188. அல்லி விழியாலும்


ராகம் : தர்பாரி கானடாதாளம்: ஆதி
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத்தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச்சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற்கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக்குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற்றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத்தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.

Raga Darbari Kanada (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R2 G2 M1 P D1 N2 S    Avarohanam: S D1 N2 P M1 P G2 M1 R2 S

Learn The Song



Paraphrase

அல்லி விழியாலும் முல்லை நகையாலும் (alli vizhiyAlu mullai nagaiyAlum) : With their eyes that look like lotus, and rows of teeth that appear like a string of jasmine, தாமரை இதழ்போன்ற கண்ணாலும், முல்லையரும்பை நிகர்த்த பல்லாலும்,

அல்லல் பட ஆசைக் கடல் ஈயும் அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் (allal pada Asai kadal eeyum aLLa inidhAgi naLLiravu pOlum uLLa vinaiyAr) : the harlots, whose minds are dark as the night, and who push me into a sea of lusty desire that yields sweet scoops of pleasure, but eventually leads to sorrow, and துயரத்தையடையும்படி, ஆசையைக் கடல் போலத் தருகின்றவர்களும், அள்ளியெடுக்கலாம் போன்ற இனிதாக அமைந்து, நடு இரவு போல் இருள் உள்ளதான செய்கைகளை உடையவர்களுமாகிய பொதுமாதர்களும்

அத் தனம் ஆரும் இல்லும் இளையோரும் (ath dhanam Arum illum iLaiyOrum) : the house plush with riches, and all my young children, அந்தச் செல்வம் நிறைந்த வீடும், மக்களாகிய இளைஞர்களும்,

மெல்ல அயலாக வல்லெருமை மாயச் சமனாரும் எள்ளி (mella ayal Aga vall erumai mAya samanArum eLLi ) : slowly get distant from me when Yama, the mystical one, mounted on the hefty buffalo, comes jeering at me, மெல்ல வேறாகும்படி வலிய எருமைமீது வருகின்ற, மாயத்தில் வல்ல இயமன் என்னை இகழ்ந்து,

எனது ஆவி கொள்ளை கொளும் நாளில் (enadhu Avi koLLai koLu nALil) : to snatch my life away on the final day of my life,

உய்ய ஒரு நீ பொற் கழல் தாராய் (uyya oru nee poR kazhal thArAy) : (at that time) You must give me Your matchless golden feet for my salvation!

தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் (thollai maRai thEdi illai enu nAthar) : The Old Scriptures (VEdAs) searched in vain for the Supreme everywhere; and to that Lord SivA, பழமையான வேதங்கள் தேடிப் பார்த்து, யாரை காணமுடியவில்லையென்று முறையிடுகின்றதோ அந்த சிவபெருமானுக்கு,

சொல்லும் உபதேசக் குருநாதா (sollum upadhEsak gurunAthA) : You preached, Oh Great Master!

துள்ளி விளையாடு புள்ளி உழை நாண எள்ளி (thuLLi viLaiyAdu puLLi uzhai nANa eLLi) : The deers romping in VaLLimalai were all put to shame by her beauty; துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி

வன மீது உற்று உறைவோனே (vana meedhutr uRaivOnE) : and You went to that VaLLi and stayed with her in the forest!

வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ (vallasurar mALa nallasurar vAzha) : The strong demons were destroyed and the virtuous DEvAs were saved

வல்லை வடிவேலைத் தொடுவோனே (vallaivadi vElaith thoduvOnE) : when You forcefully threw Your Spear! விரைவில் கூரிய வேலாயுதத்தை விடுத்தவரே!

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு (vaLLipadar sAral vaLLimalai mEvu) : In the sides of the mountain, there are plenty of VaLLi creepers, and there is always a drizzle at Mount VaLLimalai, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற சாரலுடன் கூடிய, வள்ளிமலை மீது எழுந்தருளியிருக்கும்

வள்ளிமண வாளப் பெருமாளே (vaLLimaNa vALap perumALE. ) : You reside on that hill along with Your consort, VaLLi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே