95. இருவினை புனைந்து

ராகம்: அடாணாஅங்க தாளம் (5½)
2 + 2 + 1½
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போகமலமூட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாதமலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவிவரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரியருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலையுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே.

iruvinai punainadhu nyaana vizhimunai thiRandhu nOyin
iruvinai idaindhu pOga malamooda

iruLaRa viLangi aaRu mukamodu kalandhu bEdham
ilaiyena iraNdu pErum azhagaana

parimaLa sugandha veedha mayamena magizhndhu dhEvar
paNiya viN madandhai paadha malar thoova

parivuko danantha kOti munivargaL pugazhndhu paada
paru mayiludan kulaavi varavENum

ari ayan aRindhidaadha adiyiNai sivandha paadham
adiyena viLangi aadu nataraajan

azhaluRum irumbin mEni magizh marakadham peNaagam
ayalaNi sivan puraari aruL sEyE

maru valargaL thiNpaNaara mudi udal nadunga aavi
maRaliyuNa vendra vElai udaiyOnE

vaLai kulam alangu kaaviriyin vada puRam suvaami
malai misai viLangu dhEvar perumaaLE.


Learn the Song


Raga Atana (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N3 S D2 P M1 R2 G3 R2 S

Paraphrase

இரு வினை புனைந்து ஞான விழிமுனை திறந்து ( iruvinai punainthu gnAna vizhimunai thiRanthu) : I would like to achieve the state of Siva-yOgA and open the central eye on my forehead that represents knowledge; அடியேன் பெரிய செயலாகிய சிவயோகத்தை மேற்கொண்டு, அறிவுக் கண்ணாகும் புருவ மத்தியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று, இரு வினை ( iruvinai) : strong action, Siva Yoga; இரு = பெரிய; வினை = செயல்; பெரிய செயலாவது சிவயோகம், இருவினை புனைந்து = சிவம், சக்தி இரண்டின் செயலையும் இணைத்து, the joining of dual aspects, ie the union of Siva and Shakti;

நோயின் இருவினை இடைந்து போக (nOyin iruvinai yidainthu pOga ) : so that the good and bad actions, which we perform and which manifest as diseases (and are the cause of future births), get destroyed, and பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள நல்வினை தீவினையென்னும் இரு வினைகளும் பயந்து பின் வாங்கியோடிப் போகவும்;
முற்பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் ‘சஞ்சித வினை’ என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது ‘பிராரப்த வினை'.

மலம் மூட இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் (malamUda iruLaRa viLangi ARu mukamodu kalanthu bEtham ilaiyena iraNdu pErum) : egoism that is the cause of the darkness of ignorance gets erased, and I mingle with the radiant grace of Your six faces, without any distinction between the two of us, அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவமென்னும் இருள் மலம் தேய்ந்தழியவும், அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறு திருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும்,

அழகான பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ (azhagAna parimaLa sugantha veetha mayam ena makizhnthu thEvar paNiya viN madanthai pAtha malar thUva) : and the Devas feel happy that our union is like that of the beautiful flower and its sweet fragrance, while the Celestial girls shower flowers at Your feet, பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து ( parimaLa sugantha veetha mayam ena makizhnthu) : நல்ல வாசனையுடைய மலரும் அதில் வீசும் மணமும் போல் ஒன்றி பேரின்பமுற்று

பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும் ( parivu kodu anantha kOdi munivargaL pugazhnthu pAda parumayi ludanku lAvi varavENum) : and as the countless million sages sing Your glory with devotion, You must come to me happily mounted on Your strong Peacock!

அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன் ( ari ayan aRinthidAtha adi iNai sivantha pAtham adi ena viLangi Adu nadarAjan) : Lord Shiva as Natarajan whose rosy feet could not be found by Vishnu and BrahmA and who dances in ecstasy;

அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே (azhaluRu mirumpin mEni makizh mara kathampe NAkam ayalaNi sivan purAri yaruLsEyE ) : and whose body has a red complexion akin to the hot iron on fire and gladdens the heart of PArvathi with emerald-green complexion seated by His side; He is the conqueror of Thripuram! You are His beloved Son!

மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உ(ண்)ண வென்ற வேலை உடையோனே ( maruvalarkaL thiN paNAra mudi udal nadunga Avi maRali uNNa venRa vElai udaiyOnE : You possess the victorious vel, which made the mighty and the adorned bodies and heads of the hostile demons (asuras) shiver with fear, and let the Death-God (Yaman) devour them! பகைவராகிய அசுரர்களின் வலிமையான, அலங்கார ஆரமணிந்த தலைகள், உடல்கள் அச்சத்தில் நடுங்க அவர்களது உயிரை யமன் உண்ண, வெற்றி பெற்ற வேலை உடையவனே, திண்பண் ஆரமுடி (thiN paN Ara mudi ) : strong and bejewelled crown; அலங்காரமாகவுடைய நவரத்தின மாலைகளுடன் கூடிய தலை

வளை குலம் அலங்கு காவிரியின் வட புறம் சுவாமி மலை மிசை விளங்கு தேவர் பெருமாளே. ( vaLai kulam alangu kAviriyin vada puRam suvAmi malai misai viLangu thEvar perumALE.) : On the Northern banks of the River KAvEri, where shiny conch shells are abundant, there is this place, SwAmimalai, Your abode, Oh Great One and Master of all DEvAs! வளை குலம் (vaLai kulam) : heaps of conch shells; அலங்கு ( alangu ) : moving through;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே