200. தூதாளரோடு


ராகம் : சஹானாதாளம்: 7½
2½ + 1½ + 1½ + 2
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபடமறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியிலிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகரமடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறைபெருமாளே.
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலிபசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள்புரிவாயே

Learn The Song



Raga Sahana (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 P M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 S


Paraphrase

உலகாயத வாழ்க்கையில் ஈடுபடும் நாம் பல சமயத்தில் எவ்வித மன கட்டுப்பாடும் பக்குவமும் தெளிவான சிந்தனையும் இன்றி தகாத வார்த்தைகளை பேசி விடுகிறோம். இதனை அருணகிரியார் நமக்கு நினைவு படுத்தும் வகையில் 'விதரண நா தான் இலாத பாவி' என்று தன்னைத்தானே சாடிக் கொள்கிறார். இறை சிந்தனையும் உயர்ந்த நோக்கமும் நீங்கிய, வெறும் இலாப நஷ்ட கணக்கு மட்டும் உள்ள, வியாபாரத்தனமான சாரமற்ற பேச்சுக்களை பேசும் நம்மை குறிக்கும் வகையில் 'பசு பாச வ்யாபார மூடன்' என்று தன்னை நொந்துக் கொள்கிறார்.

Suran was a powerful demon who could chase away Yama, Vishnu and Indra, yet was vanquished by Lord Murugan.

தூதாளரோடு காலன் வெருவிட (thUthALar Odu kAlan veruvida ) : Yama, with all his messengers, gets scared and runs away,

வேதா முராரி ஓட ( vEthA murAri Oda ) : Brahma and Vishnu run away,

அடு படை சோரா வலாரி சேனை பொடி பட (adu padai sOrA valAri sEnai podi pada) : the powerful and deadly army of IndrA became weary, and was shattered to pieces; வலாரி (valAri) : Indra, the enemy of the asura called Vala(n);

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என (maRai vELvi sOmAsimAr sivAya nama ena) : the venerable sages, who perform penances and the Soma Yagna (sacrifice to the Moon) defined in the scriptures, chanted 'namasivaya' சோமாசிமார் – சோமயாக முதலியன செய்யும் பெரியோர்கள்

மா மாய வீர கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே ( mA mAya veera kOramudan ikal cUr mALa vElai Evum vayaliyil iLaiyOnE) : while You, the Young Lord seated in VayalUr, wielded the 'vel' that killed the demon Suran, who fought the war bravely and ferociously in many mystic ways;

Saint Arunagirinathar describes the spectacular verdant forests of Viralimalai, where waterfalls abound. He prays to Lord Murugan who resides here, to bless Him so that he becomes a speck on the Lord's feet.

கூதாள நீப நாக மலர் மிசை (kUthALa neepa nAka malar misai) : Over the flowers like kUthALam, kadappa and gamboge (surapunnai),

சாதாரி தேசி நாமக்ரியை முதல் கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை ( sAthAri thEsi nAmakriyai muthal kOlAla nAtha geetha mathukaram adar solai) : around which the beetles hum musically in various majestic melodies like sAdhAri (PanthuvarALi), thEsi (Desh) and nAmakriyai (NAthanAmakriyai) in the dense groves;

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு ( kUr Aral thEru(m) nArai maruviya kAn ARu ) : wild rivers abounding in lamprey (Aral) fish which is sought by the storks, கூர் ஆரல் ( kUr Aral) : group of Aral fish; தேரும் நாரை (thEru(m) nArai ) : searching storks; கான் ஆறு (kAn Aru) : wild river, காட்டாறு; கூர் ஆரல் தேரும் – மிகுதியாக ஆரம் மீன்களை ஆய்ந்து தேடுகின்ற; நாரை மருவிய – நாரை என்ற நீர்ப்பறவைகள் பொருந்திய;

பாயும் ஏரி வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. (pAyum Eri vayal payil kOnAdu cUzh virAli malai uRai perumALE.) : flowing lakes and paddy-fields abound in this country called kOnAdu in which is situated the mountain VirAlimalai, and You are seated here, Oh Great One!

வேதாளன் ஞான கீ(ஹீ)னன் விதரண நா தான் இலாத பாவி அநிஜவன் ( vEthALan njAna keenan vitharaNa nA thAn ilAtha pAvi anijavan) : I am devilish, lacking true knowledge; I am a sinner who is imprudent in speech; I am totally untruthful; விதரண நா(க்கு) (vitharaNa na(kku)) : discreet tongue;

வீண் நாள் படாத போத தவம் இலி (veeN nAL padAtha pOtha thavam ili ) : I do not possess either the knowledge or divine blessing to utilize my days without wasting them; போதம் (botham) : knowledge;

பசு பாச வ்யாபார மூடன் (pasu pAsa vyApAra mUdan) : I am a fool who whiles away the time speaking inconsequential matters and lacks the awareness of Pati or God; உயிரைப் பற்றியும், உலகப்பற்றுக்களைப் பற்றியுமே பேசிப் பொழுது போக்குகின்ற அதாவது பதிஞானம் (இறைவனைப் பற்றிய அறிவு) இல்லாத மூடன் ஆகிய நானும்

யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே (yAnum unathu iru seer pAtha thULiyAki naraku idai veezhAmalE suvAmi thiruvaruL purivAyE) : (despite all these shortcomings), will I too be blessed with the privilege of becoming a speck on Your two hallowed feet, Oh Lord, and get saved from falling into hell with Your Grace?

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே