மயில் விருத்தம் – 7: தீரப் பயோததி

ராகம் : பீம்பளாஸ் தாளம்: கண்டசாபு

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்

படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்

கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.


Learn The Song




Paraphrase

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும் செகதலமும் நின்று சுழலத் ( dheera payOdhadhi (ka)dhikkum aagaayamum jagathalamu nindru suzhala) : The seas, the eight directions, the sky, and the earth started spinning fast;

திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத் தீக்கொப்புளிக்க வெருளும் ( thigazhgindra mudimavuli sidhaRivizha venjikai thee koppuLikka veruLum) : the crown on the thousand hoods scattered down and the crests bubbled out fire;

பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம் பதைபதைத்தே நடுங்கப் (baarap paNaamudi ananthan mudhal aravelaam padhaipadhaiththE nadunga) : the serpents with dense and multiple hoods, including the Adisesha, were frightened and trembling, and

படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு பச்சை ப்ரவாள மயிலாம் (padarchakra vaaLagiri thugaLpada vaiyaaLivaru pachchai pravaaLa mayilaam) : the sprawling wide chakravaLa mountain became fragmented when the green and coral-red plumed peacock strode;

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த கலசக் கொங்கையாள் (aara prathaapa puLagitha madhana paateera amirtha kalasak kongaiyaaL) : She has renowned, delightful and radiant bosoms that are like the nectar-filled pots, smeared with sandalwood pastes;

ஆடு மயில் நிகர் வல்லி அபிராம வல்லி பரமாநந்த வல்லி சிறுவன் (aadumayil nigarvalli abiraama valli para maanandha valli siRuvan) : She is like the peacock which dances with its plumes spread; she is immensely beautiful; she is immersed in Bliss; He is the son of Goddess Parvati described thus;

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குரு தரு திருத்தணி கைவேள் (gOra thrisoola thriyambaka jataadhaara gurutharu thiruththaNigai vEL) : He is the gift of Lord Shiva who holds the fierce Trishul or trident, carries three eyes, has matted dreadlocks and is the Preceptor in this world; He (Murugan) is the god of ThiruththaNi;

கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி குடி புகுத நடவு மயிலே. (kodiya nisicharar udharam eripugudha vibudhar padhi kudipugudha nadavu mayilE) : He wields the peacock to kindle fire in the guts of the cruel demons and enable the devas to enter and dwell once again in the Amaravati city

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே