மயில் விருத்தம் – 2 : சக்ர ப்ரசண்டகிரி
சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.
Learn The Song
Paraphrase
The first half of the hymn describes the power of the peacock, whose dance can shake cosmic mountains that sustain the planes of the Cosmos. According to ancient texts, the world consists of a circular central continent, Jambudvipa, In the center of which rises Hount Neru. This is surrounded by seven mountain ranges called the Chakravala Range, separated from each other by seven annular or ring-shaped seas. Apart from this, there are mountains in the eight cardinal directions too.
சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி பட்டு (chakrap prachaNda giri muttak kizhindhu veLi pattu) : The strong chakravala mountain tore asunder and was split totally into smithereens (fragments), சக்ரவாளம் என்கிற பெரிய வலிமை உடைய மலை அடியோடு பிளவு பட்டு வெளியில் சிதறவும்,
க்ரவுஞ்ச சயிலம் தகரப் பெருங் கனக சிகரச் சிலம்பும் (kravuncha sayilam thagara perum kanaga sigara silambum ) : the Krouncha mountain got pulverized and the meru mountains with huge golden summits, சிலம்பு (silambu) : mountain;
எழு தனி வெற்பும் அம்புவியும் (ezhu thaniveRpum ambuviyum ) : the seven mountains that were like Suran's sentries, the beautiful earth,
எண் திக்கு தடம் குவடும் ஒக்கக் குலுங்க வரு சித்ரப் பதம் பெயரவே (eN dhikku thadam kuvadum okka kulunga varu chithra padham peyaravE) : the eight mountains along the eight directions shook in unison when the peacock slowly takes tiny steps with its beautiful feet, எண் திக்கு தடம் குவடும் (eN dhikku thadam kuvadum ) : எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும் ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும், முருகனின் மயில் தன் அழகிய கால்களுடன் அடி எடுத்து மெதுவாக வந்தவுடனேயே ;
சேடன் முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் (sEdan mudi thiNdaada aadal puri venchoorar thidukkida nadikku mayilaam) : and dances, the Adisesha's hoods tremble and the fierce asuras shake with shock.
பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும் கவுரி பத்ம பதம் கமழ் தரும் பாகீரதி சடில யோகீசுரர்க்கு (pakkaththil ondru padu pacchaip pasum gavuri padhmap padham kamazh tharum bageerathi sadila) : Lord Shiva's lock is adorned by Ganga and the fragrance coming from green-complexioned goddess Parvati who occupies His left side;
உரிய பரம உபதேசம் அறிவிக்கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தச்சுவாமி ( yogeesurarkku uriya parama upadhEsam aRivikaikku sezhum saravaNaththiR piRandha oru kandha suvaami) : to give Him a befitting (pranava mantra) upadesam, Lord Kandaswamy, who took birth in Saravana lake,
தணிகைக் கல்லாரகிரி உருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.(thaNigai kallaara giriyuruga varu kiraNa marakatha kalaapaththil ilagu mayilE) : comes on a radiant emerald plumed peacock so that the kallara moutain melts. கல்லாரம் (kallaram) : red kuvalaiflower; செங்குவளை, a flower dear to Murugan. As Thiruththani abounds in kuvalai flowers, it is called kallara giri. .
Comments
Post a Comment