97. ஒருவரையும் ஒருவர்

ராகம்: சக்ரவாஹம்தாளம்: 2½ + 2½ + 1½ + 2 (8½)
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்
சனையாலே
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந்
திடுவேனைக்
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்
டருமாமென்
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்
தெனையாள்வாய்
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
திகழருண கிரிசொருப னாதி யந்தமங்
கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும்
புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந்
திடுவோனே
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம்
பெருமாளே.

oruvaraiyum oruvar aRiyaamalun thirindhu
iruvinaiyin idar kaliyodaadi nondhu nondhu
ulaiyilidu mezhugadhena vaadi munsey vanjanaiyaalE

oLi peRave ezhubu mara paavai thundridung
kayiRu vidhamena maruvi aadi viN paRindhu
oLiru minal uruvadhena Odi angam vendhiduvEnai

karudhiyoru parama poruLeedhu endru en
seviyiNaiyin aruLi uruvaagi vandha en
karuvinaiyo darumalamu neeRu kaNdu thaN tharu maamen

karuNaipozhi kamalamukam aaRum indhuLan
thodai makuta mudiyum oLir noopuran charaN
galagalena mayilin misai ERi vandhugandh enaiyaaLvaay

thiripuramu madhanudalu neeRu kaNdavan
tharuNam azhavidaiya nataraaja nengaNun
thigazharuNa giri soroopa naadhi anthaman gaRiyaadha

sivayanama namasivaya kaaraNan suran
dhamudhamadhai aruLi emai aaLum endhai than
thiru uruvin magizh enadhu thaay payandhidum pudhalvOnE

kurugu kodiyudan mayilil ERi mandharam
buvanagiri suzhala maRai aayirangaLung
kumaraguru enavaliya sEdan anja vandhiduvOnE

kuRamagaLin idai thuvaLa paadha chenchilam
boliya oru sasimagaLodE kalandhu thiN
gurumalaiyin maruvu gurunaatha umbar tham perumaaLE.

Learn the Song


Learn the Ragam Chakravaham (16th mela)

Arohanam: S R1 G3 M1 P D2 N2 S     Avarohanam: S N2 D2 P M1 G3 R1 S

Paraphrase

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து ( oruvaraiyum oruvar aRiyAmalun thirindhu ) : I wander, unable to recognize anyone (because of not remembering past births, we are unable to realize what relationships we had held with people around us), மாயையாகிய திரையால் மூடப்பட்டு முற்பிறப்பின் உணர்வும் நினைவும் இல்லாததால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முடியாமல் அலைந்து திரிந்தும்

இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்து நொந்து உலையில் இடு மெழுகு அது என வாடி (iruvinaiyin idar kaliyodAdi nondhu nondhu ulaiyil idu mezhugadhena vAdi) : having to suffer the results of my good and bad karmas, i feel miserable and wither, like the wax caught in the fireplace,

முன் செய் வஞ்சனையாலே ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி (munsey vanjanaiyAlE oLi peRave ezhubu mara pAvai thundridum kayiRu vidhamena maruvi Adi) : and because of the delusions caused by sins committed in my past births, I danced like a wooden puppet manipulated by invisible strings; முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக, பெருமையுடன் விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும் கயிற்றின் இழுப்பிற்குத் தக்க பல ஆட்டங்களை ஆடி,

விண் பறிந்து ஒளிரும் மி(ன்)னல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை (viN paRindhu oLiru minal uruvadhena Odi angam vendhiduvEnai) : like the lightning that flashes and disappears in the sky, my (transient) body too fades away in a flicker and burns away; ஆகாயத்தில் வெளிப்பட்டு ஒளி செய்யும் மின்னலைப்போல் ஒரு நொடியில் வாழ்நாள் கடந்து போக,

கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி (karudhi oru parama poruL eedhu endru en sevi iNaiyil aruLi) : Consider me your devotee and preach to me in both my ears declaring "This is the matchless Supreme thing";

உருவாகி வந்த என் கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு ( uruvAgi vandha en karuvinaiyodu aru malamum neeRu kaNdu) : destroy and burn away all my karmass and the three blemsishes (arrogance, karma and delusion)(

தண் தரு மா மென் கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் (thaN tharu mA men karuNai pozhi kamalamugam ARum indhuLam thodai maguda mudiyum oLir nUpuram charaN galagalena mayilin misai ERi vandhugandh enaiyALvAy) : Kindly come with your six cool, soft and lotus faces that shower compassion, with your garland of kadappa flowers, with the dazzling crowns on Your head studded with precious stones and withYour feet with jingling anklets on a peacock, and take me under your sway. தண் தரு மா மென் = குளிர்ச்சியைத் தருவதும், பெருமை பொருந்தியதும், மேன்மையுடையதும்; இந்துளம் தொடை = கடப்ப மாலை;

The next lines describe Lord Shiva:

திரி புரமும் மதன் உடலு(ம்) நீறு கண்டவன் (thiripuramu madhanudalu neeRu kaNdavan) : He burned to ashes Thripuram and the body Manmatha, the god of Love; திரிபுரத்தையும் மன்மதனுடைய உடலையும் சாம்பலாக எரித்தவரும்;

தருணம் மழ விடையன் நடராஜன் (tharuNam azhavidaiya natarAjan) : He rides the young and strong bull (Nandi); He is Natarajan, the god who dances the cosmic dance; மிக்க இளம் பருவமுடைய இடபத்தின் மீது எழுந்தருளி வருபவரும்; தருமமே இடப வடிவாகி சிவபெருமானை வாகனமாகத் தாங்குகின்றது. தருமம் ஒருபோதும் முதுமையை அடையாது. என்றும் நிலைத்து இளமையாகவே இருக்கும்; தருணம், மழ = இளமை;

எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத (engaNun thigazharuNa giri sorUpan Adhi antham angaRiyAdha sivayanama namasivaya kAraNan) : He is Omnipresent in the form of the red and radiant Mount AruNagiri whose top and the bottom could not be fathomed by VishNu and BrahmA; சிதாகாசப் பெருவெளியில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும், எங்கும் நீக்கமற நிறைந்து தன்னருட் ஜோதிப் பிழம்பு வீசுமாறு, மாலும் அயனும் மேலும் கீழும் தேடி அடியையும் முடியையும் அறியாமல் திகைக்கும் வண்ணம் சிவந்த நெருப்பு மலை வடிவாக நின்றவரும்,

சிவய நம நம சிவய காரணன் (sivayanama namasivaya kAraNan) : He is the primeval causal substance and the meaning of the five sacred letters "SivAyanama"; சூக்கும ஐந்தெழுத்தானவரும், ஸ்தூல ஐந்தெழுத்தானவரும், காரண ஐந்தெழுத்தானவரும்,

‘Om Nama Sivayah, is called Sthula Panchakshara and ‘Sivaya namaha.’ is called Sookshma Panchakshara Each of the letters in these mantras has significance. ‘Na’ represents our pride, ‘Ma’ represents the impurities in our minds, ‘Si’ represents Lord Siva, ‘Va’ represents Goddess Sakti, and ‘Ya’ represents the atma. When Appar (Thirunavukkarasar) was cast into the sea, He recited, ‘Nama Sivaya,’ and was saved. But that was a prayer to save him from death. But when he prayed for moksha in Thirupadirippuliyur, he recited ‘Sivaya Namaha,’ indicating that this is the mantra for moksha. For worldly objectives, therefore, ‘Nama Sivaya’ is recited, but for moksha, ‘Sivaya Namaha’ is recited.

சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன் திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே (surandha amudham adhai aruLi emai ALum endhai than thiru uruvin magizh enadhu thAy payandhidum pudhalvOnE) : which when intoned, streams out nectar and my father, the Lord, offers it to me; on His left side is our Divine Mother PArvathi and You are Her child!

குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல (kurugu kodiyudan mayilil ERi mandharam buvanagiri suzhala) : Holding the staff of Rooster in Your Hand and mounting the Peacock, making all the mountains of the world, including Mount Mandharam, spin,

மறை ஆயிரங்களும் குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே (maRai AyirangaLung kumaraguru ena valiya sEdan anja vandhiduvOnE) : You come to the chant of "Oh Kumara! Oh Master!" by thousands of vEdAs, scaring away the powerful serpent, AdhisEsha

குற மகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து (kuRamagaLin idai thuvaLa pAdha chem chilamboliya oru sasi magaLodE kalandhu) : making the waist of VaLLi, the damsel of the KuRavAs, quiver and rattle the reddish anklets on her feet, and uniting with DevayAnai, the daughter of Sasi, IndrA's wife,

திண் குரு மலையின் மருவு குரு நாத உம்பர் தம் பெருமாளே. (thiNgurumalaiyin maruvu gurunAtha umbar tham perumALE ) : You are seated in the firm and strong mountain of SwAmimalai, Oh Master and the Lord of celestials!

பதவுரை

திரிபுரத்தையும் மன்மதனுடைய உடலையும் சாம்பலாக எரித்தவரும், மிக்க இளம் பருவமுடைய இடபத்தின் மீது எழுந்தருளி வருபவரும், சிதாகாசப் பெருவெளியில் ஆனந்தத் தாண்டவம் புரிபவரும், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து தன்னருட் ஜோதிப் பிழம்பு வீசுமாறு, மாலும் அயனும் மேலும் கீழும் தேடி, அடியையும் முடியையும் அறியாமல் திகைக்கும் வண்ணம் சிவந்த நெருப்பு மலை வடிவாக நின்றவரும், தூலசூக்கும காரண பஞ்சாக்கரப் பொருளாக விளங்குபவரும், அமிர்தத்தைச் சுரந்து, அடியோர்களுக்கு அருளி ஆட்கொள்ளும் எமது பரமபிதாவாகிய சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பாதியைப் பெற்று மகிழ்கின்ற, அடியேனுடைய தாயாராகிய பார்வதி தேவியார் பயந்தருளிய திருக்குமாரரே!

சேவற் கொடியுடன் மரகத மயிலின் மீது ஆரோகணித்து, மந்தர மலையும் புவனங்களும் மற்றைய மலைகளும் மயிலினது சிறகு அடித்து கொள்ளும் வேகத்தில் காற்றானது சுழலவும், ஆயிரம் வேதங்களும் “குமரகுரு” என்று ஓலமிடவும், வலிமைமிக்க ஆதிசேடன் அச்சமுறவும் பவனி வருகின்றவரே!

வள்ளியம்மையாருடைய மெல்லிய இடை துவளவும், அவருடைய தாமரைத் தாளில் அணிந்துள்ள சிறந்த பொற் சிலம்புகள் ஒலிக்கவும் அவரைக் கலந்து, இந்திராணிக்குத் திருமகள் எனஅவதரித்த, ஒப்பற்ற தேவகுஞ்சரி அம்மையாரையும் மருவி, வந்தவர் வினை தீர்க்க வல்லதாகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள ஞானகுரு மூர்த்தியே! தேவர்கட்கெல்லாம் பெருமையின் மிக்கவரே!

அறியாமையாகிய திரையினால், முற்பிறப்பின் உணர்ச்சி இன்மையால், ஒருவரையும் இன்னார் என அறிந்து கொள்ள முடியாமல் திரிந்தும், நல்வினை தீவினை என்ற இருவினைகளின் பயனாகவும், இன்ப துன்பங்களினால் ஆடி மிகவும் வருந்தியும், உலையிலிட்ட மெழுகைப்போல் உருகி வாடியும், முற்பிறப்பில் செய்த வஞ்சனையால் பாவைக் கூத்தில் சூத்திரதாரி பல கயிறுகளைக் கொண்டு ஆட்டும் மரப்பாவை போல் (உள்ளே உயிருக்குயிராயுள்ள இறைவனால் ஆட்டப் பெற்று) ஆடியும், ஆகாயத்தில் ஒரு கணத்தில் ஒளிசெய்து மறையும் மின்னலைப்போல் நிலையற்ற வாழ்நாள் கழிந்தவுடன் உடல் வெந்து அழியப்படுவேன் ஆகிய அடியேனை, தேவரீரது அடியார் குழாத்துள் ஒருவனாகக் கருதி, ஒப்பற்ற பெரிய பொருள் இதுவே என்று அடியேனுடைய இருசெவியிலும் உபதேசித்து, வினைப்பயனால் உடலோடு கூடி வந்துள்ள அடியேனுடைய கொடிய வினையும் அரிய மும்மலங்களும் பொடிபட்டு ஒழியவும், குளிர்ந்ததும் பெருமை பெற்றதும் மேன்மை உடையதும் ஆகிய தேவரீருடைய கருணை பொழிகின்ற ஆறு திருமுகங்களும், கடப்பமலர் மாலையும் இரத்தின மணி முடிகளும் தோன்றவும், ஒளிசெய்கின்ற திருவடிகளில் அணிந்துள்ள நூபுரங்கள் கலகல என்ற ஒலி செய்யவும், மாமயிலின் மீது எழுந்தருளி வந்து, உவப்புடன் அடியேனை ஆட்கொண்டு அருள்வீர்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே