45. மனத்தின் பங்கு
Learn the Song
Raga Begada (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S G3 R2 G3 M1 P D2 P S Avarohanam: S N3 D2 P M1 G3 R2Paraphrase
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்திரிய தம்பந்தனை சிந்தும்படி (manaththin pangu enaththangu aimbulaththu endRan guNaththu anju indhriya ththambandhanai chindhum padi kAlan ) : Shattering the five senses of perception through which the mind travels, my emotions tied with these senses, and my body to which these organs are attached; மனமானது உடலில் வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள ஐம்புலன் தொடர்பு கொண்டு, அடியேனுடைய குணமும், ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும் சிதறிப் போகுமாறு; மனத்தின் பங்கு என = மனம் செல்வதற்குப் பங்கு எடுத்துக் கொள்வன; அஞ்சு இந்த்ரிய தம்பந்தனை:– ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பு; தம்பம்:–தூண்; அஞ்சு இந்திரியம் = ஐம்பொறிகள்;
பஞ்ச ஞானேந்திரியங்கள்/அந்தகரணங்கள்/உட்கருவிகள் என்று கூறப்படும் ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் ஆறாவது இந்திரியமான மனம் என்னும் சூட்சும இந்திரியத்தின் சொற்படி ஆட்டம் போட்டு மனதில் மயக்கத்தினை விளைவிக்கின்றன.
காலன் மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம் கிழித்தின்று இங்கு உற (malar chenkaN kanal pongum thiRaththin thaNdu eduththu aNdam kizhiththu indRru ingu uRa ) : when Yama comes here fiercely piercing the sky, with a spark of fire spouting from his flower-like red eyes and his hands holding a powerful mace, மலர் செங்கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து:– மலர்ப் போன்ற கண்களில் நெருப்புப் பொறி பொங்கி எழு வலிமையுடன் தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு இன்று இங்கே வர,
தங்கும் பலவோரும் எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்று இளைத்து அன்பும் கெடுத்து அங்கம் அழிவா முன் ( thangum palavOrum enakkendru ingu unakkendRu angu inaththinkaN kaNakkendRu enRu iLaiththu anbum keduththu angam azhivAmun ) : all the relatives residing in my home try to loot my property, saying, "this is mine and that is yours", fighting with each other, citing property details to other members of the community, without any love for me; என் குடும்பத்தில் தங்கும் உறவினர் பலரும் இது எனக்கு, அது உனக்கு என்று என் சொத்துக்களைப் பங்கு வைத்து அதில் தகராறுப்பட்டு கணக்கு வழக்குகளைப் பார்த்து உடம்பு இளைத்து அன்பையுங் கெடுத்து இடர்ப்பட்டு என் உடம்பு அழிவடையா முன்
இசைக்கும் செம் தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம் கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே ( isaikkum sen thamizhkkoNdu angu ikirakkum pun thozhil bangam keda thunbam kazhiththu inbam tharuvAyE ) : Before my body decays thus, bless me with your grace so that I do not use the musical and poetical Tamil words in the contemptible job of soliciting others for alms and remain peaceful. புகழ் நிறைந்த செந்தமிழ் மொழியைக்கொண்டு, இறைவனைப் பாடி உய்வு பெறாமல் பொருள் உள்ள இடந்தோறும் சென்று அருளற்ற மனிதர் மீது செஞ்சொல் கொண்டு பாடி யாசிக்கும் இழிந்த தொழிலின் துன்பத்தை நீக்கி பேரின்பத்தைத் தந்து அருள்புரிவீர்.
சிவபெருமானுக்கு முருகவேள் உபதேசித்த பிரணவமாகிய செம்பொருளை தாம் அறியவில்லையேயென மாலும் அயனும் நாணிப் பெருமிதம் குன்றினர்.. Both Brahnma and Vishnu were humbled by the thought they did not know the meaning of pranava mantra that Murugan expounded to His father, Lord Shiva.
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும் கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும் ( kanaikkum thaN kadal chankam karaththin kaN thariththu engum kalakkam sindhida kaN thunjidum mAlum ) : Lord Vishnu who, in order to remove the misery of souls everywhere, feigns sleep and reclines on the Snake bed, holding The white conch-shell Panchajanyam that came from the cold, roaring ocean; and ; and ஒலி செய்யும் குளிர்ந்த கடலில் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற வெண்சங்கை தனது திருக்கரத்திலே ஏந்தி உலகமெங்கும் உள்ள ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு அறிதுயில் புரிகின்ற திருமாலும்;
திருமால் அரவணைமீது அறிதுயில் புரியும் யோக நித்திரையால் உலகமெல்லாம் உயிர்கள் இன்புறுகின்றன.
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட ( gadhiththa oN pangayaththan paNbu anaiththum kundRida ) : BrahmA, who emerged from the bright lotus from the navel of Vishnu; the prestige of both these Gods were dimmed when அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய ஒளிவீசும் பிரமனும்; இவர்கள் இருவருடைய பெருமை யாவும் குறைவு படுமாறு, கதித்த = (உந்தித் தாமரையில்) தோன்றிய; ,
சந்தம் களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய் (chandham kaLikkum sambuvukkum sem poruL eevAy) : You interpreted the grandeur of the PraNava ManthrA musically to an ecstatic Lord SivA, சந்தப் பாடலைக் கேட்டு உள்ளம் மகிழும் சிவபிரானுக்கு செம்மைப் பொருளான பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே!
தினை குன்றம் தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம் திரு செம் பொன் புயத்து என்றும் புனைவோனே (thinai kundram thanil thangum siRu peN kunguma kumbam thiru chem pon buyaththu endRum punaivOnE ) : You embraced with your golden shoulders the little girl Valli who lives in the millet-field near the hill and whose bosom is smeared with vermilion paste
செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம் பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே.(sezhikkum kuNdu agazh changam kozhikkum santhhanaththin paim pozhil thaN sendhilil thangum perumALE.) : You reside in the cool groves of sandalwood trees at Thiruchchendur along the shores of the deep sea rich in varieties of conch shells, Oh Great One! குண்டு அகழ் = ஆழ்ந்த நீர்நிலை (கடல்);
Comments
Post a Comment