90. வரதா மணி
ராகம்: ராமப்பிரியா | அங்க தாளம் (2+2+2½) |
வரதா மணிநீ | யெனவோரில் |
வருகா தெதுதா | னதில்வாரா |
திரதா திகளால் | நவலோக |
மிடவே கரியா | மிதிலேது |
சரதா மறையோ | தயன்மாலும் |
சகலா கமநூ | லறியாத |
பரதே வதையாள் | தருசேயே |
பழனா புரிவாழ் | பெருமாளே. |
Learn the Song
varugaadhedu thaan adhil vaaraa
dhiradhaadhigaLaal navalOkam
idavE kariyaam idhilEdhu
saradhaa maRai Odhayan maalum
sakalaagama nool aRiyaadha
paradhEvathaiyaaL tharu sEyE
pazhaNaapuri vaazh perumaaLE.
Paraphrase
The ancient art of Rasasiddhi or alchemy believed that mercury was at the core of all metals and postulated that gold, silver, copper, tin, lead and iron were all mixtures of mercury and other substances and that the correct combination of mercury and other ingredients would yield riches of gold.
வரதா மணி நீ என ஓரில் (varadhA maNi nee ena Oril) : If we contemplate that You are the conferrer of all boons and, like the ChinthAmaNi, the provider of all that we desire. வரத்தை வழங்குபவரே! நினைத்தபடி வழங்கும் சிந்தாமணி தேவரீரே என்று ஆராய்ந்து உணர்ந்து அன்பு செய்தால்,
"பிரமதேவர் வரதா முருக தம்பிரானே” (ஆறுமுகம் ஆறுமுகம்) “வரதா முருகா மயில்வாகனனே” (அநுபூதி) என்ற சுவாமிகளது திருவாக்கு நினைவு கூரவும்.
வருகா(த)து எது தான் (varugAdhu edhu thAn ) : what can we not accomplish by praying thus?
அதில் வாராது இரத ஆதிகளால் நவ லோகம் இடவே கரியா(கு)ம் இதில் ஏது (adhil vArAdhu iradha AdhigaLAl navalOkam idavE kariyAm idhil Edhu) : People try to create gold by combining mercury with nine other metals, but the outcome is just coal. What is there in this? ரசவாதம் முதலியவற்றை பிரயோகித்து ஒன்பது வகையான உலோகங்களை நெருப்பிலிட அவை முடிவில் கரியாகும். இதனால் பயன் ஏது?;
சரதா மறை ஓதும் அயன் மாலும் (saradhA maRai Odhum ayan mAlum ) : You are the personification of Truth. (The goddess) beyond the comprehension of Brahma, the preacher of Vedas, Lord Vishnu, சரதா (saradhA) : சத்திய வடிவினர்;
சகல ஆகம நூல் அறியாத பர தேவதையாள் தரு சேயே (sakala Agama nUl aRiyAdha paradhEvathaiyAL tharu sEyE) : and various numerous scriptures – such is the Supreme Mother Parvati, and You are Her son!
பழனா புரி வாழ் பெருமாளே.(pazhaNApuri vAzh perumALE) : You are the dweller of Pazhzani!
விளக்கவுரை: ஜானகி ரமணன், புனே
வரங்களை அள்ளி அள்ளி வழங்குபவனாய், நினைத்ததைக் கொடுப்பதில் சிந்தாமணியாய் இருப்பவன் ஐயன் முருகன். அந்த வரதாமணியைத் தொழுத பின்னர் கைகூடாத காரியம் என்று எதுவும் உண்டோ! கிடைக்காத பேறு என்று எதுவும் இருக்கிறதோ! இகபர சுகம் தருபவன் அந்த சரவணபவன் எனத் தெளிவு படுத்துகிறார். அவன் அருளால் மனதில் ஒரு ரசவாதம் நடக்க வேண்டும் என்கிறார். இரும்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தையெல்லாம் எதற்கு எனக் கேள்வி எழுப்புகிறார். தரம் தாழ்ந்து கிடக்கும் மனிதகுலம் தழைக்க சன்மார்க்கம் காட்டுகிறார்.
வரதாமணி நீ என ஓரில்
வருகா தெதுதான் ..... அதில் வாரா
பக்தர்கள் சுகத்திற்காக கேட்கும் வரங்களை வாரி வாரி வழங்கும் வள்ளலே, வள்ளி மணாளா. நினைத்ததை எல்லாம் நடத்திக் கொடுத்து விடுகிறாய். வரதாமணியே, முருகா உன்னைத் தொழுத பின், நடக்காத காரியம், கிடைக்காத பேறு என்று எதுவும் உண்டோநீ இருக்க வேறு செல்வங்களும் எனக்கு வேண்டுமோ! இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற தேவியர் இருவருடன் இணைந்து இகபர சுகம் தரும் ஞானசக்தி ஸ்வரூபன் அல்லவா நீ!
திரதாதிகளால் நவலோகம்
இடவே கரியா....மிதிலேது
செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வமாய் நீ இருக்க, உன்னைத் தேடாமல், பொன்னும் பொருளும் தேடுகிறது உலகம். தரத்தில் தாழ்ந்த உலோகங்களை எல்லாம் தகதகக்கும் பொன்னாக்குவதற்கு ரசவாத வித்தையில் ஈடுபடுகிறது. ஈயம், பித்தளை, வெண்கலம், துத்தநாகம், தகரம், இரும்பு, செம்பு, வெள்ளி, பொன் இவற்றை பாதரசத்துடன் சேர்த்து ஏதேதோ, ரசாயனக் கிரியைகள் செய்து பாரக்கிறது. பொன் கிடைப்பது போல் தோன்றிப் பிறகு எல்லாமே கரியாகிவிடும் வேண்டாத வித்தை தான் அது. தரம் தாழ்ந்த என் மனதைப் பொன்னாக்கும் ரசவாதக் கலை உன்னிடம் அல்லவா இருக்கிறது என் தலைவா! என்னை மாற்று.
சரதா மறையோது அயன், மாலும்
சகலாகம நூலும்..... அறியாத
பரதேவதையாள் தருசேயே
பழனாபுரி வாழ் ......பெருமாளே
சத்திய நித்திய தத்துவமே, பரம் பொருளே! வேதனாம் படைப்புக் கடவுள் பிரம்மனும், காக்கும் கடவுள் திருமாலும், ஆகம சாஸ்திரங்களும் கூட அறிய முடியாத அந்த ஆதிபராசக்தியின் அருமை மைந்தா, முருகா. ஏழைகளின் நீங்காத செல்வமாய், பழனிமலையில் கோயில் கொண்டிருக்கும் பரமா சரணம்.
Comments
Post a Comment