வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு

ராகம் : சாரங்கா தாளம்: கண்டசாபு

வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்

வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்

அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்

தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்

போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.


Learn The Song




Paraphrase

வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும் (vEthaaLa boothamodu kaaLi kaaLathrigaLum veguLuRu pasaasa gaNamum) : Murugan's army of genies, demons, poisonous fanged naga serpents and angry group of phantoms, பிசாசு, பூதம் இவைகளுடன் காளி, காளாத்ரி என பெயர் பெற்ற விஷப் பற்களை உடைய பாம்பு போல பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்று கோபம் கொள்ளும் பேய் கூட்டங்களும்

வெம் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே ( ven kazhugudan kodi parundhu sem buvanaththil vempasi ozhikkavandhE) : (along with) fierce eagles, crows and hawks -- (the vel)came to relieve hunger on this fertile earth;

ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம் (aadhaara kamadamum gaNapaNa viyaaLamum adakkiya thadak giriyelaam) : all the mountains that are supported by the turtle and the thousand-headed serpent Adisesha that bears the earth; மந்த்ரமலையை தாங்கின ஆமையும் கூட்டமான படங்களை உடைய பாம்பும் விசாலமான பெரிய மலைகளில் எல்லாம் கமடம் (kamadam) : tortoise;

அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்த வைவேல் (alaiya nadamidu nedun dhaanavar niNaththasai arundhi purandha vaivEl) : the sharp lance chased the demons, feasted on their flesh and protected the devas; அலைந்து நடமாடும் பெரிய அசுரர் கூட்டங்களின் மாமிச சதைகளை உண்டு தேவர்களை காத்த கூரிய வேல் (எது என்றால்)

தாது ஆர் மலர்ச் சுனைப் பழநி மலை (thaathaar malar chuani pazhanimalai ) : Pazhani Hills in which pollen-filled flowers and lakes abound, மகரந்த பொடிகள் நிறைந்த மலர்களை தரும் சுனைகளை உடைய பழனி மலை

சோலை மலை தனிப் பரங்குன்று ஏரகம் (sOlaimalai thanipparang kundrEragam) : Solaimalai, the unique Thirupparankundram, Eragam

தணிகை செந்தூர் இடைக்கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில் (thaNigai senthoor idaikkazhi aavinankudi thadam kadal ilangai adhanil) : Thiruththanigai, thiruchendur, Idaikazhi, Lanka surrounded by the seas,

போது ஆர் பொழில் கதிர்காமத் தலத்தினைப் புகழும் அவர் அவர் நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் ( pOdhaar pozhil kadhirkaamath thalaththinai pugazhum avaravar naaviniR pundhiyil amarndhavan) : Kadirkamam with beautiful flower gardens: devotees who extol these places, He sits on their tongues and their minds;

கந்தன் முருகன் குகன் புங்கவன் செம் கை வேலே.( kandhan murugan guhan pungavan sengkai vElE) : such is Kantha, Muruga, Guha, Purity personified; the vEl or lance in His hands is the wondrous weapon that performed all the feats described in the first half of the poem.)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே