மயில் விருத்தம் – 3 : ஆதார பாதாளம்

ராகம் : சாரங்கா தாளம்: கண்டசாபு

ஆதார பாதாளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.


Learn The Song




Paraphrase

ஆதார பாதளம் பெயர அடி பெயர மூதண்டம் முகடது பெயரவே (aadhaara paathaLam peyara adi peyara moothaNda mukadadhu peyaravE) : When the peacock took its steps, the nether world, which is the foundation of this earth, moved, and the roof of the entire cosmos too moved;

ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர (aadu arava mudipeyara eNdisaigaL peyara) : the heads of Adisesha moved and the (eight elephants bearing the) eight directions moved; அரவம் (aravam) : serpent; here, Adisesha;

எறி கவுள் கிரிசரம் பெயரவே ( eRi kavuL giri saram peyaravE) : the elephants in the earth's eight directions with musth water flowing down their cheeks moved too; கவுள் (kavuL) : the cheeks/jowl of the elephant; கிரிசரம் (giricharam) : mountain elephant;

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் (vEthaaLa thaaLangaLuk kisaiya aaduvaar) : and dances to the beats of fiends;

மிக்க பிரியப்பட விடா விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் ( mikka priyappada vidaa vizhi pavuri gavuri kaNdu uLa magizha viLaiyaadum visthaara nirththa mayilaam ) : which Mother Parvati watches with love and delight and without batting her eye lids. Such is the dance of Murugan's peacock;

மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி மகீதரி கிராத குலி (maadhaanu pangi enu maaladhu sahOdhari maheedhari kiraatha kuli) : She is the sister of Sage Thiruvalluvar; she is the hunter lass, born amidst the mountains; மாதானு பங்கி எனும் மாலது சகோதரி — திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள், மகீதரி — மலையில் பிறந்தவள், கிராதகுலி — வேடர் வம்சத்தில் வளர்ந்தவள், born in the lineage of hunters;
பெற்ற தாயைப் போல் இதமாக ஒழுக்கத்தை போதிப்பதால் திருவள்ளுவருக்கு மாதாநுபங்கி என்கிற பெயர் உண்டு; Thiruvalluvar, considered an avatara of Lord Brahma; mathanubhangi refers to the fact that Valluvar taught righteous conduct with the affection of a mother. Valli is considered as Brahma's sister.

மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த வள்ளி (maa maRai muni kumaari saaranganan thani vandha vaLLi) : She is the daughter of Shiva Muni, skilled in the study of Vedas; She is our Mother Valli, born in a unique way; ; சாரங்கம் (sarangam) : deer;

Once, Lord Vishnu and Mahalakshmi were were busy playing chess and did not notice Sage Durvaasa approaching them. Sage Duvaasa is infuriated and curses them; as a result, Vishnu is born as Siva Muni, and Lakshmi is born as a deer. Sage Siva Muni meditates at Vallimalai. He chances to see the deer, and as a result, the deer gets pregnant and delivers a girl child Valli, whom it discards amidst the Valli creepers.

மணி நூபுர மலர்ப் பாதாரவிந்த சேகரன் (maNi noopura malar paadha aravindha sEkaran ) : He (Murugan) wears Valli's lotus-like feet, adorned with tinkling anklets, on His head;

நேயம் மலரும் உற்பலகிரி அமர்ந்த பெருமாள் (nEya malarum uRpalagiri amarndha perumaaL) : He is seated on Thiruththanigai where Neelotpala flowers dear to Him bloom in plenty

படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே. (padai nirudhar kadagam udaipada nadavu pacchai pasum thOgai vaagai mayilE) : His victorious peacock has green plumes and it breaks and scatters away the army of the asuras. வாகை (vAgai) : victory;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே