மயில் விருத்தம் – 4 : யுக கோடி

ராகம் : மனோலயம் தாளம்: ஆதி

யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.


Learn The Song




Paraphrase

யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம் உதித்தது என்று அயன் அஞ்சவே ( yugakOdi mudivin maNdiya chaNda maarutham udhiththadhendru ayan anjavE ) : 'Has the cyclone that sweeps across at the end of the Yugas appeared now?', so feared Brahma,

ஒரு கோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் பொன் குவடு உறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து (orukOti aNdar aNdangaLum paathaaLa lOgamum ) : Millions of celestial worlds, nether worlds, and golden-peaked mountains got demolished when the peacock strided across,

இரு விசும்பில் பறக்க விரிநீர் வேலை சுவறச் (poR kuvaduRum vegu kOti malaigaLum adiyinil thagarndh iru visumbiR paRakka virineer) : and the dust flew into space, the wide expanse of sea water went dry, சுரர் நடுக்கங் கொளச் சிறகை வீசிப் பறக்கு மயிலாம் (vElai suvaRa surar nadukkam koLa chiRagai veesip paRakku mayilaam) : and the celestials trembled when the peacock spread its wings and flew.

நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நர கேசரி முராரி திருமால் நாரணன் (naga kOdi koNdavuNar nenjam piLandha nara kEsari muraari thirumaal) : with countless nails, Narasimha clawed and tore the chests of asuras; He is Murari, the slayer of the demon Mura; He is the cloud-complexioned Narayana; நர கேசரி -= நர சிங்கம்

கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன் (naaraNan kEsavan seedharan dhEvakee nandhanan mukundhan marugan) : He slayed the demon Kesi; He wears Sri or Lakshmi on His chest; He is Devaki's son Krishna; He is the bestower of Mukti or liberation; You are His nephew; முகு என்றால் மோக்ஷம், மோக்ஷத்தை அருளுவதால் அவன் முகுந்தனாகிறான்.

முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம் முகில் உலவு நீலகிரி வாழ் முருகன் (mukakOdi nadhikaran kurugOdi anavaratham mugil ulavu neelagiri vaazh murugan) : He was borne by the thousand-faced Ganga and He resides at ThiruththaNi where white clouds constantly float across in the sky; குருகு (kurugu) : whiteness;

உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட மூரிக் கலாப மயிலே.( umai kumaran aRu mugan nadavu vikadathada moorik kalaapa mayilE) : He is Pavati/Uma's son; He plies the handsome, reputed and strong peacock (that has all the attributes described in the first half of the poem). விகடம் (vikatam) : beauty; தடம் (thadam) : reputation; மூரி (moori) : strong;

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே