33. துன்பம் கொண்டு

ராகம்: பைரவிதாளம்:
திச்ர த்ரிபுடை (7)
துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதிலணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படியருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடுமிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள்பெருமாளே.

Learn the Song


Raga Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S

Paraphrase

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே (thunbam koNdu angam melinthu aRa nondhu anbum paNbum maRandhu oLi thunjum peN sanchalam enpathil aNugAthE) : Miserable, emaciated and distressed, bereft of love and courtesy, and appearing lack-lutre because of lust for women; Instead of being entangled in this,

இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே ( inbam thanthu umbar thozhum patha kancham tham thanjam enumpadi yenRenRum thoNdu ceyumpadi aruLvAyE ) : Give me true happiness by granting me your lotus feet that's worshipped by Devas, so that I with the conviction that it is my (sole) refuge serve it always; தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே நமது தஞ்சம் என்று கொண்டு எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி நீ அருளவேண்டும். கஞ்சம் (kancham) : lotus;

நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு உன் தஞ்சம் எனும்படி நின்று அன்பின்தன் படி கும்பிடும் இளையோனே (nin pangu onRum kuRa min charaNam kaNdu un thanjam enumpadi ninRu anbin than padi kumbidum iLaiyOnE ) : You surrender to the feet of Valli who is clinging to your side and considering them as your refuge, You worship it, following the ways and path of love

பைம் பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே. ( paimpon sinthin thuRai thangiya kunRu engun sanku valampuri pampum then senthilil vanthu aruL perumALE. ) : On the shore of the greenish and beautiful sea, shells and conches abound on the hillside at ThiruchchendhUr, Your favourite abode, Oh Great One! பசுமைப் பொலிவு பெற்ற கடலின் கரையில் விளங்கும் குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே. பைம் (paim ) greenish; சிந்தின் துறை (sinthin thuRai) : sea shore; சிந்து (sinthu) : sea/ocean; பம்பும் = நிறைந்து கிடக்கும்;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே