வேல் விருத்தம் – 7 : அண்டங்கள் ஒருகோடி
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.
Learn The Song
Paraphrase
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி அநந்தம் ஆயினும் மேவினால் (aNdangaL oru kOdi aayinum kulagiri anatham aayinum mEvinaal) : If the millions of universes and countless mountains in the space confront and oppose, மேவினால் — எதிர்த்து வந்தால்;
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல் அறியாது (adaiya uruvip puRam pOvadhu alladhu thangal aRiyaadhu) : the vel pierces and passes through them; it never gets stuck inside;
சூரன் உடலைக் கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும் கடிய கொலை புரியும் அது (sooran udalai sooran udalai kaNdam pada porudhu kaalanum kulaivuRum kadiya kolai puriyum adhu) : it fights with Suran's body and cuts into pieces in a way that scares even Yama with its murderous acts;
செம் கநக அசலத்தை கடைந்து முனை இட்டு கடுக்கின்ற துங்க நெடு வேல் ( sem kanaka achalaththaik kadaindhu munai yittu kadukkindra thunga neduvEl ) : this pure and long lance or vel that has a golden glow and sharpness as though carved out by churning the golden Meru mountain. பொன் மலையாம் மேருமலையை கடைந்தது போன்ற பொன் ஒளியும் கூர்மையையும் கொள்ளும்படி அமைத்ததற்கு ஒப்பான பரிசுத்தமான நீண்ட வேலாயுதம் , கடுக்கின்ற — ஒப்பான;
Exactly, whose 'vel' is this?
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவ அந்தகன் மாயவன் (dhaNdam dhanu thigiri sangu katgam koNda dhaanavaan thagan maayavan) : Lord Vishnu, with the maya swaroopa has a mace called Kaumothaki, saranga bow, Sudarshana discus, Panchajanyam conch, Nandaka sword; He is the destroyer of demons; தானவ அந்தகன் — அசுரர்களுக்கு யமன்;
தழல் விழி கொடுவரி பரு உடல் பல தலை தமனிய சுடிகையின் மேல் (thazhal vizhi kodu varip paru vudal patralai dhamaniya chudigaiyin mEl) : Lying on the many-headed Adisesha whose eyes burn like ember and whose fat body carry curved lines; தமனிய (dhamaniya) : golden; சுடிகை (chudigai) : crown of the head; தமனிய சுடிகை (dhamaniya chudigai) : பொன்னிறமான முடிகளையும் கொண்ட (ஆதிசேடன்) மேல்;
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மங்கையும் பதம் வருடவே (vaNdondru kamalaththu mangaiyum kadal aadai magaiyum padham varudavE ) : with lotus-seated Lakshmi and Bhoodevi, who wears the sea as her dress, caressing the feet of ; வண்டு ஒன்று (vaNdu ondru) : வண்டுகள் பொருத்தும்; வண்டு ஒன்று கமலத்து மங்கை (>vaNdu ondru kamalaththu mangai) : Lakshmi who sits on the lotus flower over which the bees buzz; கடல் ஆடை மங்கை (kadal Adai mangai) : one who wears the sea as the dress, Bhoodevi;
மதுமலர் கண் துயில் முகுந்தன் (madhumalar kaN thuyil mukundhan) : Mukunda மதுமலர் கண் ( madhumalar kaN) : Mukunda whose (lotus) flower like eyes oozing honey are closed in slumber;
மருகன் குகன் வாகைத் திருக் கை வேலே.(marugan guhan vaagai thirukkai vElE) : Murugan, the nephew of Vishnu (as described above) holds the victorious vel in His auspicious hands (which has the qualities described in the first half of the poem).
Comments
Post a Comment