115. அரகர சிவன்


ராகம்: நாதநாமக்ரியா / ஷண்முகப்ரியாதாளம்: ஆதி
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவணபவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடுமதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபரவுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவருபெருமாளே

arahara sivanari ayanivar paravimun
aRumuga saravaNa bavanE endru
anudhina mozhithara asurargaL keda ayil
anal ena ezhavidum athi veerA

paripura kamalama dhadiyiNai adiyavar
uLamadhil uRa aruL murugEsA
bagavathi varai magaL umai thara varu guha
paramana dhiru sevi kaLikUra

urai seyum oru mozhi piraNava mudivadhai
urai tharu gurupara uyarvAya
ulagaman alagila uyirgaLum imaiyavar
avargaLu muRuvara munivOrum

paravi mun anudhina manamagizh uRavaNi
paNi thigazh thaNigaiyil uRaivOnE
pagartharu kuRamagaL tharu amai vanidhaiyum
irupudai uRavaru perumALE.

Learn The Song

The song in Nathanamakriya

Raga Nadanamakriya (Janyam of 15th mela Mayamalavagowla (Nishadantya ragam)

Arohanam: N3 S R1 G3 M1 P D1 N3    Avarohanam: N3 D1 P M1 G3 R1 S N3


The song in Shanmugapriya

Raga Shanmukhapriya (56th mela)

Arohanam: S R2 G2 M2 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M2 G2 R2 S


Paraphrase

அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறு முக சரவணபவ என்று அநுதின(ம்) மொழி தர (arahara sivan ari ayan ivar paravimun aRumuga saravaNa bavanE endru anudhina mozhithara ) : Lord Vishnu, Lord BrahmA and Lord SivA who is invoked as arahara siva (Siva, the remover of sins), chant "Oh Shanmukha, Saravanabhava" everyday. அரகர சிவன் = பாவங்களைப் போக்க வல்லவராகிய சிவன்,

அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா (asurargaL keda ayil anal ena ezhavidum athi veerA) : You throw the fiery spear to destroy all the demons (asuras), Oh Great Warrior!

பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா (paripura kamalam adhu adi iNai adiyavar uLamadhil uRa aruL murugEsA ) : With Your grace, Your devotees hold Your lotus feet (that wear the anklets of valour) in their hearts, Oh Murugesa! வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே

பகவதி வரை மகள் உமை தர வரு குக (bagavathi varai magaL umai thara varu guha ) : Oh GuhA, You are the son of Bhagavathi, the great daughter of Mount of HimavAn. வரை மகள் (varai magaL) : daughter of the mountain (Himalaya) or Parvati;

பரமனது இரு செவி களிகூர (guha paramanathu iru sevi kaLi kUra) : SivA's both ears were filled with joy when,

உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர ( urai seyum oru mozhi piraNava mudivadhai urai tharu gurupara ) : You interpreted to Him the meaning of the rare PraNava ManthrA (OM) which is cherished by all, Oh Great Master!

உயர்வு ஆய உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும் (uyarvaaya ulagaman alagila uyirgaLum imaiyavar avargaLu muRuvara munivOrum) : All those countless animate beings in this world, along with DEvAs and Sages, உயர்வு ஆய உலக மன் அலகில உயிர்களும் = சிறப்பு பொருந்திய உலகத்தில் நிலை பெற்றுள்ள கணக்கற்ற உயிர்களும் தேவர்களும் முனிவர்களும்; அளவைகளின் மிகக்குறைந்த அளவு ஓர் அலகு எனப்படும்.

பரவி முன் அநுதினம் மனம் மகிழ் உற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே (paravi mun anudhina manam magizh uRa aNi paNi thigazh thaNigaiyil uRaivOnE) : bow and happily offer worship to You everyday. You reside at lovely ThiruththaNigai which was also worshipped by the Great Serpent VAsuki. பணி (paNi ) : Serpent; அணி பணிதிகழ் = அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய
The serpent Vasuki sustained injuries on its body while serving as a churning rope during the churning of the Milky Ocean by the devas and the asuras. Later, the serpent came to Thiruththanigai to worship Lord MurugA who healed him and removed its pain.

பகர் தரு குற மகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே. ( pagar tharu kuRamagaL tharu amai vanidhaiyum irupudai uRavaru perumALE ) : The famous damsel of KuRavAs, namely VaLLi, and the maiden, DEvayAnai, who was reared under the KaRpaga Tree, flank You on both sides, Oh Great One! தருவமை வநிதை = கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானை;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே