மயில் விருத்தம் காப்பு (சந்தன பாளித)

ராகம் : நாட்டை தாளம்: ஆதி

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்

கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்

கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்

தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.


Learn The Song





Paraphrase

சந்தன பாளித குங்குமம் புளகித சண்பக கடக புயச் சமர சிகாவல ( chandhana paaLitha kunguma puLagitha saNpaga kadaga buya samara sikaavala) : this brave warrior and the rider of peacock,His pleasurable arms smeared with sandal, edible camphor and vermillion, and adorned with a garland of shanbaga flowers and a kaNkaNam or arm band; பாளிதம் (paaLitham) : camphor; பச்சை கற்பூரம்; சமர (samara) : warrior; சிகாவல (sikhavala) : one with peacock as the vehicle, மயில்வாகனா; புளகித (puLagitha) : pleasure-giving;

குமர ஷடாநந சரவண ( kumara shadaanana saravaNa) : the young Kumara, six-faced Shadanana and Saravana,

குரவு அணியும் கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப் பரவுங் (kuravaNiyum kondhaLa baara kiraadha puraathani koNga enapparavum) : husband of the ancient hunter girl Valli with her luscious lock of hair adorned with kura flowers; கொண்கன் (koNgan) : lover, husband; கொந்தளம்/குந்தளம் ( konthaLam/kunthaLam) : lock of hair; கிராதன்(kiraathan) : hunter; புராதநி (purathani) : ancient; Valli is called ancient to indicate that though she was born a hunter girl, she is verily the daughter of Lord Vishnu and had obtained the boon to marry Murugan; கொண்கன் (koNgan) : husband, chief;

கூதள சீதள பாதம் எனக்கு அருள் (koothaLa seethaLa paadham enakkaruL) : Kindly grace me with your cool feet adorned by koothaLa flowers;

குஞ்சரி மஞ்சரி தோய் கந்த க்ருபாகர (kunjari manjari thOy kandha krupaakara ) : Kantha who romances with Valli and Deivayanai; the kind hearted; குஞ்சரம்(kunjaram) : elephant; குஞ்சரி (kunjari) : brought up by elephant, Valli; மஞ்சரி (manjari) : bunch of flowers; here, Deivayanai;

The next lines/words describe Ganesha:

கோமள கும்ப கர அதிப ( kOmaLa kumba karaadhipa ) : chief with a beautiful kalasa in His hands,

மோகரத கர முக சாமர கர்ண விசால கபோல விதான மத ( mOharatha karamuka saamara karNa visaala kapOla vidhaanamadha) : face with an enticing trunk, fan-like ears, wide cheeks with flowing musth water; மோகரத கர முக (mOharatha kara muka) : மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும்;

எந்த மகோதர மூஷிக வாகன (endha mahOdhara mooshika vaahana) : our beloved pot bellied god and rider of mouse,

சிந்துர பத்ம முகச் (sindhura padhmamuka) : with a face red as a red lotus,

சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே. (sivasutha ganapathi vigna vinaayaka dheyva sahOdharanE) : the brother of Ganapati (as described above), the son of Lord Shiva, remover of obstacles (கூதள சீதள பாதம் எனக்கு அருள்)(koothaLa seethaLa paadham enakkaruL)

மயில் தத்துவம்

பிரணவத்தின் தோற்றத்தை போல் இருக்கும் தோகை விரித்தாடும் எழில் காட்சி உடைய மயில் முருகனின் வாகனம். பிரணவ மந்திரமான "ஓம்" உயிர்கள் அறிவை அறிய அநுகூலமாக உள்ள விந்துசக்தியான திருவருளின் வடிவம். உயிரில் "யான், எனது" என்னும் மறைந்திருக்கும் திரிபு காரணத்தால் நமது உயிரில் மறைந்து தங்கி நம் நல்வினை தீவினைக்கேற்ப இயக்கும் பரம்பொரருளை உணர்வதில்லை. நம்முள் மறைந்திருக்கும் மயில் அல்லது திரோதன சக்தி நாம் பக்குவமடைந்தபின் இந்தத் திரையை விலக்கி திருவருட்சக்தி விளங்க செய்யும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே