வேல் விருத்தம் 10 : வலாரி அலலாகுலம்
வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.
Learn The Song
Paraphrase
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே (valaari alalaakulam ilaadh agalavE) : To remove the worries of Indra, the enemy of Valasura,
கரிய மால் அறியும் நாலு மறை நூல் வலான் (kariya maalaRiyu naalu maRai nool valaan) : the cloud-colored Vishnu and Brahma, the master of the four vedas, வலாரி (valaari) : enemy of Valasura; Indra;
அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் (alaivu ilaan asivilaan malaivilaan) : Lord Shiva who has no weariness or fatigue, is indestructible and has meru mountain as a bow,
இவர் மநோலய உலாசம் உறவே (ivar manOlaya ulaasam uRavE) : In order that these three gods get peace of mind and become happy,
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலை இலா (ulaa varu kalOla makaraalaya jalangaLum ulOga nilai neer nilai ilaa) : Making the earth and seas, whose water surround the earth and where makara fish reside, unstable, உலாவி வரும் அலைகளையும் மகர மீன்களையும் உடைய இடமாகிய கடலின் நீரும் பூமி நிலையுற்று இல்லாத வண்ணம்; கல்லோலம் – அலைகள்;
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல் உலாவிய நிலாவிய கொலைவேல் (olaavoli nisaacharar ulOgamadhelaam azhal ulaaviya nilaavu kolai vEl) : the asuras fought, making ugly noises, and the Lord's murderous lance (vel) burned away the world of asuras. தகாத கூச்சல் செய்யும் அசுரர்கள் வாழ்ந்த உலகமெல்லாம் நெருப்பு உலவும் படி உலவி வந்த கொலை வேல் எது என்றால் ; ஒலா ஒலி (olaavoli) : inappropriate noise; அழல் (azhal ) : fire;
சிலா வட கலா விநொதவா (silaavada kalaa vinodhavaa) : can be interpreted in two ways:
1) வட சிலா கலா விநோதவா (vada silaa kalaa vinOthavaa ) : At the northern kanthamathana giri, proficient in all arts; வடக்கே கந்தமாதனகிரியில் சகல கலா வினோதனாய்
2) சிலா வட கலா விநோதவா (silaa vada kalaa vinOthavaa ) : Has mountains as His abode, loves the northern language Sanskrit, மலைகளுக்கு உரியவனாய், வடகலை முதலிய கலைகளில் மிக்க விருப்பம் உடையவனாய்
சிலி முகா விலொசனா (silimukaa vilochanaa) : One who has assumed the form of beetle, has compassionate eyes;
Murugan had assumed the form of a bee and hovered over the flowers on Parvati's hair when she was listening to Shiva explaining the meaning of Pranava mantra.
சின சிலா தணி விலா ( china silaa thaNi vilaa) : can again be interpreted in 2 ways:
1) சி(ன்)ன சிலா தணி விலா (china silaa thaNi vilaa) : small thiruththaNi mountain and holding a bow; சிறிய மலையாகிய திருத்தணியை உடையவனும், வில்லை ஏந்தினவனும் சிலா(sila) : mountain; வி(ல்)லா (vi(l)la) : holding the bow;
2) சின தணி சிலா (sina thaNi sila) : the mountain ThiruththaNi which cooled Murugan's temper; சினம் தணிந்த இடமாகிய திருத்தணி மலையை இருப்பிடமாக கொண்டவனும்; சின(ம்) தணி (sin(m) thaNi) : that which calmed down the anger;
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக (silaa malar elaa madhiya mOdhi madhi sElozhiya sEvaga) : the warrior who fights with the asuras such that the flowers in the ponds crashed against the moon, and the blemish on the moon in the form of 'sEl' fish is wiped out; (the mountains of thiruththaNigai are so high that the flowers in its pond touch the moon in the sky); வள்ளிமலையில் (சுனையில் உள்ள) மலர்கள் எல்லாம் சந்திரனை தொட்டு மோதி அதனால் சந்திரனிடமிருந்த சேல் மீன் போன்ற களங்கம் விலகும் படி திறமையை காட்டிய, சிலா (silaa ) : mountain; here, Vallimalai; மதி ( mathi ) : moon; The dark spot on the moon or is blemish is often said to be in the form of a hare. Here, the blemish is said to be in the form of a 'sEl' fish;
சராப முகில் ஆம் (saraaba mugil aam) : Lord Vishnu with the complexion of a cloud like the saraba bird or the calf of an elephant; சரபம் (sarabam) : calf elephant or saraba bird; முகில் (mugil) : cloud;
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன் (vilaasa kaliyaaNa kalai sEra pasu mElaimulai mEviya vilaasa agalan ) : Once (at the Vallimalai), He (Vishnu, described as above) united with broad-chested and auspicious Lakshmi, who had the form of a doe (female deer). As a result, appeared a life (Valli) whose bosoms the broad-chested Murugan hugged, விலாசமான மங்களகரமான (இலக்குமி) மானை முன்பொரு கால் புணர அப்பொழுது தோன்றிய உயிராகிய வள்ளியின் கொங்கையை விரும்பி அணைந்த அழகிய மார்பை உடையவனும் மேலை (melai) : once upon a time, in the past; கலை (kalai) : Lakshmi in the form of 'kalaimaan' or doe/female deer;
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.(vilaazhi inil aazhi agal vaanil anal aaravidu vEzham iLainyan kai vElE) : He is also the younger brother of Ganesha who sprayed water with His trunk and cooled the sea and the wide sky; the vel in His Hands performed the miraculous feats described in the first half of the poem. தனது துதிக்கை உமிழும் நீரால் கடலிடத்தும் பரந்த ஆகாயத்தும் உள்ள சூட்டை நிரம்ப நீக்கும் யானையின் தம்பியுமான முருக வேளின் திருக்கரத்து வேலாயுதமே. விலாழி (vilaazhi) : trunk of an elephant; வேழம் (vEzham) : elephant; வேழம் இளைஞன்(vEzham iLainyan) : younger to the elephant god;
Comments
Post a Comment