8. புய வகுப்பு
Learn The Song
Paraphrase
Meaning in Tamil By Mrs. Shyamala Ramamurthy, Pune
வசை தவிர் ககன சர சிவகரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன (vasai thavir gagana sara siva karaNa mahaavrutha seela saala varamuni sidhdharai anjal anjal endru vaazhviththu nindrana) : (The Lord's arms) offered refuge saying 'have no fear' to reassure sages and siddha purushas who avoid profanity, who walk in the outer space/sky, who meditate on Lord Shiva, who are virtous and righteous and who have received divine grace, வசை தவிர் = குற்றம் குறை அற்றவர்களும், ககன சர= வானத்தில் சஞ்சரிப்பவர்களும், சிவ கரண மகாவ்ருத = சிவ பக்தர்களும், பெரிய விரதங்களை அனுஷ்டிப்பவர்களும், சீல = சத்ய சீலர்களும், வரமுனி சித்தரை = பல வரங்களை பெற்ற முனிவர்கள், சித்தர்கள், அவர்களை அஞ்சல் அஞ்சல் என கூறி அவர்களுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுப்பது இந்த வாகை புயங்களே.
மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழகாக நாடி வகைவகை கட்டு மருங்குடன் பொருந்து ரீதிக் கிசைந்தன (maNivada mazhalai udaimaNi thapaniya naaN azhagaaga naadi vagai vagai kattu marungudan porundhu reethikku isaindhana) : (The Lord's arms) rested on the hips decorated with a hoop of precious gems (மணிவடம் /maNi vadam), tinkling chain (உடைமணி /udaimaNi), and golden hip band (தபனிய நாண் /dhabaniya naN); தபனிய (dabaniya) : golden; மணிவட மழலை = மணி வடங்களை இடுப்பில் அணிந்த மழலை, உடை மணி = பேசுவது போல் ஓசை எழுப்பும் உடை மணியும், தபனிய நாண் அழகான = பொன் ஒளி வீசும் அரை ஞாணும், நாடி = அவற்றை விரும்பி, வகை வகை கட்டும் = இப்படி வித விதமானவற்றை கட்டி, மருங்குடன் பொருந்தி = இடுப்பில் கட்டியது அவனுக்கு பொருத்தமாக இருந்தன; ரீதிக்கிசைந்தன = அவற்றின் ஒலி அவனின் புய அசைவுக்கு பொருத்தமாக ஒலித்தன.
வருணித கிரண அருணித வெகு தருணாதப சோதி ஆடை வடிவு பெறப்புனை திண் செழும் குறங்கின் மேல் வைத்தசைந்தன (varuNitha kiraNa aruNidha vegu tharuNaathapa jOthi aadai vadivu peRap punai thiN sezhun kuRangin mEl vaitthu asaindhana) : (The Lord's arms) are placed on the strong and healthy thighs that are covered by a red dress, admirably radiant like the rising sun; குறங்கு (kuRangu) : thigh; அருணித (aruNitha) : red; ) வருணித கிரண = வர்ணிக்க முடியாத சூரிய கிரகணங்கள்; ஆதபன் - ஆதவன் - சூரியன்; வருணித வெகு தருணாதப = விவரிக்க முடியாத சூரிய ஒளி; சோதியாடை = அப்படி சூரிய ஒளியை போல் ஒளி வீசும் உடையை, வடிவு பெற புனை = அழகாக அணிந்திருக்கும் முருகனின் புயங்கள், திண் செழும் குறங்கின் மேல் = வலிமையான திண்மை பொருந்திய தொடையின் மேல், வைத்து அசைந்தன.
வளைகடல் உலகை வலம் வரு பவுரி வினோத கலாப கோப மயில் வதனத்து விளங்கும் அங்குசங் கடாவிச் சிறந்தன (vaLai kadal ulagai valam varu bavuri vinOdha kalaaba kOba mayil vadhanaththu viLangum angusam kadaavich chiRandhana) : (The Lord's arms) smartly wield the ankusha on the ferocius and richly plumed peacock which performed the miraculous feat of going round and round the earth surrounded by the seas. வளை கடல் உலகை = சமுத்திரத்தால் சூழப்பட்ட இந்த பூமியை, வலம் வரும் பவுரி = சுற்றி சுற்றி வலம் வந்த, வினோத கலாப கோப மயில் = அந்த அதிசய செயல் செய்த தோகை கொண்ட உக்கிரமான மயிலின், வதனத்து விளங்கும் = முகத்தில் விளங்கும் கோபத்துடன், (அந்த மயில் மேல் ஆரோகணித்து) அங்குசம் கடாவிச் சிறந்தன = அங்ககுசத்தை வீசியது அவனுடைய மேன்மையான புயங்களே.
வரை பக நிருதர் முடி பக மகர மகோததி தீயின் வாயின் மறுக விதிர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன (varai paga nirudhar mudi paga makara mahOdhadhi theeyin vaayin maRuga vidhirth ayil vendri thangu thunga vElaip punaindhana) : (The Lord's arms) hold the sharp, victorious and impeccable lance that break asunder the Krauncha and other mountains, split asura's heads, scorch makara fish by torching the sea; துங்க (thunga) : pure, blemishless, flawless, impeccable; வரை (varai) : mountain; பக (paga) : split or break; விதிர்த்து (vithirthu) : to move; நிருதர் (niruthar) : asuras; வரை பக = கிரௌஞ்சம் முதலான ஏழு கிரிகள் பிளவு பட, நிருதர் முடி பக = அசுரர்களின் முடிகள் சிதற, மகர மகோததி = மகர மீன்கள் நிறைந்த பெரும் கடல், தீயின் வாயில் மறுக = நெருப்பில் சிக்கி தவிக்க, விதிர்த்த அயில் = அசையும் அந்த கூர்மையான, வென்றி தங்கு = வெற்றியை தவிர வேறு ஒன்றையும் காணாத, துங்க வேலைப் புனைந்தன = பரிசுத்தமான வேலாயுதத்தை அந்த வாகை புயங்கள் ஏந்தி நின்றன.
மதியென உதய ரவியென வளைபடு தோல் விசால நீல மலி பரிசைப்படை கொண்டு நின்றுழன்று சாதிக்க முந்தின (madhi ena udhaya ravi ena vaLai padu thOl visaala neelamali parisai padai koNdu nindru uzhandru saadhikka mundhina) : (The Lord's arms) hold a shield which, like the sun and the moon, is round and radiant, is made of hide, is wide and black, and ever ready to spin into victorious action; வளைபடு (vaLaipadu) : bent into circular form, circular; பரிசைப்படை (parisaippadu) : shield, kedayam. மதியென = சந்திரன் போலவும், உதய ரவி என = உதய சூரியனைப் போலவும் ஒளி வீசும், வளை படு = வட்ட வடிவமான, தோல் = தோலால் செய்யப்பட்ட, விசால= விசாலமான, நீல= கரு நீலமான, மலி பரிசைப் படை= கேடயம் என்ற ஆயுதத்தத்தையும், நின்று உழன்று சாதிக்க முந்தின = கையில் ஏந்தி வெற்றி பெற முயன்றன.
மனகுண சலன மலினமில் துரிய அதீத சுகாநுபூதி மவுன நிரக்ஷர மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன (mana guNa chalana malinamil thuriya atheetha sugaanuboothi mavuna nirakshara manthiram porundhi maarbil thigazhndhana) : (The Lord's arms) rests on the chest in chin mudra, with the mind in the transcendental 'turiyateetha' state where the mind is still and unchanging, blemishless and in the fully happy state with no trace of sorrow, immersed in an ocean of bliss. மன குண சலன = சலனம் நிறைந்த மனது, மலினமில் துரிய = ஒரு நிலை இல்லாமல் ஓடுவது போன்ற குணங்கள் இல்லாத யோகியர்கள், நான்காவது நிலையான துரீய நிலைக்கு, அதீத சுகானு பூதி = பரமன், நான் வேறில்லை என்ற, மவுன நிரக்ஷர மந்திரம் = மனம் வாக்கு காயம் அனைத்தும் ஒன்றி நிற்கும் சின் முத்திரை காட்டும் கை இந்த வாகை புயங்களே.
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேக சமூக ராக மதுபம் விழச் சிறு சண்பகம் செறிந்த தாரில் பொலிந்தன (vagai vagai kuzhumi mogu mogu mogena anEka samooha raaga madhupam vizhach chiRu saNpagam seRindha thaariR polindhana) : (The Lord's arms) rests on the closely strung garland of Shanbagam flowers over which swarms of buzzing bees throng, singing various notes; தார் (thaar) : garland; மதுபம் (madhubam) : honey bee; வகை வகை குழுமி = கூட்டம் கூட்டமாக திரண்டு, மொகு மொகு மொகென ஒலி எழுப்பி, அநேக சமூக ராக = பல விதமான இசை ராகங்களுடன், மதுபம் விழ = வண்டுகள் மொய்க்க, சிறு செண்பகம் செறிந்த = சிறு சிறு செண்பக மலர்களால் கட்டப்பட்ட மாலை அணிந்து, தாரிற் பொலிந்தன = அந்த மாலை மீது வைத்த கை இந்த வாகை புயங்களே.
மிசைமிசை கறுவி வெளி முகடு அளவு நிசாசர சேனை தேடி விததி பெறச் சில கங்கணம் கறங்க மீதிற் சுழன்றன (misai misai kaRuvi veLimukad aLavu nisaachara sEnai thEdi vidhadhi peRach chila kangaNan kaRanga meedhiR suzhandrana) : (The Lord's arms) spin upwards reaching up the sky searching wide to locate and destroy the hideouts of Asura army, making the wrist bands onHis hands swirl and clang; முகடு (mugadu ) : peak, top; சில கங்கணம் (sila kangaNam) : a few bracelets, such as those worn on the shoulders, upper arms and the wrists; கறங்க (kaRanga) : making clinking sounds; மிசை மிசை கறுவி = மேலும் மேலும் பகைத்துக் கொண்டு; வெளி முக அளவு = அண்ட சராசங்களில், நிசாசர சேனை தேடி = அசுரர்களின் சேனகளை தேடித் தேடி கண்டு பிடித்து, விததி பெற செய= பரவி இருந்த இடங்கள் அனைத்தையும் சிதறி அடிக்க; விததி = பரந்து இருப்பது; கங்கணம் கறங்க மீதிற் சுழன்றன = அப்போது அந்த புயங்கள் அணிந்த கங்கணங்கள் கண் என ஒலி எழுப்ப மேலே சுழன்றன; கறங்குதல் = ஒலித்தல்;
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பிசாசு போத மிகுதொனி பற்றி முழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன (veruvuva veruva erisori vizhiyuLa bootha pisaasu pOdha migu dhoni patri muzhangu vinju gaNtai vaasikkai koNdana) : (The Lord's arms) clang loudly the bell that scares away the scary ghosts that have fire-spitting eyes; வெருவுவ வெருவ (veruvuva veruva ) : scaring away the scary; வெருவுவ= அச்சமுறுத்தும் (மிருகங்கள்), வெருவ = பயந்து ஓடும் படி, எரிசொரி விழியும் = அனலை கக்கும் கண்களை உடைய, பூத பிசாசுகளும், போது = ஓடிப் போகும்படி, மிகு தொனி பற்றி = பலத்த சத்தத்துடன், முழங்கு கண்டை= கண்டாமணியை இந்த புயங்கள் ஆட்டி, வாசிக்கை கொண்டன= ஒலி எழுப்பின.
விதமிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும் லீலையாக விமல சலத்தினை விண்டிறந்து மொண்டு வீசிப் பொலிந்தன (vidha migu baratha sura vanithaiyar gaNa mElthoRum leelaiyaaga vimala jalaththinai viN thiRandhu moNdu veesip polindhana) : playfully make way for the pure Akasha Ganga, scoop and sprinkle/spray the water on the dancing celestial women adept at various kinds of dances; விதமிகு = விதவிதமாக, பரத = பரத நாட்டியம் ஆடும், சுரவனிதையர் கணம் = தேவலோகத்தை சேர்ந்த வனிதையர்கள் மேல் தொறும் லீலையாக = அவர்கள் மேல் வேடிக்கையாக, விமல சலத்தினை= தூய ஆகாச கங்கை நீரை, விண்டிறந்து மொண்டு = ஆகாயத்திலிருந்து மொண்டு மொண்டு, வீசிப் பொலிந்தன.= ஊற்றியதும் இந்த வாகை புயங்களே.
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மாலை விபுதர் குலக் குலிசன் பயந்த செங்கை யானைக் கிசைந்தன (vitharaNa tharuvin malaridai serugiya koothaLa neeba maalai vibudhar kulak kulisan payandha senkai yaanaik isaindhana) : (The Lord's arms) decorate Indra's daughter Deivayanai's hair with garlands of kadappa flowers interspersed with flowers of the benevolent karpaga tree; குலிசம் (kulisam) : thunderbolt, a weapon held by Indra; குலிசன் (kulisan) : Indra; விதரண தரு (vitharaNa) : tree known for its philanthropic nature, Karpaga tree; விதரண தருவின் = கொடை வள்ளலான கற்பக மரத்தின், மலரிடை செருகி = மலர்களை நடு நடுவே சொருகி, கூதள நீப மாலை = கடம்ப மலர் மாலையை, விபுதர் குல குலிசன்= தேவர்களின் தலைவனான, வஜ்ர படை ஏந்திய இந்திரன், பயந்த செங்கை யானை = பெற்ற பெண்ணான சிவந்த கைகளை உடைய தெய்யானைக்கு, இசைந்தன = இந்த புயங்கள் சூட்டின.
விகசித தமர பரிபுர முளரி தொழா அபிராம வேடர் விமலை தினைப்புன மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன (vikasitha thamara pari pura muLari thozhaa abiraama vEdar vimalai thinaip puna mangai kongaik kaNdu vELaip pugundhana) : at an opportune time, (The Lord's arms) seek to hug the bosoms of the beautiful Valli after worshipping her lotus feet that are adorned with tinkling anklets; விகசித தமர = மலர்ந்துள்ளதும் ஒலி செய்கின்றதுமாகிய, பரிபுர முளரி தொழா = பாதச் சலங்கைகள் அணிந்துள்ள தாமரையன்ன திருவடிகளை வணங்கி, அபிராமி வேடர் விமலை = பரிசுத்தமான அழகு வேடப் பெண், தினைப்புன மங்கை = தினை கொல்லையை காக்கும் வள்ளியின், கொங்கை கண்டு வேளை புகுந்தன= மார்பைப் பார்ப்பதற்காக (அதாவது அவளின் பக்குவ நிலையை அறிய) தக்க சமயம் பார்த்து அணைத்த கைகள் இந்த வாகை புயங்களே. விகசித முளரி (vikasitha muLARI) : lotus in bloom; here, Valli's feet;
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத கோழி வீற விதரண சித்ர அலங்க்ருதம் புனைந்து பூரித்திலங்கின (vidhir tharu samara muRi kara kamala nakaayudha kOzhi veeRa vitharaNa chithra alankrutham punaindhu poorith ilangina) : His hands, which can smash the enemies in a terrifying fight, hold as a beautiful adornment the flag of the rooster that fights entirely with its nails; விதிர்தரு சமரம் (vithirtharu samaram) : fight that sends shivers; விதிர் தரு சமர = நடுங்க வைக்கும் போரில், முறிகர கமல = எதிரிகளை அழிக்க, தாமரை போன்ற கைகள் மற்றும், நகாயுத= காலின் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு போராடுபவனும், கோழி வீற = சேவல் கொடி மேம்பட்டு விளங்க, விதரண சித்ர அலங்க்ருதம் புனைந்து = கொடையில் சிறந்த (முருகன் புயங்கள்) அழகிய அலங்காரம் உடையதானதை தரித்துக் கொண்டு, பூரித் திலங்கின= அழகாக தோற்றம் அளித்தன.
விரகுடை எனது மனதுடன் அகில் பனி நீர்புழு கோடளாவி ம்ருகமத கற்புர குங்குமங் கலந்து பூசித் துதைந்தன (viragudai enadhu manadhudan akil panineer puzhu kOdaLaavi mrugamadha kaRpura kunguman kalandhu poosith udhaindhana) : captivate my cunning mind and smear them (as a paste) on His arms along with agil, panneer and punugu (fragrant substances) and mixed with kasturi, camphor and saffron; விரகுடை எனது மனதுடன்= கள்ளம் கபடம் மிகுந்த எனது மனதுடன், அகில் பனி நீர்புழு கோடளாவி = அகில் பன்னீர் புனுகு போன்ற வாசனை திரவியங்களை (மனதின் நாற்றங்கள் மறையுமாறு) கலந்து, ம்ருகமத கற்புர குங்குமம் கலந்து = கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்ந்த கலவையை, பூசித் துதைந்தன.= தன் வாகை புயங்களில் பூசிக் கொண்டு ஒளிர்ந்தன.
வினைபுரி பவனி தொழுது அழுது உருகிய கோதையர் தூது போக விடு மது பக்ஷண வண்டினம் திரண்டு சூழப் படிந்தன (vinaipuri bavani thozhudhu azhudhu urugiya kOdhaiyar dhoodhu pOgavidu madhu bakshaNa vaNdinam thiraNdu soozhap padindhana) : (The Lord's arms) are filled with swarms of honey-guzzling bees that have been sent as messengers by girls who have become infatuated with Him after witnessing His procession; வினைபுரி பவனி = உனது பவனியை (உலாப்போதலைக்)க் கண்டு, தொழுது அழுது உருகிய கோதையர் = உன்னிடம் காதல் கொண்டு உருகி அழும் மாதர்கள், தூது போக விடு மது பக்ஷண வண்டினம் = தூது விடுத்த தேன் உண்ணும் வண்டுகளின் கூட்டம், திரண்டு சூழப் படிந்தன = (புயங்களின் மேல் உள்ள மாலைகளில்) திரளாக சேர்ந்து மொய்த்தன.
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி தனாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சுரம் தெரிந்து வீணைக்கு இசைந்தன (isaithanil iniya kayisigai gavuda varaaLi dhanaasi dhEsi bayiravi gujjari panjuran therindhu veeNaik isaindhana) : (The Lord's arms) play raagas such as kaisikai, gavuda, varaLi, dhanyasi, bhairavi, etc., on the veena, having fully comprehended the grammar of these raagas; இசைதனில் இனிய = ராகங்களிலேயே இனிமையான, (கைசிக கவுட வராளி தனாசி தேசி பயிரவி குச்சரி = கயிசிகை, கவுடை, வராளி, தன்யாசி, தேஷ், பைரவி, குச்சரி போன்ற ராகங்களின் (கைசிக பண்... பைரவி ராகம்), பஞ்சுரம் தெரிந்து = அவற்றின் ஸ்வரங்களை தெரிந்து கொண்டு, வீணைக்கிசைந்தன = அவரின் வாகை புயங்கள் அவற்றை வீணையில் மீட்டின.
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு காது தோயும் இலகு மணிக்கன விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன (iRudhiyil udhaya ravi gaNa nigarena aaRirukaadhu thOyum ilagu maNik kana vimba kuNdalangaL mEvip puraNdana) : From the Lords's ears dangle heavy, stone-studded golden eardrops, radiant as the dazzling rays from the rising sun, and brush against His arms; இறுதியில் (iRuthiyil) : endless; constant; steady; இறுதியில் உதய ரவி கண நிகரென = விடிகாலையில் தோன்றும் சூரிய கூட்டங்களின் முடிவு இல்லாத / அளப்பற்ற /நிலை பெற்ற பிரகாசத்துக்கு ஒப்பான, ஆறு இரு காது தோயும் இலகும் = ஆறு இரு பன்னிரண்டு காதுகளில் தொங்கும், இலகு = ஒளி வீசும், மணிக்கன விம்ப குண்டலங்கள் = மணிகளாலும் தங்கத்தில் பதித்த வைரங்களாலும் ஒளி வீசும் குண்டலங்கள் , மேவிப் புரண்டன= கச்சிதமாக நீண்டு பொருந்தி விளங்கின. விம்பம் ( vimbam) : radiant;
எதிர்படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ் நாக மேகம் இடிபட மற்பொரு திண் சிலம்படங்க மோதிப் பிடுங்கின (edhir padu nediya tharu adu periya kadaam umizh naaga mEgam idipada maRporu thiN silamb adanga mOdhip pidungina) : The Lord's arms wrestle and uproot strong mountains like masth elephants which attack each other making thundrous sounds and pull out tall trees; எதிர் படு நெடிய தரு = எதிரே தென்படுகிற நீண்ட மரங்களை, அடு பெரிய கடாம் உமிழ் = அழிக்க, அபிரிமிதமான மத நீரை உமிழும், நாக மேகம் இடிபட = அஷ்ட திக்கு யானைகளும் இடி போல் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு, மற்பொரு திண் சிலம்படங்க = பெருத்த ஓசையுடன் மல்யுத்தம் செய்ய, மோதிப் பிடுங்கின = எட்டு திக்கு மலைகளையும் இந்த வாகை புயங்கள் தாக்கிப் பிடுங்கின.தரு அடு (tharu adu) : destroying the tree; சிலம்பு அடங்க(silambu adanga) : to quash/subdue the mountain; கடாம் உமிழ் (kadaam umizh) : spouting masth water, masth elephant; மற்போர் (maRpOr) : wrestling;
எழுத அரும் அழகு நிறம் மலி திறல் இசையாக உதார தீரம் என உரை பெற்ற அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின (ezhu tharum azhagu niRamali thiRal isaiyaaga udhaara theeram ena urai petra adangalum siRandhu saalath thadhumbina) : The Lord's arms are the repositories of valiant acts and benevolence and are inexpressibly beautiful and radiant, எழுதரும் அழகு நிறம் = எழுத்தால் வர்ணிக்க முடியாத அழகும் அதன் ஒளியும், மலி திறல் இசையாக = மேம்பட்ட இசை போல், உதார தீரம் என = அதனுடைய (புயங்களது) வீர தீர செயல்கள் என்று, அடங்கலும் = அதனுள் அடங்கிய நற்பண்புகளும், சிறந்து சாலத் ததும்பியன= மிகச் சிறந்தவை என போற்றப்பட்டன. ( புயங்கள் வீர தீர செயல்கள் மட்டுமல்லாமல் ஈகை குணமும் உடையவை.)
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய மேரு சாதி இனம் என ஒத்து உலகங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன (iruL poru kiraNa iraNiya vada kula paariya mEru jaathi inamena othulagangaL engaNum prakaasiththu nindrana) : The Lord's arms are effulgent that remove darkness, radiate light, appear golden, stand majestically like a group of huge and weighty Meru mountain in the Northern direction; இருள் பொரு கிரண இரணிய = இருளை விலக்குவது, ஒளி வீசுவது, பொன் மயமானது , வடகுல பாரிய = வட திசையில் விளங்குவது, சிரேஷ்டமானது, மிகப் பெரியதுமான, மேரு ஜாதி இனம் என ஒத்து= மேரு மலை கூட்டத்தை ஒத்த வாகை புயங்கள், உலகங்கள் எங்கணும் பிரகாசித்தது நின்றன= ஜோதி போல் உலகெங்கும் பிரகாசத்துடன் ஒளி வீசி நின்றன.இரணம் (iraNam) : gold;
இயன் முநி பரவ ஒரு விசை அருவரை ஊடு அதி பார கோர இவுளி முகத்தவள் கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன (iyan muni parava oruvisai aruvaraiyood athi baara gOra ivuLi mukaththavaL kongai koNda chaNda maarbaip piLandhana) : The Lord's arms tore the chest with huge breasts of the horse-faced demoness KaRkimukhi who lived in the big cave, when the virtuous sage Nakkeerar sang (Thirumurugatruppadai); இயன் முநி பரவ = முத்தமிழ் வேந்தர் நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, ஒரு விசை அருவரை ஊட= அந்த பாடலின் தொனி ஊடுருவி பாய , அதி பார கோர இவுளி முகத்தவள் = திருப்பரங்குன்ற மலை குகையில் இருந்த குதிரை முகம் கொண்ட கற்கி முகி என்ற பூதத்தின், கொங்கை கொண்ட சண்ட மார்பை பிளந்தன = இந்த வாகை புயங்கள் அவள் மார்பை பிளந்தன. இயல் முநி (iyal muni) : virtuous sage; here, Nakkeerar; இவுளி முகத்தவள் (ivuLi mugaththavaL) : horse-faced demoness KaRkimukhi;
இப ரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை மார்பு பீறி அவன் உதிரப் புனல் செங்களம் துளங்கி ஆடிச் சிவந்தன (ibaratha thuraga nisicharar keda oru sooranai maarbu peeRi avan udhirap punal sengaLan thuLangi aadich chivandhana) : The Lord's arms fought and defeated troops on elephants (elephantry), horses (cavalry) and chariots and turned red with anger, having torn the incomparable Surapadman's chest and leaving the battle field soaking red with blood; இபரத துரக நிசிசரர் = யானை குதிரை ரதபடை உடைய அரக்கர்கள், கெட = அழிந்து போக, ஒரு சூரனை மார்பு பீறி = ஒப்பற்ற பலம் வாய்ந்த சூரனின் மார்பை பிளந்து, அவன் உதிரப்புனல் = அவனது ரத்த வெள்ளத்தால், செங்களம் = போர்க்களம் சிவந்த நிறம் அடைந்து, துளங்கி ஆடிப் சிவந்தன= கலங்கும்படி அந்த வாகை புயங்கள் சுழன்று (கோபத்தால்) சிவந்தன.
எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால் மணி மேக ராசி சுரபி அவற்றொடு சங்க கஞ்ச பஞ்சசாலத்தை வென்றன(evai evai karudhil avai avai tharu kodaiyaal maNi mEgaraasi surabi avatrodu sanga kancha pancha saalaththai vendrana) : His arms give whatever treasure the devotees desire and defeat the renowned chintamaNi, pack of clouds, Kamadhenu cow, Shankha Nidhi, Paduma Nidhi and the group of five celestial tress (like karpagam tree) in philanthropy; சங்க / கஞ்ச (நிதி) (shankha / padma (nidhi)) : conch / lotus (treasure) – Two of the Kubera's nine grand treasures were Padma nidhi and shankha nidhi; பஞ்சசாலம் (panchasalam) : group of five; எவை எவை கருதி = அவன் அடியார்கள் எதை விரும்பினாலும், அவை அவை தரு கொடையால் = அவை அனைத்தையும் தரும் கொடை உள்ளம் கொண்ட, மணி = நினைத்ததை தரும் சிந்தாமணி, மேக ராசி சுரபி = மேகங்கள் மற்றும் காம தேனு, அவற்றொடு சங்க கஞ்ச = இதை தவிர, சங்க நிதி , பதுமநிதி இரண்டையும், பஞ்ச சாலத்தை = சந்தானம், தேவதாரம், கற்பகம், மந்தாரம்,பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வ மரங்களை (பஞ்சதருக்கள்), வென்றன= இந்த ஐந்தையும் வென்ற கொடை வள்ளல் இந்த வாகை புயங்களே.
அசைவற நினையும் அவர் பவம் அகலவே மேல் வரு கால தூதரை அடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன (asaivaRa ninaiyum avar bavam agalave mElvaru kaala dhootharai udaiyum appadi angum ingum engum Odath thurandhana) : They protect the devotees who meditate with a focussed mind, remove the karmic effect of repeated births, and chase the messengers of Yama, driving them to run in all directions;
அகிலமும் எனது செயலலது இலையென யான் என வீறு கூறி அறவு மிகுத்து எழும் ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன (agilamum enadhu seyalaladh ilaiyena yaanena veeRu kooRi aRavu miguth ezhum aimpulan thiyangi veezhath thimirndhana) : they quash the five indriyas which arrogantly prance about boasting 'everything is my own action without any assistance from others';
அனல் எழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும் ஏழு பாரும் அசலமும் மிக்க பிலங்களும் குலுங்க ஆலித்து அதிர்ந்தன (anal ezhu dhuvajam udukulam udhira viyOmamum Ezhu paarum achalamum mikka pilangaLum kulunga aalith adhirndhana) : They hold the flag of the fierce rooster which crows angrily, making the galaxy of stars scatter and fall and shake violently the infinite expanse of the sky, the seven worlds, mountains and the nether worlds; உடுகுலம் (udukulam) : group of stars, gaalxy of stars;
அடல் நெடு நிருதர் தளம் அது மடிய வலாரி தன் வானை ஆள அரசு கொடுத்து அபயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன (adal nedu nirudhar thaLamadhu madiya valaari than vaanai aaLa arasu koduth abayam pugundha aNdar ooraip purandhana) : They killed the strong army of the asuras and saved Amaravati, the land of the devas who had sought His refuge, and restored it to Indra to rule over it;
அடவியில் விளவு தளவு அலர் துளவு குரா மகிழ் கோடல் பாடல் அளிமுரல் செச்சை அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன (ataviyil viLavu thaLavu alar thuLavu kuraa magizh kOdal paadal aLi mural chechchai alangal seng kadambu nEsith aNindhana) : They wore with love the leaves of viLa tree growing in the forest, mullai flowers, thulasi, flowers of the kura tree, magizha flowers, white kanthala flowers, pathiri, garland of vetchi flowers over which bees buzz, and the garland of red kadappa flowers;
அரியது ஓர் தமிழ் கொடு உரிமையொடு அடிதொழுதே கவி மாலையாக அடிமை தொடுத்திடு புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன (ariyadhor thamizhkod urimaiyod adithozhudhE kavi maalaiyaaga adimaith thoduththidu punsol ondru nindhiyaamaR punaindhana) : They accepted without any ill remarks the anthology of songs that has been composed in chaste Tamil by this slave who has been his devotee for several births;
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்(azhagiya kumaran umai thiru madhalai bageerathi maadhar vaazhum aRuvar priyap padu kandhan endhai indhra neelach chilambinan) : Handsome Kumaran, Parvati Devi's son, cherished by Ganga Devi and the six Karthikai maidens, my father, resident at Thiruththanigai where Neelotpala flowers grown by Indra;
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன் அநேகன் ஏகன் அபினவன் நித்தியன் அஞ்சல் என ப்ரசண்ட வாகைப் புயங்களே (anubavan anagan ananiyan amalan amOhan anEkan Ekan abinavan niththiyan anjalen prachaNda vaagaip buyangaLE.) : the witness of the emotions in all souls, blemishless, Paramatma not distinct from Jeevatma, without the three malas, without desires, one who manifests as different forms, a single eternal entity – one who is described with all the above attributes and holds his hands in 'abhaya' mudra, indicating refuge to those who surrender to Him.
Comments
Post a Comment