முழுவதும் அறவே நீங்கப்பெற்று,
ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது (Cause) காரணம் எனப்படும். காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் (effect) எனப்படும். காரணம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நிகழ்வதில்லை. எண்ணெய் காரியம் என்றால் எள் அதன் காரணம். ஒரு காரியத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று சைவ சித்தாந்தம் கருதுகிறது. எடுத்துக்காட்டாக, பானை என்னும் காரியத்தை உருவாக்குவதில் பங்காற்றிய காரணங்கள் இவை: மண் முதற்காரணம், திரிகையும் அதை சுழற்றிவிடப் பயன்படும் குச்சியும் துணைக் காரணங்கள், குயவன் செயற்காரணம். உலக உருவாக்கத்திலும் அவ்வாறு மூன்று காரணங்கள் தொழிற்படுகின்றன என்கிறது சைவ சித்தாந்தம். மாயை என்னும் மூலமுதற் சடப்பொருள் முதற்காரணம், உயிர்களின் வினைகளும் இறைவனின் அருளும் துணைக்காரணம், இறைவன் செயற்காரணம். மண்ணைக் குழைத்துத் திரிகையில் ஏற்றி மனதில் தோன்றிய வடிவங்களை வடிக்கும் குயவனைப்போல, உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப உலகத்தை/பிரபஞ்சத்தை வடிக்கிறான் இறைவன். உயிர்கள் தங்கள் வினைகளுக்கு ஏற்ப சுக துக்கங்களை அனுபவிக்கின்றன.
வாழ்வுற நம்பி காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ (vAzhvuRa nambi kAsaRu vAri mey nynAna thavam chatRu aruLAdhO) : and lead a good life, will You not willingly grant me a little of the true wisdom which is a flawless treasure? முத்திப்பேற்றை அடைந்து இன்ப வாழ்வையடைய விரும்பும் அடியேனுக்கு, குற்றமற்ற, கடல்போன்ற, உண்மைஞானத்தோடு கூடிய தவநிலையை, சிறிது அருளக்கூடாதோ? நம்பி = விரும்பி; காசு அறு = குற்றமற்ற; வாரி = செல்வம்;
பால் அ(ன்)னம் மீது மன் நான் முக செம் பொன் பாலனை மோது அபராதன பண்டு (pAlana meedhu man nAnmuga sem pon bAlanai mOdhu aparAdhana paNdu ) : The four-faced Brahma with a reddish-golden complexion and seated on the milky-white swan, and once punished by You by knocking His heads with Your knuckles; பால் அன்னம் மீது (pAlana meedhu): on the milky white swan; மன் (man): seated; நான்முகன் : four headed; Brahma; பால் அன மீது மன் = பால் போன்ற வெண்ணிறமுடைய அன்னவாகனத்தின் மீது நிலைபெற்றவனும்; செம்பொன் பாலனை = சிவந்த இலக்குமிதேவியின் குமாரனுமாகிய பிரமதேவனை,
The next lines describe Lord Vishnu and addresses Muruga as the pleasant nephew of that Vishnu.
அ பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி (a pAriya mAruthi thOLmisai koNdu utRu amarAdi) : Once, He (Rama) sat on the shoulders of mighty HanumAn and fought in the battlefield;
பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வு உற மன்றல் பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே (pAvi irAvaNanAr thalai sindhi cheeriya veedaNar vAzhvuRa mandRal pAvaiyar thOL puNar mAthular chindhaikku iniyOnE) : (He)knocked off the heads of the sinner, RAvaNan; blessed virtuous Vibhishana with prosperous life; and hugged the shoulders of His consort, Seetha; that RAmA (Vishnu) is Your uncle, and You are very dear to His heart! மன்றல் பாவையர் = மணந்த பாவையாகிய சீதையின்; மாதுலர் = மாமன்; மன்றல் = திருமணம்;
சீலம் உலாவிய நாரதர் வந்து உற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய் (seelam ulAviya nAradhar vandhu utRu eedhu avaL vAzh punamAm ena mundhi thEmozhi pALitha kOmaLa inba girithOyvAy) : The righteous sage Naradha came to show You the millet-field where VaLLi was living; You then rushed over there to the honey-tongued VaLLi and embraced her beautiful mountainous bosoms, fragrant with the aroma of camphor! பாளித = பச்சைக் கற்பூரக் கலவை அணிந்த;
சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப சீரலைவாய் நகர் மேவிய கந்த பெருமாளே.(sElodu vALai varAlkaL kiLambi thARukoL pUgam aLAviya inba cheeralai vAynagar mEviya kandha perumALE.) : The various fish of the variety of sEl, vALai and varAl vault so high as to caress the bunches of betelnuts in the PUgam trees in this joyful town of ThiruchchendhUr, which is Your abode, Oh KandhA, the Great One! தாறு கொள் = குலைவிட்டுள்ள; பூகம் = கமுகு மரம்;
Comments
Post a Comment