கந்தர் அநுபூதி 6-10

Learn From Guruji



ராகம் : கௌளை
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? ..என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.6
thiNiyaana manO chilai meeth- una thaaL,
aNiyaar aravinDa- marumbu mathO
paNiyaa ena vaLLi paDam paNiyum,
thaNiyaa athi mOha Dayaa paranE6

Would thy beautiful lotus-like feet bloom in my heart that is hard as a stone? You have so much unquenchable love for Valli that you show reverence to her feet and ask her, "What service can I do for you?". (meaning, with so much compassion that You display, is it any wonder that that Your lotus feet has gracefully bloomed on my hard heart.)

கல் போன்று இறுகிய என்னுடைய நெஞ்சத்தில், உனது அழகிய தாமரை போன்ற தாள் மலருமோ! (மலர்வதற்கு அருள் புரிவாயாக) ‘நான் என்ன பணி செய்ய வேண்டும்’ என்று கேட்டு, வள்ளியின் பாதங்களைப் பணியும், மற்றும் வள்ளி மீது தணியாத அன்பு கொண்ட எல்லையற்ற பரிவின் உறைவிடமுமான பெருமானே!

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.7
keduvaay mananE gathi kEL karavaathu,
iduvaay vadivEl iRaithaaL ninaivaay
chuduvaay nedu vEDanai thooL padavE,
vidivaay viduvaay vinai yaavaiyumE7

Oh mind, you are leading a wasteful life! I will tell you how you can redeem yourself. Whatever you have, do not hide it, but share it with others, while meditating on the feet of Vadivelan who holds a radiant vel in His hands. To pulverize the agony (which is the result of birth itself) that has been haunting you for long, give up all deeds which arise from your attachment (to persons and worldly possessions)!

“ஓ மனமே, (உண்மை தன்மையில்லாததும், விரைந்தழியும் இயல்பும் கொண்ட இந்த உலக விஷயங்களை உண்மையென்றுக் கருதியதால்), நீ கெட்டு வீணே ஒழிகின்றாய். இப்பொழுது, இதிலிருந்து மீட்சி பெற்று முக்தியை அடையும் வழியைக் கூறுகிறேன், உன்னிப்பாகக் கேட்பாயாக: ஒளித்து வைக்காமல் அன்புடன் தானம் செய்வாயாக; கூரிய வேலை ஏந்திய முருகப் பெருமானின் தாமரைப் பாதங்களை தியானித்திருப்பாயாக. (இவ்வாறு நீ செய்தால், கண்டிப்பாக) யுகாந்திரங்களாக உன்னை தொடர்ந்து துன்புறுத்திவரும் இப்பிறப்பு-இறப்பு துயரத்தை பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக; மேலும், (புண்ய-பாபம் எனப்படும்) அனைத்துக் கர்மங்களிலிருந்தும் வெகு சீக்கிரத்தில் விடுபடுவாய்.

ஆசைகளும், பேராசைகளுமே நெஞ்சத்தை (சுயநலமாக்கி) சுருங்கச் செய்கிறது. மனதை உலகப் பொருள்களின் நினைவில் மூழ்கிடாமல் தடுத்திட வேண்டும். இதற்கு மிகச்சிறந்த மாற்று மருந்தாக தானம், மற்றும் இறைதியானம் ஆகிய இரண்டையும் செயல்முறை பயிற்சியாக அருணகிரிநாதர் பரிந்துரைக்கிறார். சொத்து, கல்வி, திறமை, ஞானம் போன்ற எதையும் தானமாகக் கொடுக்கலாம். இறைவன் மீது மிக்க பக்தியுடன் அவரையே நினைத்தவண்ணம், தானமாகக் கொடுக்கப்படும் பொருளைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்காமல், தானம் கொடுக்கப்பட வேண்டும். கர்மங்களைக் களைந்திட தானம், பிறப்பிறப்பை இல்லாமல் செய்திட தியானம்.

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.8
amarum pathi kEL akam aam enum ip-,
bimaram keda mey- poruL pEsiyavaa
kumaran giri raaja kumaari magan,
chamaram poru thaanava naasaganE8

Oh Kumara, You removed the illusion by removing the attachment to the town I live in, my kinsmen, the concept of "I" and taught me the essence of Eternal Matter. You are forever young; You are the son of Goddess Paarvathi, daughter of the king of the (Himaalaya) mountain, and the warrior who annihilated the warring demons (including Soorapadman) in battle!

Because of Murugan's spiritual guidance, Saint Arunagirinathar could rid himself of the delusion/maya that bound him to his native place, relatives and his mortal body. Suran symbolizes the three 'malas'. Only Murugan who annihilated Suran can destroy the 'malas' in us.

எம்பெருமானே, இவ்வுடலை ‘நான்’ என்றும், என் உறவினரை ‘எனது’ என்றும், எண்ணும் என் மதிமயக்கம் நீங்கும்படி தாங்கள் எனக்கு மெய்ப்பொருளைப் பற்றி விளக்கிப் பேசியதை என்னென்று சொல்லுவேன்! குமரப் பெருமானே! ஓ (இமயமலையின் அரசனான) இமவானின் புதல்வியின் (பார்வதியின்) மைந்தனே! தங்களை எதிர்த்துப் போரிட்ட அசுரர்களை நாசம் செய்தவனே!

 இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் உன்னுடையதென்று நினைப்பது பிரமை (மதிமயக்கம்). அவற்றின்மேல் பற்று வைத்தால், நீ துன்பப்படுவாய், துக்கப்படுவாய். பற்றற்றவனே சுகமாய் இருப்பான். ஆகவே, நீ பற்றற்று சுகமாய் இரு.
தான் இந்த உடல் என்றும், குடும்பம், சொத்து சுகங்கள் அனைத்தும் ‘தன்னுடையது’ என்பது மதிமயக்கம், ' உன்னுடைய குடும்பம், சொத்து, மற்றுமனைத்தும் உன்னுடையதல்ல; அழியக்கூடிய இந்த சரீரம் ஆனந்த-ஸ்வரூபமான ஆத்மாவின் உறைவிடம். உண்மையில் ‘நீ’ (பிரம்மம் எனும்) ஆத்மாவே,' என்று அருணகிரிநாதருக்கு குருவால் கொடுக்கப்பட்ட வாய்மொழியாக செய்யப்பட்ட அறிவுரை.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.9
mattoor kuzhal mangaiyar maiyyal valai,
pat- toosal padum paris- onR- ozhivEn
that- toodaRa vEl sayilath- theRiyum,
nittoora niraakula nirbhayanE9

Oh Lord, when will I escape from the fate of my mind swinging listlessly, driven by passion for women, whose hair is adorned with fragrant and honey-trickling flowers? You are the worry-free, fearless and angry lord who hurled the lance, which pierced and penetrated the kraunca-hill without any obstruction! ஊ(ஞ்)சல்( oo(nj)al ): swing;

தேன் சொறியும் வாசனைப் பூக்களைச் சூடும் மங்கையரின் மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல்போல் என் மனம் ஊசலாடி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து நான் என்றுதான் விடுபடுவேன்? க்ரௌஞ்ச பர்வதத்தை துளைத்துச் செல்லுமாறு தன் வேலை எய்திய கடுமையானவரும், துன்பமற்றவரும், பயமற்றவருமான வேலாயுதப் பெருமானே!

எப்படி க்ரௌஞ்ச பர்வதத்தின் உள்ளே செல்லும் பாதைகளில் சென்று மாட்டிக்கொண்டவர்கள் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தனரோ, அப்படியே ஒரு வலைக்குள் அகப்பட்டுக் கொண்ட எவராலும் அவ்வளவு எளிதில் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள இயலாது. எப்படி கந்தனின் வேல் மட்டுமே அப்பர்வதத்தை துளைத்துத் தூள்தூளாக்கியதோ, அப்படியே கடவுளின் கிருபையால் மட்டுமே ஒருவன் தன்னை மோக வலையிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலும்.

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.10
kaar maa misai kaalan varil kalapath-,
thErmaa misai vanD- ethira- paduvaay
thaar maarpa valaari thalaari enum,
soormaa madiya thodu vElavanE10

Oh Lord! When Yama comes on a dark bull to take away my life, kindly come before me on Your peacock that has beautiful plumage. Your chest is adorned with garlands, and You hurled the lance and slayed the demon Soorapadman, who is the enemy of Indra's abode! வலாரி( valaari ): enemy of the demon Valan, Indra; தலாரி (thalaari) : enemy of Indra's (s)thala or Amaravathi;

(என் உயிரை எடுத்துப்போக) யமதர்ம ராஜா தன் கரிய எருமை வாகனத்தில் வருவாராயின், அழகிய தோகைகளை உடைய உனது தெய்வீக மயில் வாகனத்தில் ஏறி வந்து, எனக்குக் காட்சி தந்து அருள்வாய்! ஓ வேலவனே! எப்பொழுதும் வெற்றி மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் திருமார்பை உடையவனே! 'வலாரி' எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் [ஒளிந்திருந்த மாமரம்] அழிந்துபோகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே!
கார் மா மிசை காலன் = கரிய எருமை வாகனத்திலமர்ந்து வரும் அதிபயங்கர யமன்; கலபத்து ஏர் மாமிசை கந்தன் = அழகிய தோகைகளை உடைய மயில் வாகனத்திலமர்ந்து வரும் கந்தன்;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே