மயில் விருத்தம் – 8 : செக்கர் அளகேச
செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.
Learn The Song
Paraphrase
முன்னொருகாலத்தில் அழியாத்தன்மை பெற தேவரும் அசுரரும் மந்தரமலையை மத்தாக்கி வாசுகி எனும் பாம்பினைக் கயிறாக்கிப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலிபொறாத நாகத்தின் வாயினின்றும் கொடியவிடம் கொப்பளித்து பெருகி, கிரகங்கள் சுழலும் இந்த மண்டலத்தை எரிக்கலாயிற்று. அந்த ஆலகாலத்தை சிவன் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி நீலகண்டன் ஆனார். அந்த அரவினைப் பிடித்து, தன் அலகினால் குத்தி, இரு கால்களால் மிதித்துத் தன் சிறகுகளை விரித்து எடுத்து உதறும் வல்லமை பெற்றது முருகனது வாகனமாகிய மயில்!
செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை சிந்தப் ( sekkar aLakEsa sikarathna puri raasi nirai sindha ) : The precious stones on the crests of rows of hoods of Vasuki, which appeared red and opulent like Kubera's wealth. were scattered அளகேசன் (aLagesan) : Kuberan; ராசி (raasi) : collection, row; நிரை (nirai) : crowd; ராசி நிரை(raasi nirai) : rows of groups(of hoods of Vasuki);
புராரி அமிர்தம் திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள் தீ விஷங் கொப்புளிப்பச் ( puraari amirtham thirumbap piRandhadhena aayiram bahuvaaygaL theevishang koppuLippa) : causing everyone to get worried whether the alahala poison, which Shiva had swallowed effortlessly as though it was a nectar, had reappeared, when the thousand split mouths of Vasuki spewed fiery poison; புராரி (purari) : destroyer of Tripura, Shiva; புராரி அமிர்தம் (puraari amirtham ) : alahala poison, which came out along with nectar when the milky ocean was churned, and which Lord Shiva swallowed and stored in His neck;
சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல சங்கார கோர நயனத் தறுகண் வாசுகி ( chakragiri soozhavaru maNdalangaL sakala sangaara gOra nayana thaRukaN vaasuki) : Vasuki, the serpent king with fierce eyes who can destroy the entire universe made of various worlds surrounded by Chakravala mountain,
Mount Meru the sacred mountain with five peaks is considered the center of the metaphysical and spiritual universes. It is said to be surrounded by eight circular mountain ranges. The first seven are made of gold, but Chakravala, the eighth circular mountain is made of iron.
பணாமுடி எடுத்து உதறும் ஒரு சண்டப் பரசண்ட மயிலாம் ( paNaa mudi eduth udharumoru chaNdap parachaNda mayilaam) : Murugan's peacock is so powerful that it can shake the hoods of Vasuki.
விக்ரம கிராதகுலி புனமீது உலாவிய விருத்தன் ( vikrama kiraathakuli punameedhu ulaaviya viruththan ) : Murugan, who took the form of an old man, and went to the millet field where Valli belonging to the clan of brave hunters grew,
திருத்தணிகை வாழ் வேலாயுதன் (thiruththaNigai vaazh vElaayudhan) : He resides at ThiruththaNigai and holds the lance weapon,
பழவினைத் துயர் அறுத்து எனை வெளிப்பட உணர்த்தி அருளித் ( pazha vinai thuyar aRuththu enai veLippada uNarththi aruLi) : He snaps away the karmas and sorrows of past births, and reveals my true nature to me,
துக்க சுக பேதம் அற வாழ்வித்த கந்தச்சுவாமி வாகனமானது (dhukkasuka bEdhamaRa vaazhviththa kandha suvaami vaahanam aanadhu) : He made me live in a transcendental state beyond pleasure and sorrow; the peacock is the vehicle of this Kandaswamy,
ஓர் துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குல துஷ்டர் நிஷ்டூர மயிலே.(Or thuraga gaja rathakataka vikatathada nirudhar kula dhushtar nishtoora mayilE) : This renowned and huge peacock destroys the evil asuras who have got unrivalled cavalry, war elephants, chariot cars, and infantry.
Comments
Post a Comment