43. பூரண வார கும்ப

ராகம் : சங்கரானந்தப்பிரியாதாளம் : 2 + 1½ + 1½
பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை
மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று
போதவ மேயிழந்து போனது மானமென்பதறியாத
பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்ச
பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து
போனவர் வாழ்வுகண்டு மாசையி லேயழுந்துமயல்தீரக்
காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து
காலுட லூடியங்கி நாசியின் மீதிரண்டுவிழிபாயக்
காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு
காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்கஅருள்வாயே
ஆரண சாரமந்த்ர வேதமெ லாம்விளங்க
ஆதிரை யானைநின்று தாழ்வனெ னாவணங்கு
மாதர வால்விளங்கு பூரண ஞானமிஞ்சுமுரவோனே
ஆர்கலி யூடெழுந்து மாவடி வாகிநின்ற
சூரனை மாளவென்று வானுல காளுமண்ட
ரானவர் கூரரந்தை தீரமு னாள்மகிழ்ந்தமுருகேசா
வாரண மூலமென்ற போதினி லாழிகொண்டு
வாவியின் மாடிடங்கர் பாழ்பட வேயெறிந்த
மாமுகில் போலிருண்ட மேனிய னாமுகுந்தன்மருகோனே
வாலுக மீதுவண்ட லோடிய காலில்வந்து
சூல்நிறை வானசங்கு மாமணி யீனவுந்து
வாரிதி நீர்பரந்த சீரலை வாயுகந்தபெருமாளே.

Learn the Song



Paraphrase

பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்றுபோது அவமே இழந்து போனது மானம் என்பது அறியாத (pUraNa vAra kumba seetha padeera kongai mAthar vigAra vanja leelaiyilE uzhanRu pOthavamE yizhanthu pOnathu mAnam enbathu aRiyAtha) : Entangled in the graceless and treacherous games of love that the harlots play, with their full and pot-like breasts smeared with cool sandalwood paste and sheathed in enticing blouses, I have become so debased that I don't even realize what I have lost is my honour; நிறைந்து, கச்சு அணிந்த, கும்பம் போன்ற, குளிர்ந்த சந்தனக் கலவை அணிந்த மார்பகங்களை உடைய விலை மாதர்களுடைய அவலட்சணமான, வஞ்சகமான ஆடல் பாடல்களில் அலைப்புண்டு, பொழுதை வீணாக இழந்து, மானம் போய் விட்டது என்பதை அறியாத

பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்ச பாதகனாய் அறம் செய்யாது அடியோடு இறந்து போனவர் வாழ்வு கண்டும் (pUriyanAgi nenju kAval padAtha panja pAthaganAy aRanjeyAthu adiOdu iRanthu pOnavar vAzhvu kaNdum AsaiyilE azhunthu mayal theera) : I have become so lowly that my heart, despite witnessing people committing unhindered all the five cardinal sins and dying without doing any charity, still remains intoxicated following the path of desires; to get out of this torpid slumber, கீழ் மகனாகி, மனத்தால், கட்டுக்கு அடங்காத ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவனாக, தருமமே செய்யாமல் அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைப் பார்த்தும், பூரியன் = கீழ் மகன்

ஆசையிலே அழுந்து மயல் தீர, காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து கால் உடலூடு இயங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய (kAraNa kAriyangaL AnathelAm ozhinthu yAn enum mEthai viNdu pAvakamAy irunthu kAl udal Udi angi nAsiyin meethu iraNdu vizhi pAya ) : Let me go beyond the cause and effect cycle; attain a state where my ego and arrogance perish, while the life-giving prana travels throughout all parts of my body and the two corners of my eyes focus on my nostril; ஆசையில் அழுந்தும் (எனது) மயக்கம் ஒழியும்படி நான் என வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய; பாவகமாய் இருந்து = தூயவனாக இருந்து; கால் உடலூடு இயங்கி = பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, தியானம்; மேதை விண்டு = ஆணவம் நீங்கி,

காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து (kAyamum nAvum nenjum Orvazhi yAga anbu kAyam vidAmal unRan neediya thAL ninainthu ) : my body, my speech and my mind should act in unison, and without forsaking love until my body lasts, I wish to contemplate only on Your hallowed feet; காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து,

காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே (kANuthal kUr thavam sey yOgigaLAy viLanga aruLvAyE ) : and attain the divine vision to see them and become one like the ascetic Yogis who have performed severe penance. காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக.

ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும் ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சும் உரவோனே (AraNa sAra manthra vEtham elAm viLanga Athirai yAnai ninRu thAzhvan enA vaNangum AtharavAl viLangu pUraNa njAna minju muravOnE) : You are the benign, loving and wise Thirugyana Sambandar who sang Thevaram hymns expounding vedic concepts and manthras to the god of Thiruvadirai, who bowed to you reverentially; வேதத்திலுள்ள இரகசியங்கள் முழுவதும் நன்றாக விளங்கும்படி, திருவாதிரை நக்ஷத்திரத்திற்கு உரித்தானவராகிய சிவபெருமான் முறைப்படி தாழ்ந்து எதிரில் நின்று “நின்னைப் பணிகின்றேன்” என்று கூறி வணங்கும்படியான, அன்பினால் விளங்குகின்ற, நிறைந்த ஞானம் ததும்பிய வல்லமையான அறிவுடையவரே!, ஆரண சார மந்திர = வேத சாரமான மந்திரங்களும்; ஆதிரையானை = திருவாதிரை நாளுக்கு உகந்தவனான சிவபெருமானை; உரவோன் = வலிமையுடையவன், ஊக்கமுடையோன்;;

ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும் அண்டரானவர் கூர் அரந்தை தீர மு(ன்)னாள் மகிழ்ந்த முருகேசா (Arkali yUdu ezhunthu mA vadivAgi ninRa sUranai mALa venRu vAn ulagALum aNdar Anavar kUr aranthai theera munAL magizhntha murugEsA) : You conquered and killed the demon SUran who took the disguise of a mango tree and stood amidst the sea. You felt elated terminating the major misery suffered by the DEvAs who ruled the celestial land, Oh Lord MurugA! அரந்தை ( aranthai ) : trouble/misery; ஆர்கலி ஊடே = கடலின் நடுவில்;

வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே (vAraNam mUlam enRa pOthinil Azhi koNdu vAviyin mAdu idangar pAzh padavEy eRintha mAmugil pOl iruNda mEniyanAm mukunthan marugOnE) : You are the nephew of dark-cloud hued Lord Vishnu who rushed with the disc in His hand and wielded it to destroy the crocodile in the pond when the elephant (GajEndran) screamed for help shouting "Oh, Primordial Lord!" இடங்கர் (idangar) : Crocodile; வாவியின் மாடு (vAviyin mAdu) : மடுவில் இருந்த;

வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே.(vAlugam meethu vaNdal Odiya kAlil vanthu sUl niRaivAna sangu mAmaNi yeena vunthu vArithi neer parantha seeralai vAy ugantha perumALE. ) : Flowing through the back-water on the white sand in the canal of the delta region, the waves of the vast sea fling fully-pregnant conch-shells that yield precious pearls on the shore at TiruchchendhUr where You are seated with relish, Oh Great One! வாலுகம் ( valugam) : White sand; காலில் வந்து = வாய்க்கால் வழியாக வந்து; சூல் நிறைவான = கருப்பம் நிறைந்த;

Lecture By Mrs Devaki Iyer

Comments

  1. I want to download this song 43. Poorana vaara. The link to Ushankari page is not working properly. Can you help me with downloading this song and other songs as well? Pls reply to tnkris1@gmail.com. Thank you

    ReplyDelete
    Replies
    1. I am sorry I saw the message only now. If you can send a request through whatsapp I can send you the mp3. Since I am having only a free account in that site, there's bound to be restrictions I am unaware of. You may write to me at umashankari.venkataraman@gmail.com and I will send whatsapp number.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே