217. மதியால் வித்தகனாகி

ராகம் : பூர்விகல்யாணிதாளம்: கண்டசாபு (2½)
மதியால்வித் தகனாகி
மனதாலுத் தமனாகிப்
பதிவாகிச்சிவஞான
பரயோகத்தருள்வாயே
நிதியேநித்தியமேயென்
நினைவேநற்பொருளாயோய்
கதியேசொற் பரவேளே
கருவூரிற்பெருமாளே.

Learn The Song




Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

மதியால் வித்தகனாகி (madhiyAl viththaganAgi) : I should become a wise person by virtue of my intellect.

மனதால் உத்தமனாகி (manadhAl uththamanAgi) : my mind should be always morally upright,

பதிவாகிச் சிவஞான (padhivAgi sivagnAna) : My mind should be firmly rooted in the knowledge of SivA. சிவஞான பதிவாகி = சிவ ஞானத்தில் என் மனம் ஊன்றுவதாகி,

பரயோகத்து அருள்வாயே (parayOgath tharuLvAyE) : You must kindly grant me the method of attaining the great yOgA! மேலான யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக

நிதியே நித்தியமே என் நினைவே (nidhiyE niththiyamE enninaivE) : You are my Treasure! You are immortal! You are the object of my meditation!

நற் பொருளாயோய் (naR poruLAyOy) : You are the greatest and eternal bliss!

கதியே சொற் பரவேளே (gathiyE soR paravELE) : You are my final refuge! You are the Lord praised by one and all! என் புகலிடமே! எல்லாராலும் புகழப்படும் மேலான செவ்வேளே சொல் (sol) : praise;

கருவூரிற் பெருமாளே.(karuvUriR perumALE.) : You have Your abode at KaruvUr, Oh Great One!

ஆண்டவா! அறிவைக் கொடு. அந்த அறிவை வைத்து தவறு செய்யாமல் நல்லது மட்டும் செய்யும் உத்தமனாக்கு. உத்தமமான உள்ளத்தில் உன் நினைவைக் கொடு. அந்த நினைவினால் மேலான யோகநிலையில் என்னை நிலை நிறுத்து. ஆண்டவா! என் செல்வமும் நீ! என்றும் நிலைத்திருக்கும் அருளும் பொருளும் நீ! என் நினைவும் நீ! பேரின்பப் பொருளும் நீ! எனக்கு கதியும் நீ! உலகம் போற்றும் பெரும்பொருளும் நீ! கருவூரில் இருக்கும் முருகப் பெருமாளே!
(Source)

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே