266. நீதான் எத்தனையாலும்


ராகம் : ஸ்ரீரஞ்சனி தாளம்: திச்ர ஏகம்
நீதானெத் தனையாலும்
நீடூழிக் க்ருபையாகி
மாதானத் தனமாக
மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே
வீராசற்குணசீலா
ஆதாரத் தொளியானே
ஆரூரிற் பெருமாளே.

Learn The Song



Raga Sriranjani (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

கேளாமல் கொடுப்பது தர்மம்; கேட்டுக் கொடுப்பது தானம். கேட்டுப் பெறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத எனக்கு, கேளாமல் நீ கொடுக்க வேண்டுவது ஒன்று உண்டு. அது தான் உன்னை என்னுள் அறியும் ஞானம். அருள் ஒளி வடிவமாக இருக்கும் முருகனை 'நீ எவ்விதத்திலாவது நீண்ட ஊழிகாலம் வரை என்மேல் தயைபுரிந்து கருணை வடிவமான உன் பாதங்களை தானமாக கொடுத்து அருளுவாயாக' என்று உருகும் பாடல்.

நீ தான் எத்தனையாலும் நீடுழி க்ருபையாகி (nee thAn eththanaiyAlum needUzhik kripaiyAgi) : You are the One who, in all conceivable ways, remains Graceful till the very end of the universe;

மா தானத் தனமாக மா ஞான கழல் தாராய் (mAdhAnath thanamAga mAnyAnak kazhal thArAy) : Bless me with the best charity that is your Your lotus feet, the seat of the Greatest Knowledge! சிறந்த அருட்கொடைப் பொருளாக அடியேனுக்கு சிறந்த சுத்தஞானம் எனும் உன் தண்டையம் புண்டரீகம் தந்தருள்வாய்.

வேதா மைத்துன வேளே (vEdhA maiththuna vELE) : You are the proud brother-in-law of BrahmA (who is the son of Vishnu, and Valli is Vishnu's daughter as well)! பிரம்மன் திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவன்; சிவமுனிவராயிருந்த திருமாலுக்கும், அழகிய மானாய்த் திரிந்த லட்சுமிக்கும் மகளாகத் தோன்றியவள் வள்ளி. எனவே பிரம்மன், வள்ளிக்குச் சகோதர முறையாவான். ‘மதுபக் கமலாலயன் மைத்துன வேளே’ — தசையாகிய

வீரா சற்குண சீலா (veerA sath guNaseelA) : You are valorous! You are morally and ethically upright;

ஆதாரத்து ஒளியானே (AdhAraththu oLiyAnE) : You shine brightly in all the seven chakras! ஏழு ஆதாரங்களிலும் ஒளியாய் நிற்பவனே! ‘மூலாதாரத் திருத்தலமாகிய ஆரூரில் பேரொளியாய் விளங்குபவனே’ என்றும் பொருள் கொள்ளலாம்.
Chakra refers to basic energy centers in the body. Chakras are wheels of light or subtle energy, transmitting and receiving life-force energy into or out of the body.

ஆரூரில் பெருமாளே.(ArUril perumALE.) : You have Your abode at ThiruvArUr, Oh Great One!சப்த விடங்கத் தலங்களில் ஒன்று தான் திருவாரூர் தியாகராஜர் கோவில். சிவபெருமான் ஆடிய சப்த தாண்டவங்கள் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 'விடங்கம்' என்பதற்கு உளியால் செதுக்கப்படாதது என்று பொருளாகும். இக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் மூலவர்கள் சுயம்பு லிங்கங்களாகும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே