149. ஆதிமகமாயி


ராகம் : ஹம்சானந்திஅங்க தாளம்
(2 + 2 + 1½)
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்தகுமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்கஅருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்களறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்கவுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்தவடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள்வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்தபெருமாளே.

Learn The Song



Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S

Paraphrase

ஆதி மகமாயி அம்பை தேவி (Adhi magamAyi ambai devi) : Primeval Mother, Goddess Ambikai, the radiant (devi)

சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா (dhEvi sivanAr magizhndha Avudaiya mAdhu thandha kumarEsA) : and the one who delights Lord SivA and has the name Aavudaiya Nayaki: that Goddess Parvati delivered You, Oh Kumaresa! ஆ உடைய மாது = பசுவை வாகனமாக கொண்ட பிராட்டி, Devi who resides at Thirupparankundram;

ஆதரவதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே (Adharava dhAy varundhi Adhi aruNEsar endru ALum unaiyE vaNanga aruLvAyE) : You must bless me so that I worship and extol you with melting heart as the Prime Lord with Golden Red complexion, ஆதரவதாய் வருந்தி = அன்பால் மனம் கசிந்து உருகி; ஆளும் = அடியார்களை ஆட்கொள்ளும்;

பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து (bUtham adhuvAna aindhu bEdham idavE alaindhu:) : With this physical body of mine formed by the permutations of the five elements - the earth, water, fire, air and sky, I was wandering all over, பஞ்ச பூதங்களின் வேறுபாட்டால் உருவான இந்த உடலைச் சுமந்துகொண்டு அலைந்து திரிந்து,

பூரண சிவ ஆகமங்கள் அறியாதே (pUraNa sivAgamangaL aRiyAdhE) : without knowing the comprehensive scriptures or Vedas;

பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து (pUNumulai mAdhar thangaL Asai vagaiyE ninaindhu) : thinking constantly about the bejewelled bosoms of women and various passionate desires;

போகம் உறவே விரும்பும் அடியேனை(bOgamuRavE virumbum adiyEnai) : and I longed only for such lustful acts.

நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து (needhayava dhAy irangi nEsa aruLE purindhu) : But You took pity on me, and with Your gracious love,

நீதி நெறியே விளங்க உபதேச நேர்மை (needhineRiyE viLanga upadhEsa nErmai ) : preached to me the Saivite Way and the righteous path in a manner similar to

சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர (sivanAr thigazhndha kAdhilurai vEdhamanthra) : Your preaching of OM, the VEda ManthrA, into the ears of Lord SivA.

நீ தயவதாய் .... வேத மந்த்ர: நீ தயவுடன் இரக்கம் வைத்து, நண்பான அருள்புரிந்து, நீதி மார்க்கமே திகழ, எனக்கு உபதேசமும், அறத்தின் நுண்மையைச் சிவபிரானது விளங்கும் திருச்செவியில் உரைத்த வேத மந்திரத்தவனே (வேதமந்திரம் உரைத்தவனே);

நீல மயில் ஏறி வந்த வடிவேலா (neelamayil ERi vandha vadivElA:) : You came to me mounted on Your blue peacock, Oh VElA!

ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள் தங்கள் வினை தீர (OdhumaRai Aga mansol yOgamadhuvE purindhu UzhiyuNar vArgaL thangaL vinaitheera ) : You break the karmic shackles of those who practise and understand the Yoga as expounded in the oral tradition of vedas and agamas and realize the Ultimate Truth of life and death; ஊழி (Uzhi ) : eternity, end period of the Yuga; ஊழி உணர்வார்கள் (Uzhi uNarvArgaL) : those who realize Eternity or the Eternal Truth;

ஊனும் உயிராய் வளர்ந்து ( Unum uyirAy vaLarndhu) : You integrate fully with their bodies and souls,

ஓசையுடன் வாழ்வு தந்த (Osaiyudan vAzhvu thandha) : and add lasting divine bliss to their lives at ஓசை = கீர்த்தி;

ஊதி மலை மீது உகந்த பெருமாளே.(Udhimalai meedhu ugandha perumALE.) : Udhimalai which is Your favourite abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே