189. ஐயுமுறு நோயும்



ராகம் : மோகனம்தாளம்: ஆதி
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக்கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற்புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
செய்யபுய மீதுற்றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமுத்தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.

Learn The Song



Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

சுருக்கவுரை: கோழையும், அத்துடன் சேரும் நோய்களும், மோக மயக்கமும், ஆசையைத் தூண்டுகின்ற மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து பொறிகளும், அவைகளின் சூழ்ச்சிகளும், பற்பல கல்வியும் மற்ற கலைகளும் ஆகிய இந்த சேற்றினைத் தாண்டாது, துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், மனை வாழ்க்கையையே விரும்புகின்ற ஆசையும், பொய் சற்றும் நீங்காத இந்த உடம்பை வளர்க்கின்ற உயிரானது உய்யும்படியான சிவயோகத்தை அடியேன் மேற் கொள்ளாமல், இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசி துன்பத்தை அடைகின்ற அடியேனை பிறவித்துயரைத் தீர்க்கும் உமது திருவடியிற் சேர்ந்தருளுவீராக.

ஐயும் உறு நோயும் மையலும் (aiyum uRu nOyum maiyalum) : The phlegm, the diseases that it causes, the lust, (ai) : phlegm, மையல் (maiyal) = lust, மோகம்;

அவாவின் ஐவரும் உபாயப் (avAvin aivarum ubAya) : the deceitful sensory organs that increase desire, ஆசைகளை எழுப்பும் ஐம் பொறிகளும், அவற்றின் சூழ்ச்சிகளும்; உபாயம் = சூழ்ச்சிகள்;

பலநூலின் அள்ளல் கடவாது துள்ளியதில் மாயும் உள்ளமும் ( pala nUlin aLLal kadavAdhu thuLLi adhil mAyum uLLamum) : the mind that gets attracted by several erotic literatures and unable to extricate itself from the mire, அள்ளல் (aLLal) : muddy slush;

இல் வாழ்வைக் கருதாசை (il vazhvaik karudhAsai ) : and enamored by family life,

பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே (poyyum agalAdha meiyyai vaLar Avi uyyum vagai yOghaththu aNugAdhE) : and engaged in raising the body filled with falsehood, yet I do not seek yOgic ways which can offer salvation to my soul, பொய்யும், நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் பிழைக்கும் படியான நல்ல யோக வழிகளையும் (நான்) அணுகாமல் ; மெய் (mey) : body;

புல்லறிவு பேசி அல்லல் படுவேனை நல்ல இரு தாளிற் புணர்வாயே (pullaRivu pEsi allal paduvEnai nalla iru thALiR puNarvAyE) : Kindly offer the refuge of thy feet to me, who speaks only of trivial matters and suffer enormously. புல் = ஈனம்; புல் அறிவு பேசி = இழிவான அறிவுப் பேச்சுகளைப் பேசி,

மெய்ய பொழில் நீடு தையலை மு(ந்)நாலு செய்ய புய மீதுற்று அணைவோனே (meyya pozhil needu thaiyalai mun nAlu seyya buya meethutru aNaivOnE) : You are Truth incarnate! Once, in the grove (at VaLLimalai), You embraced VaLLi ardently with Your twelve fair shoulders! மெய்ய! (meyya!) : மெய்ப்பொருளே! the ultimate True Substance; பொழில் (pozhil) : grove; மு(ந்)நாலு (munnalu) : three times four or twelve; தையல் (thaiyal) : Beauty, fairness, gracefulness, a woman; பெண், அழகு;

வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ (veLLai ibam ERu vaLLal kiLai vAzha ) : To liberate the clan of Indra who mounts the white elephant AirAvadham, வெள்ளை யானைமீது ஏறுகின்ற வள்ளலாகிய இந்திரனுடைய சுற்றத்தவராகிய தேவர்கள் வாழும் பொருட்டு,

வெள்ள முது மாவைப் பொருதோனே (veLLa mudhu mAvaip porudhOnE) : You fought with SUran who stood rooted as an old mango tree in the sea! சமுத்திரத்தில் முதிய மாமரமாக நின்ற சூரபன்மனுடன் போர் புரிந்தவரே! வெள்ளம் (veLLam) : water – here, sea; மா (maa) : the demon Suran in the form of mango tree;

வைய முழுதாளும் ஐய! மயில் வீர! (vaiyyamuzhu dhALu maiyamayil veera) : You rule the entire world! You are the valiant warrior who mounts the Peacock!

வல்ல முருகா முத்தமிழ் வேளே (valla murugA muththamizh vELE) : You are MurugA having an abode at Thiruvallam! You are the Master of the three branches of Tamil! திருவல்லம் என்ற தலத்தில் வாழும் முருகப் பெருமானே! இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்த் தெய்வமாக விளங்கும் செவ்வேள் பரமரே! வேள் என்றால் அரசன்/தலைவன், வேளிர் குலத் தலைவன்;
வள்ளி மீது காதல் புரிந்து, குறவர்களோடு போர் புரிந்து வென்று, வள்ளியை மணம் செய்து கொண்ட இடம் தான் வள்ளி மலையாகும். வள்ளி நாயகியார் அவதரித்து சக்தி பீடமாக திகழும் வள்ளிமலையிலிருந்து 14 கிமீ தொலைவில் திருவலம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படும் இத்தலம் 'நிவா' நதியின் கரையிலே அமைந்திருக்கிறது. இக்கோயிலின் கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தி சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது. முன்னொரு காலத்தில் இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் உள்ள 'காஞ்சனகிரி' என்ற மலையிலிருந்து சுவாமிக்கு தீர்த்தம் கொண்டு வருவதை தடுத்த 'கஞ்சன்' என்ற அசுரனுடன் நந்தியம்பெருமான் போரிட்டு அவனை அழித்ததை நினைவூட்டும் வகையில் உள்ளது.

வள்ளி படர் சாரல் வள்ளி மலை (vaLLipadar sAral vaLLimalai ) : On the slopes of the mountain (Vallimalai) where numerous VaLLi creepers spread; சாரல் (saaral) : mountain slope; வள்ளி படர் = வள்ளிக் கிழங்கின் கொடி படர்கின்ற;

மேவு வள்ளி மணவாளப் பெருமாளே. (mEv u vaLLi maNavALap perumALE.) : where VaLLi, Your consort lives, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே